Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Rainy Season: மழைக்காலத்தில் வீட்டிற்குள் ஆங்காங்கே ஈக்களா..? எளிதாக விரட்டுவது எப்படி..?

How to Easily Repel Flies: மழைக்காலத்தில் ஈக்கள் எப்போதும் சுற்றித் திரிவதைத் தவிர்க்க நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஈக்கள் பெரும்பாலும் அழுக்கு இடங்களில் ஒன்றாக சேரும். எனவே, அவை உள்ளே வராமல் தடுக்க உங்கள் வீட்டை அடிக்கடி சுத்தம் செய்வதும், சுத்தமாக வைத்திருப்பது மிகவும் முக்கியம்.

Rainy Season: மழைக்காலத்தில் வீட்டிற்குள் ஆங்காங்கே ஈக்களா..? எளிதாக விரட்டுவது எப்படி..?
ஈக்களை விரட்டும் முறைImage Source: Freepik
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 03 Oct 2025 20:24 PM IST

மழைக்காலத்தில் (Rainy Season) வீடு முழுவதும் ஈரப்பதமாகவும், அடைபட்டதுபோல் இருக்கும். இதன் காரணமாக பெரும்பாலும், ஈரமான இடங்களில் அழுக்கு படிந்து, ஈக்கள் பின்னர் அவற்றின் மீது மொய்க்கின்றன. இந்த ஈக்கள் தெருக்களிலும், வடிகால்களிலும் சேகரிக்கப்பட்ட குப்பைகளிலும் அமர்ந்து, பின்னர் நம் வீடுகளுக்குள் வந்து திறந்த உணவுப் பொருட்களில் அமரும். இது நம் ஆரோக்கியத்தில் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்து,.  இதைப் புறக்கணிப்பது ஒரு பெரிய தவறாக இருக்கலாம். ஏனெனில் இந்த ஈக்கள் (Flies) பல நோய்களை நம் வீட்டிற்குள் அழைத்து வருகின்றன. இப்படியான ஈக்கள் ஒரு பொருளின் மீது ஏறும்போது, ​​அவை பல பாக்டீரியாக்களையும் அந்த இடத்தில் விட்டு செல்கின்றனர். இந்த பாக்டீரியாக்கள் பின்னர் உங்கள் உடைமைகளில் ஒட்டிக்கொண்டு உங்கள் உடலில் நுழைந்து நோய்களை ஏற்படுத்துகின்றன. அவற்றை அகற்ற சில எளிய வழிகளை அறிந்து கொள்வோம்.

வீட்டின் சுத்தம்:

ஈக்கள் பெரும்பாலும் அழுக்கு இடங்களில் ஒன்றாக சேரும். எனவே, அவை உள்ளே வராமல் தடுக்க உங்கள் வீட்டை அடிக்கடி சுத்தம் செய்வதும், சுத்தமாக வைத்திருப்பது மிகவும் முக்கியம். அதன்படி, தூய்மையைப் பராமரிக்க, தினமும் தரையை ப்ளோர் க்ளீனர் உள்ளிட்டவற்றை கொண்டு தண்ணீரில் ஊற்றி சுத்தம் செய்யுங்கள். அதேபோல், எக்காரணத்தை கொண்டு சமையலறையை சுத்தம் செய்யாமலும், ஈரமாக விடாதீர்கள்.

கற்பூரம் மற்றும் பிரிஞ்சி இலை:

ஈக்கள் பெரும்பாலும் கடுமையான வாசனையை விரும்பாது, அவற்றிலிருந்து விலகி இருக்கும். கற்பூரம் மற்றும் பிரிஞ்சி இலைகளை தீயேத்தி எரிப்பதன்மூலம் கடுமையான வாசனை வெளியேரும். இந்த வாசனை ஈக்களை வீட்டில் இருந்து விரைவாக விரட்ட உதவும். கூடுதலாக, வீடு முழுவதும் புகையைப் பரப்புவது பாக்டீரியாக்களைக் கொல்ல உதவும். ஏனெனில், அதன் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் வீட்டைப் பாதுகாப்பாக வைத்திருக்கும்.

உப்பு மற்றும் வினிகர் ஸ்க்ரப்:

உப்பு மற்றும் வினிகர் இரண்டும் சிறந்த க்ளீனர் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன. அவற்றை தண்ணீரில் கலந்து தரையைத் துடைப்பது ஈக்கள் மீண்டும் உங்கள் வீட்டிற்கு வருவதை உறுதி செய்யும்.

உப்பு-எலுமிச்சை மற்றும் படிகார தெளிப்பு:

ஈக்கள் தொல்லை இருந்தால், ஒரு எலுமிச்சையை எடுத்து தண்ணீரில் கொதிக்க வைக்கவும். பின்னர், படிகாரத்தைச் சேர்த்து குளிர்விக்க விடவும். அதன் பிறகு, அதை ஒரு பாட்டிலில் நிரப்பி உங்கள் வீட்டைச் சுற்றி தெளிக்கவும். இது ஈ பிரச்சனையைத் தீர்க்கும்.

ALSO READ: மழைக்காலத்தில் அதிகரிக்கும் பொடுகு பிரச்சனை.. இதை எவ்வாறு தடுப்பது..?

இந்த விஷயங்களில் சிறப்பு கவனம்:

மழைக்காலத்தில் ஈக்கள் எப்போதும் சுற்றித் திரிவதைத் தவிர்க்க நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். எனவே, உங்கள் வீட்டை முடிந்தவரை சுத்தமாக வைத்திருக்க எப்போதும் முயற்சி செய்யுங்கள். வீட்டில் எப்போதும் குப்பை சேர விடாதீர்கள், வீட்டை சுற்றி திறந்தவெளியில் குப்பைகளை வீசாதீர்கள். வீட்டிற்குள் குப்பைத் தொட்டிகளைத் திறந்து வைக்காதீர்கள். மேலும், உணவு மற்றும் குழம்புகளை மூடி வைக்கவும். இவ்வாறு செய்வது ஈக்களையும் கவராது, ஆரோக்கியத்தையும் கெடுக்காது.