Clean Toilets Naturally: ஈஸியாக கழிப்பறையை சுத்தம் செய்வது எப்படி..? பெரிதும் உதவும் வினிகர் முறை..!
Eco-Friendly Toilet Cleaning: வீட்டின் கழிப்பறைகளை சுத்தம் செய்ய ஆரோக்கியமான மற்றும் சுற்றுச்சூழல் நட்பு முறையை இந்தக் கட்டுரை விளக்குகிறது. வினிகர் மற்றும் கழிப்பறை பேப்பர் ரோல் பயன்படுத்தி எளிதாகவும், குறைந்த செலவிலும் கழிப்பறையை சுத்தம் செய்யலாம். இந்த முறை கடுமையான இரசாயனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும் உதவுகிறது.

வீட்டின் கழிப்பறைகளை (Toilet) சுத்தமாக பராமரிப்பது என்பது மிகவும் முக்கியமானது. இது குடும்பத்தின் ஆரோக்கியத்தையும், சுகாதாரத்தையும் பாதுகாக்கும். முன்பெல்லாம், கழிப்பறைகளை சுத்தம் செய்ய ஆசிட் உள்ளிட்ட கடுமையான இரசாயனங்களை பயன்படுத்தினோ. இது சருமத்தை எரிச்சலடைய செய்யும். மேலும், உடலின் மேற்பரப்புகளை செதப்படுத்துவது மட்டுமின்றி, சுற்றுச்சூழலை மாசுபடுத்தலாம். இந்தநிலையில், நாங்கள் சொல்லும் இந்த எளிய பொருட்களை கொண்டு கழிப்பறையை பயன்படுத்தலாம். அதன்படி, வினிகருடன் (Vinegar) இணைந்து கழிப்பறை டாய்லெட் ரோலை பயன்படுத்தலாம். இது எளிய, சூழலை பாதுகாக்க உதவும்.
வினிகர் மற்றும் கழிப்பறை பேப்பர் ரோல் அணுகுமுறை மலிவானது, நடைமுறைக்குரியது. அதன் நுண்ணுயிர் எதிர்ப்பு விளைவுகளுக்கும் அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் சுகாதார இதழில் வெளியிட்டப்பட்ட ஒரு ஆய்வின்படி, வினிகரில் அசிட்டிக் அமிலம் உள்ளது. இது கழிப்பறையில் பொதுவாக காணப்படும் ஈ கோல் மற்றும் சால்மோனெல்லா உள்ளிட்ட பாக்டீரியாக்களை திறம்பட கொல்லும்.
ALSO READ: குழந்தைகளின் கைவண்ணத்தில் சுவற்றில் கிறுக்கல்களா..? எளிதாக எப்படி பளபளக்க செய்வது..?




ஒரு கழிப்பறை காதிக ரோலை வினிகரில் நனைத்து கழிப்பறை யூ வடிவ மூடியில் வைப்பதன் மூலம், கரைசல் மெல்ல மெல்ல வெளியாகும். இப்படி செய்வதன்மூலம், கழிப்பறையில் உள்ள கறைகள் மற்றும் தாது படிவுகளை நீக்குகிறது. இந்த முறை உங்கள் வீட்டை கடுமையான இரசாயனங்களுக்கு வெளிப்படுத்தாமல் சுத்தம் செய்யும் திறனை மேம்படுத்துகிறது.
வினிகரை கொண்டு கழிப்பறையை சுத்தம் செய்யும் முறைகள்:
எதையும் சுத்தம் செய்ய வினிகர் ஒரு சிறந்த வழி. கழிப்பறை இருக்கையில் வினிகரை ஊற்றி 1 மணி நேரம் அப்படியே வைக்கவும். பின்னர் ஒரு பிரஸை கொண்டு தேய்க்கவும். சிறிது நேரம் அப்படியே விட்டுவிட்டு அதன் மீது தண்ணீர் ஊற்றவும். அவ்வளவுதான் கழிப்பறை இருக்கை பளபளப்பாக மாறும்.
அழுக்கு குளியலறை டைல்ஸ்களை சுத்தம் செய்ய எளிதான வீட்டு குறிப்புகளில் பேக்கிங் சோடா மற்றும் வினிகர் போதுமானது. குளியலறை டைல்ஸ்களை சுத்தம் செய்ய, ஒரு கிண்ணத்தில் சம அளவில் பேக்கிங் சோடா மற்றும் வெள்ளை வினிகரை கலக்கவும். இந்த கரைசலை டைல்ஸ்கள் மற்றும் டைல்ஸ்களுக்கு இடையே உள்ள கோடுகளில் தடவி 10-15 நிமிடங்கள் அப்படியே வைக்கவும். பின்னர் ஒரு பிரஸ் அல்லது ஸ்க்ரப் மூலம் தேய்த்து சூடான நீரை ஊற்றி கழுவவும். இப்போது, டைல்ஸ்கள் உடனடியாக பளபளக்கும்.
ALSO READ: துணிகளை காய போடும்போது இந்த தவறுகள் வேண்டாம்.. இது உங்கள் துணிகளை நாசமாக்கும்..!
வினிகரில் இயற்கையான அமிலம் உள்ளது, இது துருப்பிடிப்பை நீக்குகிறது. வினிகர் மற்றும் தண்ணீரை சம அளவில் கலந்து, ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் நிரப்பி, குழாயில் தெளிக்கவும். 20 நிமிடங்களுக்குப் பிறகு, ஒரு பிரஷ்ஷால் ஸ்க்ரப் செய்து சுத்தம் செய்யவும்.