Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Health Tips: கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் வருவதற்கான 3 காரணங்கள்.. தடுப்பது எப்படி..?

Cervical Cancer Symptoms: கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் பெண்களிடையே அதிகம் காணப்படும் நோய் ஆகும். HPV வைரஸ், புகைபிடித்தல் ஆகியவை முக்கிய காரணங்கள் ஆகும். சோர்வு, ஒழுங்கற்ற மாதவிடாய், பிறப்புறுப்பு வெளியேற்றம் போன்றவை கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயின் அறிகுறிகள் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

Health Tips: கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் வருவதற்கான 3 காரணங்கள்.. தடுப்பது எப்படி..?
கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்Image Source: Freepik
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 03 Sep 2025 15:31 PM

உலகம் முழுவதும் இதுவரை 200க்கும் மேற்பட்ட புற்றுநோய் (Cancer) கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இன்று நாம் முக்கியமான புற்றுநோயை பற்றி தெரிந்து கொள்வோம். இது பெண்களிடையே அதிகம் காணப்படுகிறது. அதுதான் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் என்று அழைக்கப்படுகிறது. உலக சுகாதார மையத்தின் (World Health Organization) கூற்று படி, இது உலகில் நான்காவது பொதுவான கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய். இதில், 90 சதவீதம் தடுக்கக்கூடியதே ஆகும். அதன்படி, கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயின் அறிகுறிகள் என்ன..? எதனால் இது உருவாகிறது..? உள்ளிட்ட விவரங்களை இங்கே தெரிந்து கொள்வோம்.

இந்தியாவில் பல பெண்கள் 30 வயதிற்குப் பிறகு இந்த புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள். ஆனால் இந்த புற்றுநோய் ஏன் ஏற்படுகிறது என்று பலரும் அறிவது இல்லை. மேலும், இதன் அறிகுறிகளை தெரியாமல் புறக்கணிக்கவும் செய்கிறார்கள். சில பெண்கள் வயது அதிகரிப்பு காரணமாகவே பலவீனமடைவதாக நினைக்கிறார்கள். ஆனால் சோர்வு, முதுகுவலி, ஒழுங்கற்ற மாதவிடாய் போன்ற அறிகுறிகள் வயது அதிகரிக்கும் போது மட்டுமல்ல, கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயின் தொடக்கத்தின் அறிகுறிகளாகும்.

ALSO READ: செய்தித்தாளில் வைக்கப்பட்ட உணவை சாப்பிடலாமா..? செய்தித்தாள் மையின் ஆபத்துகள்!

HPV வைரஸ் தாக்கம்:

Human Papillomavirus Infection வைரஸின் முதல் காரணம் HPV வைரஸ் ஆகும். இந்த வைரஸ் பாலியல் ரீதியாக பரவும் வைரஸ் ஆகும். பாதிக்கப்பட்ட துணையுடன் தொடர்பு கொள்வதன் மூலம் இது பரவுகிறது. முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த HPV வைரஸ் புற்றுநோயாக மாறாது. ஆனால் இந்த வைரஸ் உடலில் நீண்ட நேரம் தங்கி உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்துகிறது. இந்த வைரஸ் கர்ப்பப்பை வாய் செல்களையும் சேதப்படுத்தும்.

நீங்கள் புகைபிடிப்பவராக இல்லாவிட்டாலும், தொடர்ந்து புகை பிடிக்கும் பழக்கம் கொண்டவர்களுக்கு, இது நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்துகிறது. இதன் காரணமாக உடலால் தொற்றுநோயை எதிர்த்துப் போராட முடியாது. மேலும் வைரஸ் உங்களை கெட்டியாக பிடித்துக் கொள்கிறது. புகைபிடிக்கும் பெண்களுக்கு கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகமாக இருப்பதாக பல ஆராய்ச்சிகள் கண்டறிந்துள்ளன.

பிறப்புறுப்பில் வெளியேற்றம்:

பிறப்புறுப்பில் வெளியேற்றம் என்பது உங்கள் யோனியிலிருந்து வெளிவரும் ஒரு வகை வெள்ளை திரவமாகும். இதை வெள்ளை படிதல் என்று சில சமயம் கூறுவார்கள். இது இயல்பானது என்றால், அடிக்கடி ஏற்பட்டால் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். சில பெண்கள் பயம் அல்லது சங்கடம் காரணமாக அதைப் புறக்கணிக்கிறார்கள். ஆனால் ஒருவருக்கு நீண்ட காலமாக பிறப்புறுப்பு வெளியேற்றம் இருந்தாலோ, அதிகபடியான துர்நாற்றம் வீசினாலோ அல்லது ஒழுங்கற்ற மாதவிடாய் இருந்தாலோ உடனடியாக மருத்துவரை தொடர்பு கொள்வது நல்லது.

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தவிர்ப்பது எப்படி..?

HPV தடுப்பூசி 9 முதல் 14 வயது வரையிலான சிறுமிகளுக்கு வழங்கப்பட வேண்டும், இந்த தடுப்பூசி வைரஸை எதிர்த்துப் போராட உடலைத் தயார்படுத்துகிறது. இது தவிர, ஒவ்வொரு பெண்ணும் 30 வயதிற்குப் பிறகு தொடர்ந்து பேப் ஸ்மியர் பரிசோதனையைச் செய்ய வேண்டும். இது ஆரம்ப கட்டங்களில் எந்த ஆபத்தையும் கண்டறியும்.

ALSO READ: இதய நோய்க்கு காரணமாகும் மன அழுத்தம் – ஆய்வில் அதிர்ச்சி தகவல் – தவிர்ப்பது எப்படி?

வாழ்க்கை முறை மாற்றங்கள்:

  • எந்த வகையான தொற்றுநோயையும் தவிர்க்க சீரான உணவை உட்கொள்வது முக்கியம்.
  • புகைப்பிடிப்பவராக இருந்தால் முதலில் புகைபிடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
  • உங்கள் துணையுடன் பாதுகாப்பான உறவை வைத்திருக்க வேண்டும்.
  • உங்கள் உடலில் தொடர்ச்சியான சோர்வு, இடுப்பு அல்லது முதுகில் வலி, உடலுறவுக்குப் பிறகு இரத்தப்போக்கு அல்லது துர்நாற்றம் வீசும் வெளியேற்றம் போன்ற ஏதேனும் அறிகுறிகளைக் கண்டால், உடனடியாக பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
  • சரியான நேரத்தில் பரிசோதனை செய்து கொள்வது புற்றுநோய் போன்ற நோய்களைத் தடுக்க உதவும்.