கேன்சருக்கான தடுப்பூசி.. பயன்பாட்டுக்கு வந்ததாக ரஷ்யா அறிவிப்பு.. குணப்படுத்துமா?
Russia Cancer Vaccine : உலக நாடுகளில் புற்றுநோயால் பலரும் உயிரிழந்து வருகின்றனர். எனவே, புற்றுநோயால் உயிரிழப்பதை தடுக்க, ரஷ்யா தடுப்பூசி ஒன்றை கண்டுபிடித்து இருந்தது. இந்த தடுப்பூசி குறித்து பல கட்ட சோதனைகள், ஆராய்ச்சிகள் நடத்தப்பட்ட நிலையில், தற்போது அந்த தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்துள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

ரஷ்யா, செப்டம்பர் 07 : ரஷ்யா கண்டுபிடித்த புற்றுநோய் தடுப்பூசி (Russia Cancer Vaccine) தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. என்டோரோமிக்ஸ் எனும் புற்றுநோய் தடுப்பூசியை இனி நோயாளிகளுக்கு செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுளளது. பல கட்ட ஆய்வுகளுக்கு ரஷ்யாவின் புற்றுநோய் தடுப்பூசி தற்போது பயன்பாட்டிற்கு வந்துள்ளது. மனித குலத்திற்கே அச்றுத்தலாக உள்ள நோய்களில் புற்றுநோயும் ஒன்று. பெண்கள், ஆண்கள் என அனைவரும் புற்றுநோயால் உயிரிழந்து வருகின்றனர. மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய் என பல விதங்களில் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நம் இந்தியாவில் இந்தியாவில் தனிநபர்கள் இப்போது 11% புற்றுநோயால் பாதிக்கப்படும் அபாயத்தை எதிர்கொள்வதாக ஆய்வில் கூறப்படுகிறது.
2024 ஆம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் சுமார் 15.6 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டனர். இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளில் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. மனித இனத்திற்கே பெரும் சவாலாக உள்ள புற்றுநோய்யை குணப்படுத்தவும் இதற்கு தடுப்பு மருந்துகளும் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால், அதற்கான முயற்சிகளில் பல்வேறு நாடுகள் ஈடுபட்ட நிலையில், அதில், ரஷ்யா தீவிரமாக இருந்தது. ரஷ்யா புற்றுநோய்க்கு MRNA என்ற தடுப்பூசியை கண்டுபிடித்தது. இந்த தடுப்பூசி ரஷ்ய சுகாதார அமைச்சகத்தின் தேசிய மருத்துவ ஆராய்ச்சி கதிரியக்க மையம், ரஷ்ய அறிவியல் அகாடமியின் (RAS) ஏங்கல்ஹார்ட் மூலக்கூறு உயிரியல் நிறுவனத்துடன் (EIMB) இணைந்து உருவாக்கியது.
Also Read : ஆப்கானிஸ்தானில் இடிபாடுகளில் சிக்கிய பெண்கள் மீட்கப்படவில்லை?.. அதிர்ச்சியூட்டும் காரணம்!




ரஷ்யாவின் கேன்சர் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்தது
இந்த தடுப்பூசி பல கட்ட ஆய்வுகள், சோதனைகளுக்கு பிறகு பயன்பாட்டிற்கு வந்ததாக ரஷ்யா அறிவித்துள்ளது. என்டோரோமிக்ஸ் எனும் இந்த தடுப்பூசி புற்றுநோய் செல்களை அடையாளம் கண்டு அழிக்கும் தன்மை கொண்டதாக மருத்தவர்கள் கூறினர். கீமோதெரபி, கதிர்வீச்சு போன்ற சிகிச்சைகள் போலல்லாமல், ஒவ்வொரு நோயாளிகளுக்கு தனித்துவமாக இந்த தடுப்பூசி அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தடுப்பூசியை ரஷ்யா பல கட்ட சோதனைகளை நடத்தியது. இதில் 48 தன்னார்வலர்கள் பங்கேற்றனர். இப்படி பல கட்ட சோதனைகளுக்கு பிறகு, ரஷ்யா கண்டுபிடித்த புற்றுநோய் தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இதுகுறித்து ரஷ்யா அதிகாரிகள் கூறுகையில், “தடுப்பூசி இப்போது பயன்பாட்டிற்கு தயாராக உள்ளது; நாங்கள் அதிகாரப்பூர்வ ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம்” என்றனர்.
Also Read : விண்வெளியில் நாசா கண்டுபிடித்த இரண்டு புதிய எக்ஸோப்ளானெட்ஸ்!
கேன்சர் தடுப்பூசி குணப்படுத்துமா?
மருத்துவர்களின் கூற்றுப்படி, இந்த தடுப்பூசி புற்றுநோய் கட்டிகளின் வளர்ச்சியை தடுத்தும் நிறுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. புற்றுநோயின் தன்மையை குறித்து இந்த தடுப்பூசி செலுத்தப்படும் என்கின்றனர். மேலும், இந்த தடுப்பூசி புற்றுநோய் கட்டிகளின் வளர்ச்சியை 60 முதல் 80 சதவீதம் குறைக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த தடுப்பூசியில் புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்கள் நீண்ட காலம் உயிர் வாழலாம் என்றும் கூறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.