Whiten Teeth Naturally: இயற்கையான முறையில் பற்கள் வெண்மையாக வேண்டுமா..? உப்பை இப்படி பயன்படுத்தினால் பளபளக்கும்!
Get Sparkling White Teeth: வீட்டில் எளிதில் கிடைக்கும் பொருட்களைப் பயன்படுத்தி உங்கள் பற்களை எவ்வாறு வெண்மையாக்குவது என்பதை விளக்குகிறது. உப்பு, பேக்கிங் சோடா, கடுகு எண்ணெய், எலுமிச்சை சாறு ஆகியவற்றைப் பயன்படுத்தி பல் பளபளப்பாக்குவதற்கான வழிமுறைகள் இதில் விரிவாக விளக்கப்பட்டுள்ளன.

நீங்கள் ஒருவரிடம் பேசி சிரிக்கும்போது அவர்கள் முதலில் கவனிப்பது உங்களுடைய பற்களைதான். அதேநேரத்தில், உங்கள் பற்கள் மஞ்சள் நிறமாக (Yellow Teeth) இருந்தால், நீங்கள் சிரிக்கக்கூட சங்கடப்படுவீர்கள். கடைகளில் கிடைக்கும் டூத் பேஸ்ட் வெண்மையாக்கும் பொருட்கள் விலை உயர்ந்தவையாக உள்ளது. இத்தைய சூழ்நிலையில், சமையலறையில் இருக்கும் சில பொருட்களை கொண்டு உங்கள் பற்களை முத்துக்கள் போல பிரகாசிக்க செய்யலாம். அதன்படி, சமையலறையில் இருக்கும் உப்பு உணவின் சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், உங்கள் பற்களின் வெண்மையையும் (Whiten Teeth) மீட்டு தரும். இப்படியான சூழ்நிலையில் உப்பை எவ்வாறு சரியாக பயன்படுத்தி (Salt Toothpaste) பற்களை பளபளப்பாக மாற்றி வெண்மையாக்கலாம் என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.
கிருமி நாசினியாக செயல்படும் உப்பு:
உப்பு இயற்கையான கிருமி நாசினி பண்புகளை பெற்றுள்ளது. அதன்படி, உங்கள் விரல் அல்லது டூத் பிரஷ்களில் சிறிது உப்பை எடுத்து நேரடியாக பற்களில் தேய்க்கலாம். இந்த உப்பானது பற்களில் படிந்துள்ள அழுக்கு மற்றும் மஞ்சள் கறையை நீக்கும். உப்பை தொடர்ந்து பயன்படுத்தினால் பற்கள் வெண்மை நிறத்தில் மிளிரும்.
ALSO READ: கோதுமை மாவு இப்படி பயன்படுத்தாதீங்க! இது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்!




உப்பு மற்றும் பேக்கிங் சோடா:
பேக்கிங் சோடா ஒரு இயற்கையாக சுத்தம் செய்யும் பண்புகளை கொண்டுள்ளது. அதன்படி, 1/2 டீஸ்பூன் உப்பு மற்றும் 1/2 டீஸ்பூன் பேக்கிங் சோடாவை கலந்து, சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல் தயாரித்து கொள்ளவும். இதை வாரத்திற்கு 1 முதல் 2 முறை புதியதாக தயாரித்து பற்களை தேய்த்து கொள்ளுங்கள். இவ்வாறு செய்வதன்மூலம், இது மஞ்சள் நிறத்தைக் குறைத்து பற்களின் பளபளப்பை அதிகரிக்க உதவுகிறது.
உப்பு மற்றும் கடுகு எண்ணெய்:
உப்பு மற்றும் கடுகு எண்ணெய் என இரண்டு பொருட்களையும் கலந்து, ஒரு ஆயுர்வேத பேஸ்ட் தயாரிக்கலாம். இதை செய்ய, ஒரு ஸ்பூன் உப்பு எடுத்து அதில் 3 சொட்டு கடுகு எண்ணெயைச் சேர்த்து, அதை கலந்து கொள்ளுங்கள். இந்த பேஸ்டை கொண்டு துலக்கும்போது பற்களை வெண்மையாக்குவது மட்டுமல்லாமல், ஈறுகளையும் பலப்படுத்துகிறது.
உப்பு மற்றும் எலுமிச்சை சாறு:
எலுமிச்சை சாற்றை உப்புடன் கலந்து பல் துலக்குவது சிறந்த பலனை தரும். அதாவது, எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம் பற்களின் மேல் அடுக்கை சுத்தம் செய்து கறைகளை நீக்க உதவுகிறது. ஆனால் இதை வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
ALSO READ: ஈரப்பதத்தால் கெட்டுப்போகும் உப்பு… இந்த 3 பொருட்கள் புதுசாக வைக்கும்!
நமது தாத்தா காலத்தில் பெரும்பாலும் உப்பு மற்றும் சாம்பல் கொண்டே பற்களை விலக்கினார்கள். அதன்பிறகு, நவீன வளர்ச்சி காரணமாக பல் பொடி, பேஸ்ட் என பல் துலக்கும் முறை மாறியது. மீண்டும் உப்பை கொண்டு பல் துலக்குவது ஈறுகளை வலுப்படுத்துவது மட்டுமின்றி, பற்களை பளபளப்பாக மாற்றும்.