Parenting Guides: குழந்தைகள் தொடர்ந்து கட்டைவிரலை உறிஞ்சுகிறதா? மறக்கவைக்க மருத்துவர் ஜனனி ஜெயபால் டிப்ஸ்!
Thumb Sucking Remedies: ஒரு குழந்தை கட்டைவிரலை சப்புவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். 2 வயதுக்குட்பட்ட குழந்தைகள் கட்டைவிரலை சப்பும்போது, அவர்களுக்கு ஒருவித நிம்மதியான உணர்வை தரும். இதுமட்டுமின்றி, குழந்தைகளுக்கு பற்கள் முளைப்பது மிகவும் வேதனையை தரும். மேலும், குழந்தைகள் கட்டவிரலை சப்பி நிவாரணம் பெற்று கொள்வார்கள்.
புதிதாக பிறந்த குழந்தையின் (Childrens Care) கட்டைவிரலை சப்புவது மிகவும் பொதுவான ஒன்று. கர்ப்ப காலத்தின்போது எடுக்கப்படும் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன்கள், தாயின் வயிற்றில் இருக்கும்போதே குழந்தைகள் கட்டைவிரலை சப்ப தொடங்குவதை பார்க்கலாம். இருப்பினும், வயது அதிகரிக்கும்போது இந்த பழக்கத்தை நீக்கமுடியாமல், பெற்றோர்கள் (Parents) தவிக்கின்றனர். பொதுவாக 2 முதல் 4 வயதுக்குட்பட்ட குழந்தைகள் கட்டைவிரலை சப்புவார்கள். இதற்கு பல காரணங்கள் உள்ளன. கட்டைவிடலில் வேப்ப எண்ணெயை வைப்பதன் மூலமோ அல்லது கட்டைவிடலில் துணியை சுற்றுவதன்மூலமோ இந்த பழக்கம் போய்விடும் என்று பெற்றோர்கள் நினைக்கிறார்கள். ஆனால், சில குழந்தைகள் என்ன செய்தாலும் ரகசியமாக சப்ப தொடங்குகிறார்கள். இந்தநிலையில், குழந்தை ஏன் கட்டைவிரலை சப்புகிறது என்பதை மருத்துவர் ஜனனி ஜெயபால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ALSO READ: குழந்தைகள் எந்த வயதில் பல் துலக்க வேண்டும்..? பல் மருத்துவர் ஜனனி விளக்கம்!




குழந்தைகள் கட்டைவிரலை சப்புவதற்கு காரணம் என்ன..?
View this post on Instagram
ஒரு குழந்தை கட்டைவிரலை சப்புவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். 2 வயதுக்குட்பட்ட குழந்தைகள் கட்டைவிரலை சப்பும்போது, அவர்களுக்கு ஒருவித நிம்மதியான உணர்வை தரும். இதுமட்டுமின்றி, குழந்தைகளுக்கு பற்கள் முளைப்பது மிகவும் வேதனையை தரும். மேலும், குழந்தைகள் கட்டவிரலை சப்பி நிவாரணம் பெற்று கொள்வார்கள். சில இளம் குழந்தைகள் கட்டைவிடலை சப்பி தூங்க முயற்சி செய்வார்கள். குழந்தைகள் வளர வளர இந்த பழக்கம் தொடரும்.
பெரும்பாலான குழந்தைகள் 2 முதல் 4 வயதுக்குள் இந்தப் பழக்கத்தை விட்டுவிடுகிறார்கள். இந்த வயது வரை, இது ஒரு பிரச்சனையாக மாறாது, ஆனால் அந்த வயதிற்குப் பிறகு அது பிரச்சனையாக மாறக்கூடும். ஒரு குழந்தை 3 வயதிற்குப் பிறகும் கட்டை விரலை உறிஞ்சுவதைத் தொடர்ந்தால், இந்தப் பழக்கம் அவர்களின் பற்கள் மற்றும் வாய் வளர்ச்சியில் பிரச்சினைகளை ஏற்படுத்தும். மேலும், குழந்தை சரியாகப் பேசுவதையும் கடினமாக்கும்.
கட்டைவிரலை சப்புவதால் ஏற்படும் பக்கவிளைவுகள்:
- தொடர்ந்து கட்டைவிரலை உறிஞ்சுவது குழந்தையின் பற்கள் மேல்நோக்கி செல்ல வழிவகுக்கும்.
- அதிகமாக கட்டைவிரலை சப்புவது குழந்தைகளில் கட்டைவிரல் எலும்புகளின் வளர்ச்சியை தடுக்கும்.
- குழந்தைகளின் பேச்சு வழக்கத்தை குறைத்து திக்குவாய் பிரச்சனையை அதிகரிக்கும்.
- நகங்களில் வாழும் பாக்டீரியாக்களால் குழந்தைகளுக்கு தொற்று பிரச்சனையை ஏற்படுத்தும்.
ALSO READ: குழந்தைகளுக்கு இந்த வயதில் மொபைல் போனா..? எச்சரிக்கும் மருத்துவர் நான்சி!
தடுப்பது எப்படி..?
- குழந்தை உங்களை கவனிக்காமல் கட்டை விரலை சப்பினால், அவர்களது கவனத்தை ஈர்த்து, அவ்வாறு செய்ய வேண்டாம் என்று அன்பாக கட்டளை இடுங்கள்.
- குழந்தை தனது கட்டை விரலை சப்பாதபோது, அதை புகழ்ந்து பேசி, பரிசு கொடுங்கள்.
- குழந்தை 7 முதல் 8 வயதை தொட்ட பிறகும், கட்டைவிரலை சப்பவில்லை என்றால், நிச்சயமாக மருத்துவரிடம் அழைத்து செல்லுங்கள்.