பிரெஞ்சு ஃபிரைஸ் பின்னால் இருக்கும் ஆபத்துகள் – எச்சரிக்கும் மருத்துவர்கள்
French Fries Health Risks : உணவகங்களுக்கு சென்றால் முதலில் ஆர்டர் செய்வது பிரெஞ்சு ஃபிரைஸாகத் தான் இருக்கும். ஆனால் அதனை தொடர்ச்சியாக சாப்பிடுவது உடல் பருமன் முதல் இதய நோய் வரை கடுமையான உடல் நல பிரச்னைகளை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

பிரெஞ்சு ஃபிரைஸ் (French Fries) தற்போது பிரபலமான உணவாக இருந்து வருகிறது. குழந்தைகள் (Children) முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் உணவாக மாறி வருகிறது. காரணம் அதன் சுவை. உணவகங்களுக்கு போனால் முதலில் ஆர்டர் செய்வது பிரெஞ்சு ஃபிரைஸாகத் தான் இருக்கும். இந்த நிலையில் அடிக்கடி ஃபிரெஞ்சு பிரைஸ் சாப்பிட்டால் உடல் பருமன் துவங்கி இதய நோய் (Heart Disease) வரை கடுமையான உடல்நல பிரச்னைகளை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். அதுகுறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
பிரெஞ்சு ஃபிரைஸ் நமக்கு உடனடி மகிழ்ச்சியைத் தந்தாலும், நீண்ட காலத்திற்கு அவை நம் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். அவற்றில் உள்ள சில பொருட்கள் நம் உடலுக்கு மிகவும் ஆபத்தானவை.
இதையும் படிக்க : இயற்கையாக கல்லீரலை சுத்தப்படுத்துவது எப்படி ? இதை டிரை பண்ணுங்க!
பிரெஞ்சு ஃபிரைஸினால் உடல் நலனுக்கு ஏற்படும் பாதிப்புகள்
- பிரெஞ்சு ஃபிரைஸை தயாரிக்கும்போது அதனை அதிக நேரம் வறுக்கும்போது அதில் உள்ள கொழுப்புகள் அதிக அளவில் படிகிரது. இவை இதய ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். மேலும் உடல் பருமனுக்கு வழிவகுக்கு்.
- உருளைக்கிழங்கை அதிக வெப்பநிலையில் வறுக்கும்போது அக்ரிலாமைடு என்ற வேதிப்பொருள் உருவாகிறது. இது ஒரு புற்றுநோய் காரணியாக கருதப்படுகிறது.
- இதில் சுவைக்காக அதிக உப்பு பயன்படுத்தப்படுகிறது. அதிக சோடியம் இரத்த அழுத்ததை அதிகரித்து இதய பிரச்னைகளை ஏற்படுத்தும்.
- இதில் அதிக கலோரி கொண்டதன் காரணமாக, உடல் பருமனுக்கு வழிவகுக்கும்.
- இதில் உள்ள கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் கிளைசெமிக் குறியீடு இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்க செய்யும்.
- இது செரிமான பிரச்னையை ஏற்படுத்தும் மேலும் மலச்சிக்கல் போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தும்.
இதையும் படிக்க : சர்க்கரைக்கு மாற்றாக தேனை சாப்பிடலாமா? உண்மை என்ன?
தவிர்ப்பது எப்படி?
பிரெஞ்சு ஃபிரைஸ்க்கு மாற்றாக வேக வைத்த சர்க்கரைவள்ளி கிழங்கு, காய்கறி சாலட் போன்ற ஆரோக்கியமான சிற்றுண்டிகளை தேர்வு செய்யலாம்.
பொறியலாக சாப்பிடுவதற்கு பதிலாக உருளைக்கிழங்கை வேக வைத்து சாப்பிடலாம்.
மீறி பிரெஞ்சு ஃபிரைஸ் சாப்பிட வேண்டும் என்றால் குறைவான எண்ணெய் மற்றும் உப்பை பயன்படுத்தி வீட்டிலேயே செய்து சாப்பிடலாம்.
முடிந்தவரை வெளியே சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. கடைகளில் உணவுகளை தயாரிக்கும்போது சுவை ஒன்றையே பிரதானமாக கொண்டிருக்கிறார்கள். அதன் தரத்தில் உணவகங்கள் கவனம் செலுத்துவதில்லை. இதனால் எந்த உணவாக இருந்தாலும் அடிக்கடி உணவகங்களில் , சாலையோர கடைகளில் சாப்பிடும்போது அது நம் உடல் நலனில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். மாதம் ஒருமுறை அல்லது பிறந்த நாள் போன்ற சிறப்பு தருணங்களில் மட்டும் வெளியே சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருக்கலாம்.