Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Stress and Hair Fall: அதிக மன அழுத்தம் முடி உதிர்வை ஏற்படுத்துமா..? சரிசெய்வது எப்படி..?

Stress-Related Hair Loss: நீண்ட காலமாக மன அழுத்தத்தால் அவதிப்படும் ஒரு நபருக்கு முடி உதிர்தல் பிரச்சனை ஏற்படும். எனவே, மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். மன அழுத்தமானது நம் மனித உடலில் பல மாற்றங்களை ஏற்படுத்துகிறது. இது முடி உதிர்தலுக்கு வழிவகுக்கும்.

Stress and Hair Fall: அதிக மன அழுத்தம் முடி உதிர்வை ஏற்படுத்துமா..? சரிசெய்வது எப்படி..?
மன அழுத்தத்தால் முடி உதிர்வுImage Source: Freepik
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 15 Sep 2025 16:15 PM IST

பெரும்பாலான மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையில் பிஸியாக வாழ்கிறார்கள். இதனால், தலை முதல் கால் வரை சரியாக பராமரிக்க முடியவில்லை. மேலும், அதிக பணி காரணமாக பலரும் மன அழுத்தத்தால் ஆளாகி, அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையில் பாதிப்பு உண்டாகிறது. அதிகரித்த மன அழுத்தம் உடல் ஆரோக்கியத்திலும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இப்படியான சூழ்நிலையில், உடலில் பல்வேறு நோய்கள் குடியேறும் அபாயமும் உள்ளது. இதன் பொருள், எந்தவொரு காரணத்திற்காகவும் ஏற்படும் மன அழுத்தமானது (Stress) மன மற்றும் உடல் ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும், இது சருமத்தையும் முடியையும் பாதிக்கிறது. முடி உதிர்தல் (Hair Loss) இன்று பலருக்கு ஒரு பொதுவான பிரச்சனையாகும்.

ALSO READ: இளம் வயதிலேயே வயதான தோற்றமா..? சருமத்தை இறுக செய்யும் சிறப்பான டிப்ஸ்!

முடி உதிர்தல் பிரச்சனை:

ஒரு மனிதனுக்கு ஏற்படும் முடி உதிர்வு பிரச்சனைக்குப் பின்னால் பல்வேறு காரணங்கள் உள்ளன. மரபியல், ஹார்மோன் மாற்றங்கள், சுற்றுச்சூழல் காரணிகள் போன்றவற்றால் முடி பிரச்சனைகள் ஏற்படலாம். மன அழுத்தத்தால் முடி உதிர்தல் ஏற்படலாம் என்று பலரும் கூறுகிறார்கள். இது உண்மையா இல்லையா என்பது பலரும் அறிவதில்லை. இந்தநிலையில், ஒருவருக்கு ஏற்படும் மன அழுத்தம் உங்கள் தலைமுடியை எவ்வாறு சேதப்படுத்தும் என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.

நீண்ட காலமாக மன அழுத்தத்தால் அவதிப்படும் ஒரு நபருக்கு முடி உதிர்தல் பிரச்சனை ஏற்படும். எனவே, மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். மன அழுத்தமானது நம் மனித உடலில் பல மாற்றங்களை ஏற்படுத்துகிறது. இது முடி உதிர்தலுக்கு வழிவகுக்கும். ஒருவர் மன அழுத்தத்திற்கு ஆளாகும் போதெல்லாம், அவரது நோயெதிர்ப்பு அமைப்பு பாதிக்கப்படுவதாகவும், இது முடி நுண்குழாய்களுக்கு சேதத்தை ஏற்படுத்தி, இது முடி உதிர்தலை ஏற்படுத்தும். இருப்பினும், இது ஒரு சிலருக்கு மட்டுமே நிகழ்கிறது. மன மற்றும் உடல் ஆரோக்கியத்தை சரியான முறையில் பராமரிக்கவும், தோல் மற்றும் முடியைப் பராமரிக்கவும் மன அழுத்தத்தை நிர்வகிப்பது மிகவும் முக்கியமானது.

ALSO READ: மழைக்காலத்தில் முடி உதிர்வை தடுப்பது எப்படி? இயற்கை வழிமுறைகள் இதோ!

மன அழுத்தத்தை கட்டுபடுத்துவது எப்படி..?

  • மன அழுத்தத்தை கட்டுப்படுத்த ஒரு சில வழிமுறைகள் உள்ளன. அதன்படி, மன அழுத்தத்தை நிர்வகிக்க தினமும் 10 முதல் 15 நிமிடங்கள் தியானம் அல்லது ஆழ்ந்த சுவாச நுட்பங்களை மேற்கொள்ளுங்கள். இது மனதை அமைதிப்படுத்தி கவனத்தை அதிகரிக்கும்.
  • மன அழுத்தத்தைக் குறைக்க உங்களைத் தொந்தரவு செய்யும் விஷயங்களை ஒரு டைரியில் எழுதலாம். இது மன அழுத்தத்தைக் குறைக்க உதவும். உங்களைப் பாதிக்கும் எதையும் உங்கள் நண்பர்கள் அல்லது நெருங்கியவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். இது சற்று ஆறுதலை கொடுக்கும்.
  • நீங்கள் உடற்பயிற்சி செய்யும்போது, ​​அது உடலில் மகிழ்ச்சியான ஹார்மோனான எண்டோர்பின்களை வெளியிடுகிறது. இந்த ஹார்மோன் மனநிலையை நிலைப்படுத்தவும் மேம்படுத்தவும் உதவுகிறது. எனவே ஒவ்வொரு நாளும் 20 முதல் 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய அல்லது நடக்க எடுத்துக்கொள்ளுங்கள்.
  • உங்களுக்கு ஒரு நாளைக்கு 7 முதல் 8 மணிநேர தூக்கமும் சீரான உணவும் தேவை. இதுவும் உங்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவி செய்யும்.