Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

மழை காலங்களில் ஃப்ரீசரில் பனிக்கட்டி உருவாகும் பிரச்னையா? இந்த டிப்ஸை டிரை பண்ணுங்க!

Freezer Ice Mystery : மழை காலங்களில் மின்சாதன பொருட்கள் அதிக பாதிப்பை சந்திக்கின்றன. குறிப்பாக ஃப்ரீசரில் அடிக்கடி பனிக்கட்டி உருவாகும் பிரச்னையை பலர் எதிர்கொள்கிறார்கள். உண்மையில் ஃப்ரீசரில் பனிக்கட்டி உருவாவதற்கு காரணம் என்ன? அதனை தவிர்ப்பது எப்படி என பார்க்கலாம்.

மழை காலங்களில் ஃப்ரீசரில் பனிக்கட்டி உருவாகும் பிரச்னையா? இந்த டிப்ஸை டிரை பண்ணுங்க!
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 18 Aug 2025 21:14 PM

மழைகாலங்களில் (Monsoon) வீடுகளில் உள்ள எலக்ட்ரானிக் பொருட்கள் அதிக பாதிப்பை சந்திக்கின்றன. குறிப்பாக ஃபிரிட்ஜ் (Fridge) அதிக பாதிப்பை சந்திக்கின்றன. இந்த நேரத்தில் ஃப்ரீசரில் அடிக்கடி உறைந்து பனிக்கட்டியாவதாக மக்கள் குறைபட்டுக்கொள்கின்றனர். இதனால் அதிக மின் பயன்பாடு எடுத்துக்கொள்கிறது. இதனால் கரண்ட் பில் அதிகரிக்கும். மழைக்காலத்தில் காற்றில் ஈரப்பதம் கணிசமாக அதிகரிக்கிறது. நீங்கள் ஃப்ரீசர் கதவை மீண்டும் மீண்டும் திறக்கும்போது, வெளியில் இருந்து ஈரப்பதம் உள்ளே செல்கிறது.  இந்த ஈரப்பதம் ஃப்ரீசரின் குளிர்ந்த மேற்பரப்பில் படிந்து அது வெகு விரைவில் பனிக்கட்டியாக மாறுகிறது. இதனை எளிய முறையில் சரி செய்யலாம். இந்த கட்டுரையில் ஃப்ரீசரில் பனிக்கட்டி உருவாவதற்கு காரணம் என்ன அதனை எப்படி ? தவிர்ப்பது எப்படி என்று பார்க்கலாம்.

ஃப்ரீசரில்  ஏன் அதிக பனிக்கட்டி உறைகிறது?

மழைகாலங்களில் காற்றில் ஈரப்பதம் கணிசமாக அதிகரிக்கிறது. இந்த நிலையில் ஃப்ரீசரையோ அல்லது ஃபிரிட்ஜையோ அடிக்கடி திறந்து மூடும்போது வெளியில் இருந்து ஈரப்பதம் உள்ளே செல்கிறது. இந்த ஈரப்பதம் ஃப்ரீசரில் மேற்பரப்பில் படிந்து பனிக்கட்டியாக மாறுகிறது. இது ஃப்ரீசரின் செயல்பாடுகளை அதிகரிப்பதோடு மின்சாரத்தை அதிக அளவில் பயன்படுத்துகிறது.

இதையும் படிக்க : பிரிட்ஜ் சுத்தம் செய்ய இதை பண்ணுங்க.. 5 நிமிடத்தில் பளபளப்பு நிச்சயம்..!

ஃப்ரீசரை எந்த முறையில் பயன்படுத்த வேண்டும்?

இப்போதெல்லாம் ஃபிரிட்ஜ்களில் இதனை தவிர்க்கும் விதமாக பனிக்கட்டி உருவாகாத வகையில் தொழில்நுட்பத்துடன் கிடைக்கிறது. அத்தைக ஃப்ரீசர்களில் டிஃப்ராஸ்ட் மோட் என்ற ஆப்சன் உங்களுக்கு கிடைக்கும். மழைகாலங்களில் இந்த மோடை பயன்படுத்தும் போது, ஃப்ரீசரில் படியும் பணிக்கட்டி தானாகவே உருகும். இதனால் உங்களுக்கு எந்த பிரச்னையும் இருக்காது. ஆனால் இந்த ஆப்சன் இல்லாத பழைய ஃபிரிட்ஜ்களில் ஐஸ் கட்டி படிவதை தவிர்ப்பது சவாலானது.  இதனை தவிர்க்க வாரத்திற்கு ஒருமுறை ஃபிரிட்ஜை ஆஃப் செய்து சில மணி நேரங்களுக்கு கதவை திறந்து வைக்க வேண்டும். இதன் பிறகு பனிக்கட்டிகள் உறையும். பின்னர் துணியால் அந்த பகுதியை நன்கு துடைத்த பிறகு பயன்படுத்த வேண்டும்.

இந்த முறையால் கிடைக்கும் நன்மைகள்

  • இந்த முறையை பின்பற்றுவது ஃப்ரீசரின் குளிர்ச்சி சிறப்பாக இருக்கும்.
  • உணவுப்பொருட்கள் நீண்ட நேரம் ஃபிரெஷ்ஷாக இருக்கும்.
  • மின் நுகர்வு குறைவாக இருக்கும்.
  • இதனால் ஃபிரிட்ஜின் ஆயுள் நீண்டதாக இருக்கும்.

இதையும் படிக்க : மழைக்காலத்தில் சமைக்கும் பொருளை நாசம் செய்யும் ஈரப்பதம்.. பாதுகாப்பது எப்படி..?

மனதில் கொள்ள வேண்டியவை

ஃபிரிட்ஜின் கதவை அடிக்கடி திறப்பதை தவிர்க்கவும்.

காற்று செல்லாத வகையில் அதிகமான பொருட்களை ஃபிரிட்ஜில் அடைக்க வேண்டாம்.

ஈரமான பொருட்களை நேரடியாக ஃபிரிட்ஜில் வைக்க வேண்டாம்.

எளிதாகச் சொன்னால், மழைக்காலத்தில் ஃபிரிட்ஜை சரியான முறையில் இயக்குவதும், அவ்வப்போது சுத்தம் செய்வதும் மிகவும் முக்கியம். இதைச் செய்வதன் மூலம், பனிக்கட்டி  ஏற்படும் பிரச்சினையும் இருக்காது, மேலும் உங்கள் ஃபிரிட்ஜ் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் சீராக இயங்கும்.