Dandruff Control Tips: மழைக்காலத்தில் அதிகரிக்கும் பொடுகு பிரச்சனை.. இதை எவ்வாறு தடுப்பது..?
Hair Care in Rainy Season: மழையில் நனைந்தவுடன் உடனடியாக உங்கள் தலைமுடியைக் கழுவி நன்கு உலர வைக்கவும். ஈரமான முடியைக் கட்டுவதைத் தவிர்க்கவும், ஏனெனில் இது பூஞ்சை வளர வாய்ப்பளிக்கும். உங்கள் தலைமுடியை இயற்கையாக உலர்த்துவது மிக மிக முக்கியம்.

மழைக்காலம் (Monsoon) இனிமையான காலம் என்றாலும், இந்த நேரத்தில் முடி தொடர்பான பிரச்சனைகளும் வேகமாக அதிகரிக்கும். முடி உதிர்தல், பொடுகு, பிசுபிசுப்பு தன்மை மற்றும் முடி பிளவுகள் போன்ற பிரச்சனைகள் அதிகரிக்க தொடங்கும். எனவே, மழைக்காலத்தில் தலைமுடிக்கு (Hair) சிறப்பு கவனம் செலுத்துவது முக்கியம். இந்த பருவ மாற்றத்தின்போது, உங்கள் உச்சந்தலையில் அடிக்கடி அரிப்பு ஏற்படுவதையும், உங்கள் தலைமுடியில் வெள்ளை செதில்கள் தோன்றுவதையும், உங்கள் தலைமுடியை சீவும்போது, வேர்களில் இருந்து மெல்லிய வெள்ளை செதில்கள் உதிர்வதையும் நீங்கள் கவனித்திருக்கலாம். இதைதான் பொடுகு (Dandruff) என்று அழைக்கிறோம்.
பலர் இது சாதாரணமானது என்று கருதி இதைப் புறக்கணிக்கிறார்கள். ஆனால் இந்தத் தலை பொடுகு படிப்படியாக உச்சந்தலையில் தொற்று மற்றும் முடி உதிர்தலுக்கு வழிவகுக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? அதன்படி, உங்கள் தலைமுடிக்கு இயற்கையான பளபளப்பையும் வலிமையையும் சில எளிதான மற்று பயனுள்ள ஹேக்குகளை தெரிந்து கொள்வோம்.
ALSO READ: வாரத்திற்கு 2 முறை ஆயில் மசாஜ் செய்யுங்கள்.. காணாமல் போகும் முடி உதிர்வு பிரச்சனை!




மழையில் நனைந்தவுடன் உடனடியாக உங்கள் தலைமுடியைக் கழுவி நன்கு உலர வைக்கவும். ஈரமான முடியைக் கட்டுவதைத் தவிர்க்கவும், ஏனெனில் இது பூஞ்சை வளர வாய்ப்பளிக்கும். உங்கள் தலைமுடியை இயற்கையாக உலர்த்துவது மிகவும் முக்கியம். ஹேர் ட்ரையரைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, அதை ஒரு துண்டுடன் மெதுவாக உலர்த்தி வெளி காற்றில் உலர வையுங்கள். அதிகப்படியான சூடான காற்று உச்சந்தலையை உலர்த்தி பொடுகை அதிகரிக்கும்.
தேங்காய் எண்ணெய்:
தேங்காய் எண்ணெயுடன் சிறிது எலுமிச்சை சாற்றை கலந்து, அதனை உங்கள் உச்சந்தலையில் மசாஜ் செய்யவும். 20 நிமிடங்கள் அப்படியே விட்டுவிட்டு பின்னர் கழுவவும். இது பொடுகைக் குறைத்து உச்சந்தலைக்கு ஈரப்பதத்தை அளிக்கிறது.
கற்றாழை ஜெல்:
புதிய கற்றாழை ஜெல் எடுத்து உச்சந்தலையில் தடவவும். அரை மணி நேரம் அப்படியே விட்டுவிட்டு, பின்னர் தலைமுடியை அலசவும். இது உச்சந்தலையில் ஏற்படும் எரிச்சலைக் குறைத்து, பொடுகு பிரச்சனையைக் குறைக்க உதவி செய்யும்.
ஆப்பிள் சீடர் வினிகர்:
ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் தண்ணீரை சம அளவில் கலந்து குளிக்க முன் உங்கள் உச்சந்தலையில் தடவி 15 நிமிடங்களுக்குப் பிறகு கழுவவும். இது பொடுகைக் குறைத்து முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
ALSO READ: வாழைப்பழத்தில் ஹேர் மாஸ்க்.. தலை முடிக்கு வலு சேர்க்கும் அற்புதம்!
வெந்தயம்:
வெந்தயத்தை இரவு முழுவதும் ஊறவைத்து, காலையில் ஒரு பேஸ்ட் செய்து, தலையில் தடவவும். அரை மணி நேரம் கழித்து தலையை கழுவினால், அரிப்புடன் சேர்த்து பொடுகு நீங்கும். இது முடிக்கு ஊட்டமளிக்கும்.
தேயிலை மர எண்ணெய்:
ஷாம்பூவில் தேயிலை மர எண்ணெயைக் கலந்து உங்கள் உச்சந்தலையில் தடவவும். இது பூஞ்சை எதிர்ப்பு பண்புகளைக் குறைக்கும். இது இயற்கையாகவே பொடுகைக் குறைக்க உதவும். இது உச்சந்தலையை சுத்தம் செய்யும்.