Refrigerator Cleaning Tips: பிரிட்ஜ் சுத்தம் செய்ய இதை பண்ணுங்க.. 5 நிமிடத்தில் பளபளப்பு நிச்சயம்..!
How to Clean a Refrigerator: குளிர்சாதன பெட்டியை சுத்தம் செய்வது அவசியம். முதலில், குளிர்சாதன பெட்டியின் பிளக்கை அகற்றி, உள்ளே இருக்கும் பொருட்களை வெளியே எடுக்கவும். பேக்கிங் சோடா மற்றும் வெதுவெதுப்பான நீரைப் பயன்படுத்தி ரேக்குகள் மற்றும் அலமாரிகளை சுத்தம் செய்யவும். பிடிவாதமான கறைகளுக்கு வினிகர் பயன்படுத்தலாம். கெட்ட வாடை வந்தால், பேக்கிங் சோடாவை வைக்கலாம்.

வீட்டை அழகாக மாற்ற, ஒவ்வொரு விஷயத்திலும் தனி கவனம் செலுத்துவது மிக மிக முக்கியம். சில நேரங்களில் வீட்டில் இருக்கும் சில மின்சார சாதனங்கள் பல மாதங்களாக சுத்தம் செய்யப்படாமல் இருக்கும். இவை, வீட்டின் அழகை கெடுப்பது மட்டுமின்றி, அது விரைவாக பழுது அடைவதற்கான வாய்ப்புகளை தரும். இதுபோன்ற சூழ்நிலையில், நம் வீட்டின் சமையலறையில் (Kitchen) இருக்கும் குளிர்சாதன பெட்டியையும் (Refrigerator) பெரும்பாலான நேரங்களில் நாம் கவனிப்பது கிடையாது. இதை சரிவர சுத்தம் செய்வது முக்கியம். அதன்படி, இந்த டிப்ஸை பயன்படுத்தி சில நிமிடங்களில் உங்கள் குளிர்சாதன பெட்டியை சுத்தம் செய்யலாம். இவை குளிர்சாதன பெட்டியை விரைவாக சுத்தம் செய்வது மட்டுமின்றி, உங்களது ஆரோக்கியத்திற்கு நல்லது.
ALSO READ: ஸ்டீல் பாத்திரங்களை பயன்படுத்துகிறீர்களா? இந்த 5 உணவுகளை தவிருங்கள்!
குளிர்சாதன பெட்டியை சுத்தம் செய்வது எப்படி..?
குளிர்சாதன பெட்டியில் உள்ள அழுக்கானது உணவைக் கெடுப்பதோடு, உடல்நலப் பிரச்சினைகளையும் ஏற்படுத்துகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், நீங்கள் அழுக்கான குளிர்சாதன பெட்டியை எளிதாக சுத்தம் செய்யலாம். இதற்காக, முதலில் குளிர்சாதன பெட்டியின் பிளக் சொறுகப்பட்டுள்ள ஸ்விட்சை ஆஃப் செய்துவிட்டு பிளக்கை அகற்ற வேண்டும். இதற்குப் பிறகு, முழு குளிர்சாதன பெட்டிக்குள் இருக்கும் அனைத்தையும் காலி செய்யுங்கள். குளிர்சாதனை பெட்டிக்குள் இருந்து வெளியே வைக்கும் பொருட்கள் விரைவாக கெட்டுபோகும் என்றால், அதை முந்தைய நாட்களில் காலி செய்து கொள்ளுங்கள்.




ரேக் மற்றும் பாக்ஸ் சுத்தம்:
குளிர்சாதன பெட்டியை காலி செய்த பிறகு, ரேக் மற்றும் தக்காளி வைக்கும் பாக்ஸ்களை வெளியே எடுக்கவும். டிராயர்கள் மற்றும் அலமாரிகளை சுத்தம் செய்ய, ஒரு ப்ளாஸ்டிக் அல்லது பாத்திரத்தில் வெதுவெதுப்பான நீரை ஊற்றி, அதில் சிறிது பேக்கிங் சோடாவை சேர்த்து பேஸ்ட் போல் செய்து கொள்ளவும். இப்போது, பாத்திரம் கழுவும் ஸ்பாஞ்ச் உதவியுடன், குளிர்சாதன பெட்டியின் உள்ளே உள்ள அனைத்து பாகங்களையும், ரேக் மற்றும் பாக்ஸ்களையும் இந்த பேஸ்ட்டால் நன்கு சுத்தம் செய்யவும்.
பேக்கிங் சோடா மற்றும் வினிகர் பேஸ்ட்:
மேலே சொன்ன கலவையை கொண்டு சுத்தம் செய்ய பின்னரும், பிடிவாதமான கறை இருந்து, அது போகாமல் இருந்தால், அந்த கறையின் மீது சிறிது வினிகரை தடவி, ஒரு ஸ்பாஞ்ச் உதவியுடன் சுத்தம் செய்யுங்கள். மேலும், வினிகர் அதில் இருக்கும் பாக்டீரியா மற்றும் கிருமிகளைக் கொல்லவும் செய்யும். தொடர்ந்து, பேக்கிங் சோடா மற்றும் வினிகரை பேஸ்ட் செய்து, கதவு மற்றும் குளிர்சாதன பெட்டியின் பிற பகுதிகளை சுத்தம் செய்யலாம். இது, குளிர்சாதன பெட்டிக்கு பளபளக்க செய்யும்.
ALSO READ: இயற்கையான முறையில் பற்கள் வெண்மையாக வேண்டுமா..? உப்பை இப்படி பயன்படுத்தினால் பளபளக்கும்!
குளிர்சாதன பெட்டியிலிருந்து கெட்ட வாடையா..?
உங்கள் வீட்டில் பல் துலக்கும் பேஸ்ட் இருந்தால் அதனை கொண்டும் குளிர்சாதன பெட்டியை சுத்தம் செய்ய பயன்படுத்தலாம். உங்கள் குளிர்சாதன பெட்டியில் கெட்ட நாற்றம் வீசினால், இந்த கெட்ட வாசனையைக் குறைக்க, நீங்கள் ஒரு பாத்திரத்தில் பேக்கிங் சோடாவை வைத்து சில மணி நேரம் குளிர்சாதன பெட்டிக்குள் வைக்கலாம். இவை, குளிர்சாதன பெட்டிக்குள் இருக்கும் கெட்ட நாற்றத்தை விரட்டும்.