AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Child Care: புதிதாக பிறந்த குழந்தைக்கு இந்த அறிகுறிகளா? உடனே டாக்டரை பாருங்க!

Newborn Health Warning Signs: அழுகை என்பது ஒரு குழந்தையின் தேவையை வெளிப்படுத்தும் ஒரு விஷயமாகும். பசித்தாலும் சரி, தூக்கத்திற்கு சரி அழுகையை ஒரு சாதனமாக குழந்தை பயன்படுத்தி கொள்ளும். இதன் காரணமாகவே, குழந்தையின் அழுகையின் அர்த்தத்தை பெற்றோர்கள் பொதுவாகப் புரிந்துகொள்வார்கள்.

Child Care: புதிதாக பிறந்த குழந்தைக்கு இந்த அறிகுறிகளா? உடனே டாக்டரை பாருங்க!
குழந்தை ஆரோக்கியம்Image Source: Freepik
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 13 Feb 2026 18:13 PM IST

புதிதாக பிறந்த குழந்தையாக (Child Care) இருந்தாலும் சரி, 3 மாதங்களுக்குள் இருக்கும் குழந்தையாக இருந்தாலும் சரி, பெற்றோர்கள் குழந்தைக்கு காய்ச்சல் வந்தால் அதன் அறிகுறிகளை அறிவது கிடையாது. அதன்படி, உங்கள் குழந்தையின் வெப்பநிலை இயல்பை விட சற்று அதிகமாக இருந்தால், உடனடியாக மருத்துவரை பார்ப்பது சரியான வழியாகும். குழந்தையை பொறுத்தவரை 38 டிகிரி செல்சியஸுக்குக் குறைவான வெப்பநிலை (Temperature) சாதாரணமான வெப்பநிலை என்றும், இதற்கு மேல் சென்றால் காய்ச்சல் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர். அதன்படி, உங்கள் குழந்தைக்கு காய்ச்சல் உள்ளதா என்பதை எவ்வாறு கண்டறிவது பற்றி தெரிந்து கொள்வோம்.

ALSO READ: குழந்தைக்கு மசாஜா? அப்போ! செய்யக்கூடாத 5 தவறுகள்.. மருத்துவர் ஹரிணி ஸ்ரீ விளக்கம்!

நடத்தையில் மாற்றங்கள்:

குழந்தைகளுக்கு ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால், முதலில் அவர்களின் நடத்தையில் மாற்றங்கள் ஏற்படும். அதாவது, உங்கள் குழந்தை வழக்கத்தை விட அதிகமாக அழுகிறதா அல்லது அவர்களின் செயல்பாடு திடீரென குறைந்துவிட்டாலோ, அது கவலைக்குரிய பிரச்சனை. பொதுவாக, குழந்தை விழித்திருக்கும்போது இருந்தால், அழுது, நன்றாக சாப்பிட்டால் நன்றாக இருக்கிறது என்று அர்த்தம்.

அதேநேரத்தில், குழந்தை தொடர்ந்து மிகவும் சோம்பலாகவோ, அதிகமாக எரிச்சலாகவோ அல்லது வழக்கத்திற்கு மாறாக அதிகமாக தூங்கினால் மருத்துவரை அணுகுவது முக்கியம்.

அதிகப்படியான சோம்பல்:

ஒரு குழந்தை தொடர்ந்து சோம்பலாக இருந்தால், நன்றாக தூங்கிய பின்னரும் சோம்பலாக தோன்றினால் இது ஆற்றல் குறைபாட்டின் அறிகுறியாக இருக்கலாம். இதை பெரும்பாலான பெற்றோர்களால் கண்டறியப்படாமல் போகலாம். ஆற்றல் குறைவதற்கு சாதாரண சளி, காய்ச்சல், இரத்தம் தொடர்பான பிரச்சினைகளாக இருக்கலாம். எனவே, ஒரு குழந்தை அதிகப்படியான சோம்பலை எதிர்கொண்டால், அவர்களை பரிசோதிப்பது மிக மிக முக்கியம்.

ALSO READ: கர்ப்ப காலத்தில் உணவு முறை எப்படி இருக்க வேண்டும்..? எதை கவனிக்க வேண்டும்?

அதிகமாக அழுதல்:

அழுகை என்பது ஒரு குழந்தையின் தேவையை வெளிப்படுத்தும் ஒரு விஷயமாகும். பசித்தாலும் சரி, தூக்கத்திற்கு சரி அழுகையை ஒரு சாதனமாக குழந்தை பயன்படுத்தி கொள்ளும். இதன் காரணமாகவே, குழந்தையின் அழுகையின் அர்த்தத்தை பெற்றோர்கள் பொதுவாகப் புரிந்துகொள்வார்கள். இருப்பினும், கடுமையான சந்தர்ப்பங்களில், குழந்தையின் உடலில் வெளிப்படையான மாற்றங்கள் தோன்றத் தொடங்குகின்றன. அதன்படி, ஒரு குழந்தை தொடர்ந்து அழுது, சமானப்படுத்தப்படுத்த முடியவில்லை என்றால், இது பின் வரும் நோயின் அறிகுறியாக இருக்கலாம். அதிகப்படியான எரிச்சல் வாயு, வயிற்று வலி, காதுவலி அல்லது வைரஸ் அல்லது பாக்டீரியா தொற்று போன்றவற்றாலும் ஏற்படலாம். எனவே, பெற்றோர்கள் கவனத்துடன் செய்வது முக்கியம். இதனால் குழந்தைக்கு சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்க முடியும்.

Follow Us