துணிகள் பளபளப்பாக இருக்க வேண்டுமா? துவைக்கும்போது வினிகரை டிரை பண்ணி பாருங்க!
Laundry Hacks You Didn’t Know: வினிகர் வெறும் சமையலுக்கு மட்டும் பயன்படுத்தப்படுவதில்லை. வீடுகளில் வினிகர் இருந்தால், அது பல வேலைகளை எளிமையாக்கும். பலர் பாத்திரம் கழுவ வினிகரைப் பயன்படுத்துவார்கள். இந்த கட்டுரையில் துணி துவைப்பதற்கு வினிகரைப் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.

வினிகர் (Vinegar) சமையலுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுவதில்லை. அதனால் பல நன்மைகள் இருக்கின்றன. குறிப்பாக வினிகர் நம் துணிகளைப் பராமரிப்பதில் ஒரு சூப்பர் ஹீரோவைப் போல செயல்படுகிறது. உங்கள் துணிகள் மென்மையாகவும் பளபளப்பாகவும் இருக்க விரும்பினாலும், அல்லது நாள்பட்ட கறைகளை நீக்க விரும்பினாலும், வினிகரைப் பயன்படுத்துங்கள். எல்லா பிரச்சனைகளுக்கும் இதுவே சிறந்த தீர்வை அளிக்கும். சமையலறையில் (Kitchen) உள்ள பாத்திரங்களை பளபளப்பாக்க வினிகரை பயன்படுத்துவது வழக்கம். ஆனால் நம் துணிகளைப் பராமரிப்பதிலும் வினிகர் மிகச் சிறப்பாக செயல்படுகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா..? துணிகளை பளபளப்பாக்குவது முதல் கடினமான கறைகளை அகற்றுவது வரை வினிகரின் பயன்களை இந்த கட்டுரையில் விரிவாக தெரிந்துகொள்ளலாம்.
துணிகளுக்கு புதிய பளபளப்பு
சில நேரங்களில் துணிகள் கடினமாகவும்.. துவைத்த பிறகும் கரடுமுரடாகவும் இருக்கும். இதுபோன்ற நேரங்களில், தண்ணீரில் சிறிது வினிகரை கலந்து அதில் துணிகளை சிறிது நேரம் ஊற வைக்கவும். நீங்கள் ஒரு வாஷிங் மிஷினை பயன்படுத்தினால், டிடர்ஜென்டுடன் வினிகரை சேர்க்கலாம். இதனால் துணிகளை மென்மையாக்கும் மற்றும் புதிய பளபளப்பைக் கொடுக்கும்.
இதையும் படிக்க : வெங்காயம் விரைவில் கெட்டுவிடுகிறதா? கெடாமல் வைக்க இந்த முறையில் டிரை பண்ணுங்க!




துர்நாற்றத்தை நீக்கும்
சில ஆடைகள் துவைத்த பிறகு சரியாக காயவில்லை என்றால் துர்நாற்றம் வீசும். வினிகர் இதுபோன்ற விஷயங்களை அகற்ற பெரிதும் உதவுகிறது. தண்ணீரில் சிறிது வினிகரைக் கலந்து, அந்த நீரில் துணிகளைத் துவைக்கவும். இது துணிகளில் இருந்து வரும் மோசமான வாசனைகளை நீக்கும்.
கரைகளை போக்கும்
துணிகளில் உள்ள சில கடுமையான கறைகளை வழக்கமான சோப்பால் அகற்ற முடியாது. இதுபோன்ற விஷயங்களுக்கு, ஒரு தேக்கரண்டி வினிகரை சிறிது சோப்புப் பொடியுடன் கலக்கவும். அந்தக் கலவையை கறையில் தடவவும். சிறிது நேரம் அப்படியே விட்டுவிட்டு பின்னர் துவைக்கவும், பெரும்பாலான கறைகள் மறைந்துவிடும்.
இதையும் படிக்க : உணவு பொருட்களில் காணப்படும் சிவப்பு, பச்சை, நீலம், மஞ்சள், கருப்பு நிறங்கள் – காரணம் என்ன?
பழைய துணிகளுக்கு புதிய தோற்றத்தைக் கொடுக்கும்
அடிக்கடி துவைப்பதால், துணிகள் பழையதாகத் தோன்றும், அவற்றின் நிறம் மங்கிவிடும். அவற்றின் பளபளப்பை மீண்டும் கொண்டு வர வினிகரைப் பயன்படுத்தலாம். வெந்நீரில் வினிகரை கலந்து, அந்த கரைசலில் துணிகளை இரவு முழுவதும் ஊற வைக்கவும். மறுநாள் சாதாரணமாக துவைத்தால், துணிகள் மீண்டும் புதியதாகத் தோன்றும்.
வினிகரில் பல நன்மைகள் இருந்தாலும், அதை அனைத்து வகையான ஆடைகளிலும் பயன்படுத்தக்கூடாது. குறிப்பாக மீள் தன்மை கொண்ட ஆடைகளை வினிகரால் சுத்தம் செய்தால் சேதமடையக்கூடும். எந்தவொரு துணியிலும் வினிகரைப் பயன்படுத்துவதற்கு முன்பு, அதன் மீது கொடுக்கப்பட்டுள்ள பிரத்யேக வழிமுறைகளைப் பின்பற்றுவது நல்லது.