Dark Knees: கருமை நிற முழங்கால்களால் சங்கடமா..? இயற்கை முறையில் இப்படி பளபளக்க செய்யலாம்!
Lighten Dark Knees: இந்த கட்டுரை முழங்கால்கள் மற்றும் முழங்கைகள் கருமையாவதற்கான காரணங்கள் மற்றும் அவற்றை இயற்கை முறையில் வெளுக்கும் வழிமுறைகளை விளக்குகிறது. சரும வறட்சி, அழுத்தம் மற்றும் சூரிய ஒளி ஆகியவை முக்கிய காரணங்கள். சர்க்கரை-தேங்காய் எண்ணெய் ஸ்க்ரப், எலுமிச்சை-தேன் பேஸ்ட், அலோ வேரா ஜெல் போன்ற வீட்டு வைத்தியங்கள் பயனுள்ளதாக இருக்கும்.

கைகள், கால்கள் மற்றும் முகம் பளபளப்பாக (Skin lightening) இருந்தாலும், பலருக்கு முழங்கைகள் மற்றும் முழங்கால்கள் கருமை (Dark Knees and Elbows) நிறமாக இருக்கும். இதன் காரணமாக, அவர்கள் கை மற்றும் கால்களை வெளியே காட்ட சங்கடத்தை எதிர்கொள்கிறார்கள். ஒரு சில ஆண்கள் இதை பெரிதாக எடுத்துக்கொள்ளாவிட்டாலும், பெரும்பாலான பெண்கள் குட்டையான ஆடைகளை அணிய விரும்பினாலும், அவர்களால் முடியாது. அதன்படி, உடல் முழுவதும் பளபளபாக இருந்தாலும், முழங்கால்கள் ஏன் கருமையாகின்றன என்பதைப் புரிந்துகொள்வது முக்கியம். மேலும், அதை எவ்வாறு அகற்றுவது என்பதையும் இங்கே தெரிந்து கொள்வோம்.
முழங்கை, முழங்கால்கள் ஏன் கருமையாகின்றன..?
நீங்கள் முழங்காலில் உட்காரும்போதோ, முழங்கையினால் அடிக்கடி அழுத்தம் கொடுக்கும்போதோ அதன் தோல் கடினமாகி, உடலின் மற்ற பகுதிகளை விட கருமையாக மாறும். வறண்ட சருமம் உள்ளவர்களுக்கும் இந்தப் பிரச்சனை ஏற்படும். இந்தப் பிரச்சனையிலிருந்து விடுபட, வாரத்திற்கு குறைந்தது இரண்டு முதல் மூன்று முறையாவது வழக்கமான எக்ஸ்ஃபோலியேஷன் செய்வது அவசியம். செக்ஸ்ஃபோலியேஷன் என்பது சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, புதிய, பொலிவான சருமத்தை பெறுவதற்கான ஒரு அழகு செயல்முறையாகும்.
ALSO READ: துர்நாற்றத்தால் வாயை திறக்கவே சங்கடமா..? போக்க 5 எளிய வீட்டு குறிப்புகள்..!
இவற்றை எப்படி நீக்குவது..?
- முழங்கை மற்றும் முழங்கால்களில் உள்ள கருமையை நீக்க, சர்க்கரை மற்றும் தேங்காய் எண்ணெயைக் கலந்து உங்கள் கைகளால், கருமை உள்ள பகுதிகளில் மெதுவாகத் தேய்க்கலாம். இது இறந்த செல்களை நீக்கி கரும்புள்ளிகளை நீக்கும்.
- நீங்கள் கடையில் வாங்கும் காஸ்மெடிக் ஸ்க்ரப்பையும் பயன்படுத்தலாம். ஸ்க்ரப் செய்த பிறகு ஈரப்பதமாக்குங்கள். இதன்பிறகு ஷியா வெண்ணெய், கோகோ வெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் கொண்ட கிரீம்களை கருமை உள்ள இடத்தில் பயன்படுத்தலாம்.
- எலுமிச்சை சாறு மற்றும் தேனை நன்கு கலந்து 15-20 நிமிடங்கள் தடவவும். இதன் முழு நன்மைகளைப் பெற வாரத்திற்கு இரண்டு முதல் மூன்று முறை பயன்படுத்தவும்.
- முழங்கை மற்றும் முழங்காலில் உள்ள கருமையை நீக்க கற்றாழை ஜெல்லையும் பயன்படுத்தலாம். அதேபோல், உருளைக்கிழங்கு சாற்றைப் பயன்படுத்துவதும் நன்மை பயக்கும்.
என்ன செய்யலாம்..? செய்யக்கூடாது..?
ஷார்ட்ஸ் மற்றும் பனியன் போன்றவற்றை அணிய விரும்பும் ஆண்கள், பெண்கள் இதுபோன்ற ஆடைகளை அணிவதற்குமுன், உங்கள் முழங்கை மற்றும் முழங்கால்களிலும் சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துங்கள். இல்லையெனில், உங்கள் முழங்கால்கள் இன்னும் கருமையாகிவிடும். மிகவும் இறுக்கமான பேன்ட் அணியாமல் இருப்பது நல்லது. முழங்கை மற்றும் முழங்காலில் அதிக அழுத்தம் தரும் வேலையாக இருந்தால், அதை விட்டுவிடுங்கள்.
ALSO READ: வாரத்திற்கு 2 முறை ஆயில் மசாஜ் செய்யுங்கள்.. காணாமல் போகும் முடி உதிர்வு பிரச்சனை!
மேலே குறிப்பிட்டுள்ள வீட்டு குறிப்புகள் வேலை செய்யவில்லை என்றால், மருத்துவரை அணுகவும். பிரச்சனையின் வகையைப் பொறுத்து, மருத்துவர்கள் AHA, ரெட்டினோல் கிரீம், லேசர் அல்லது கெமிக்கல் பீல்களைப் பயன்படுத்த பரிந்துரை செய்வார்கள்.