Health Tips: வானிலை மாறும்போது குழந்தைகளுக்கு ஏன் டக்கென்று காய்ச்சல் வருகிறது..? காரணம் இதோ!
Child Care: குழந்தைகள் வளர வளரதான் நோயெதிர்ப்பு அமைப்புகளும் முதிர்ச்சியடைய தொடங்கும். மேலும், குழந்தையின் காற்றுப்பாதைகளும் சிறியதாகவே இருக்கும். இதனால், வீக்கம் அல்லது சளி சுவாசத்தை பாதிக்கலாம். இதை சரி செய்ய தேவையான நோய் எதிர்ப்பு சக்தி குழந்தைகள் மற்றும் சிறியவர்களிடம் இருக்காது.
பருவ மழை மாற்றம் (Rainy Season) என்பது பலரையும் பாடாய்படுத்தும் ஒரு காலநிலை மாற்றமாகும். இந்த பருவ மாற்றத்தின்போது பெரியவர்களை விட, நம் வீட்டில் இருக்கும் குழந்தைகளே அடிக்கடி பாதிக்கப்படுவார்கள். அதன்படி மூக்கு ஒழுகுதல், தொடர்ச்சியான இருமல், காய்ச்சல் (Fever) என அடுத்தடுத்து வந்து குழந்தைகளுக்கு தொல்லை கொடுக்கும். இது நீண்ட நாட்கள் நீடிக்கும்போது சுவாச நோய்த்தொற்றுகளின் அபாயத்தையும் ஏற்படுத்தும். இந்தநிலையில், பருவ மாற்றத்தின்போது குழந்தைகளுக்கு ஏன் உடனடியாக பாதிப்பு ஏற்படுகிறது..? இதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.
நோய் எதிர்ப்பு சக்தி:
குழந்தைகள் வளர வளரதான் நோயெதிர்ப்பு அமைப்புகளும் முதிர்ச்சியடைய தொடங்கும். மேலும், குழந்தையின் காற்றுப்பாதைகளும் சிறியதாகவே இருக்கும். இதனால், வீக்கம் அல்லது சளி சுவாசத்தை பாதிக்கலாம். இதை சரி செய்ய தேவையான நோய் எதிர்ப்பு சக்தி குழந்தைகள் மற்றும் சிறியவர்களிடம் இருக்காது. இதனால்தான், வகுப்பறை அல்லது வீட்டில் யாருக்காவது காய்ச்சல் ஏற்படும்போது உடனடியாக குழந்தையை பாதிக்கிறது.
ALSO READ: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சூப்பர் ஃபுட்கள்.. மழைக் காலத்தில் மிஸ் பண்ணாதீங்க!




வைரஸ்:
இந்தியாவின் பல பகுதிகளில் பருவமழைக்கு பிந்தைய/குளிர்காலத்தில் தொடக்கத்தில் பொதுவாக காணப்படும் குறைந்த வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் சில சுவாச வைரஸ்கள் உயிர்வாழ்வதற்கும் காற்றில் பரவுவதற்கும் சாதகமாக இருக்கும். திடீர் வெப்பநிலை மாற்றத்தால் மூக்கு மற்றும் தொண்டையில் உள்ள சளிச்சவ்வு வெளியேற்றத்தை குறைக்கும். அதே நேரத்தில், உட்புற நெரிசல் பரவும் அபாயத்தை அதிகரிக்கிறது.
காற்று மாசுபாடு:
தீபாவளி முடிந்து பல நாட்கள் ஆகியும் மாசுபாடு இன்னும் குறைந்தபாடியில்லை. வெடி வெடித்ததன் காரணமாக நுண்ணிய துகள்கள் மற்றும் எரிச்சலூட்டும் வாயுக்கள் காற்றுப்பாதைப் புறணியை சேதப்படுத்தும், தொண்டை வீக்கத்தை அதிகரிக்கின்றன.
மேலும் சில காரணங்கள்..
தடுப்பூசி போடப்படாதது, ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் சரியான நேரத்தில் பராமரிப்பு கிடைப்பது குறைவாக இருப்பது ஆகியவை பாதிப்பை அதிகரிக்கின்றன. இந்த காரணிகள் இளம் குழந்தைகளில் கடுமையான சுவாச நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தலாம்.
ALSO READ: பால் குடித்தால் குழந்தைக்கு வயிற்றுப்போக்கு ஏற்படுவது ஏன்..? பெற்றோர்கள் கவனிக்க வேண்டியவை!
தடுக்க என்ன செய்யலாம்..?
1. சரியான நேரத்தில் தடுப்பூசி போடுங்கள்
2. வீட்டை அடிக்கடி சுத்தம் செய்தல்
3. காற்றின் தரத்தை சுத்தமாக வைத்தல்
4. வெளியே சென்று வந்தால் கை மற்றும் கால்களை சுத்தம் செய்தல்
5. பருவ காலங்களில் வெளியே சொல்லும்போது மாஸ்க் அணிதல்
6. நல்ல ஊட்டச்சத்துக்களை குழந்தைக்கு கொடுத்தல்
7. சரியான முறையில் இருமலை பிறருக்கு பரவாத வகையில் பேணுதல்