Health Tips: செய்தித்தாளில் வைக்கப்பட்ட உணவை சாப்பிடலாமா..? செய்தித்தாள் மையின் ஆபத்துகள்!
Eating Food Wrapped in Newspaper: பலர் சாலையோர உணவை செய்தித்தாளில் சுற்றி சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு மிகவும் ஆபத்தானது. செய்தித்தாளின் மையில் உள்ள ஈயம், காட்மியம் போன்ற ரசாயனங்கள் சூடான உணவுடன் கலந்து புற்றுநோய், சிறுநீரக, கல்லீரல் பாதிப்பு போன்ற நோய்களை ஏற்படுத்தும்.

பல ஆண்டுகாலமாக நம்மில் பலர் சாலையோர உணவையோ அல்லது வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவையோ செய்தித்தாள்களில் சுற்றி அமுக்கி எண்ணெய் பிழிந்து சாப்பிடுவோம். ஆனால், இந்த பழக்கம் நம் ஆரோக்கியத்திற்கு எவ்வளவு ஆபத்தானது தெரியுமா..? செய்தித்தாள்களில் (News Paper) வைக்கப்படும் உணவு உடலில் விஷம் போல செயல்படக்கூடும் என்றும், சில நேரங்களில் புற்றுநோய் (Cancer) வரவும் வாய்ப்புள்ளதாகவும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். செய்தித்தாள்களில் வைத்து அமுக்கப்படும் பஜ்ஜி, வடை போன்ற உணவுகள் உடலுக்கு என்ன தீங்கு விளைவிக்கும், புற்றுநோயை தவிர வேறு என்ன நோய்களை ஏற்படுத்தும் உள்ளிட்ட விவரங்களை இங்கே தெரிந்து கொள்வோம்.
செய்தித்தாள்களில் உணவை வைத்து சாப்பிடலாமா..?
தீங்கு விளைவிக்கும் மையால் ஆன செய்தித்தாள் நம் உடலில் நுழைந்தால், அது செல்கள், டிஎன்ஏ மற்றும் இரத்தத்தை சேதப்படுத்தும் வாய்ப்புள்ளது. குறிப்பாக, சூடான பஜ்ஜி, வடை போன்ற உணவுகளை காகித்தத்தில் அழுத்தி சாப்பிடும்போது அதன் பக்க விளைவுகள் அதிகம். சூடான எண்ணெயில் பொரித்த உணவு செய்தித்தாளின் ரசாயனங்களுடன் கலந்து, பின்னர் அது சுறுசுறுப்பாகி உடலை விரைவாக சேதப்படுத்துகிறது.
ALSO READ: சமையல் எண்ணெய் எப்படி இதய நோய் பிரச்சனையை அதிகரிக்கிறது? மாரடைப்புக்கான 5 முக்கிய அறிகுறிகள்!




FSSAI எச்சரிக்கை:
FSSAI என்பது இந்தியாவின் ஒரு உணவு தொடர்பான ஒழுங்குமுறை அமைப்பாகும். இதுகுறித்து அந்த அமைப்பு மேற்கொண்ட ஆராய்ச்சியில், செய்தித்தாள்களில் வைக்கப்பட்டுள்ள உணவை உட்கொள்வது குறித்து ஒரு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்காக ஒரு அதிகாரப்பூர்வ ஆலோசனையும் செயல்படுத்தப்பட்டது. அதன்படி, செய்தித்தாள்களில் பயன்படுத்தப்படும் அச்சிடும் மையில் ஈயம், காட்மியம், கணிம என்ணெய் மற்றும் நறுமண ஹைட்ரோகார்பன்கள் எனப்படும் இராசயன கூறுகள் உள்ளன. இவை உயிர்வேதியியல் என்று அழைக்கப்படுகின்றன. சூடான எண்ணெய் செய்திதாள்களில் உள்ள இராசயனங்களுடன் வினைபுரிந்து புதிய பாக்டீரியாக்கள் உருவாகின்றன. இவை புற்றுநோயை ஏற்படுத்துகின்றன.
வேறு என்னென்ன ஆபத்துகள் உள்ளன..?
செய்தித்தாள்களில் உணவு சாப்பிடுவதால் புற்றுநோய் வருவது மட்டுமல்லாமல், சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பாதிப்பு, நுரையீரல் தொற்று போன்ற பல நோய்களும் ஏற்படலாம். இதுபோன்ற உணவை சாப்பிடுவதால் வயிற்றுப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகளும் அதிகரிக்கும். இது லுகேமியாவையும் ஏற்படுத்தும். பல வகையான பூஞ்சை பாக்டீரியாக்கள் மற்றும் தூசிகளும் செய்தித்தாள்களுடன் வருகின்றன, இது சுவாச நோய்கள், ஆஸ்துமா மற்றும் மாரடைப்புக்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது.
என்ன செய்யலாம்..?
இந்த பழக்கத்தை மாற்றுவதுதான் ஒரே தீர்வு. செய்தித்தாள்களில் உணவுப் பொருட்களைப் பொட்டலம் கட்டும் இடங்களிலிருந்து உணவை எடுத்துக்கொள்ளாதீர்கள். அதேபோல், நீங்கள் சாப்பிட ஆசைப்படும் வடை, பஜ்ஜி அதிக எண்ணெய் கொண்டதாக இருந்தால் டிஸ்யூ பேப்பர் போன்றவற்றை பயன்படுத்தி எண்ணெயை வெளியேறலாம்.
ALSO READ: தும்மலை அடக்கலாமா வேண்டாமா? இது ஆபத்தை தருமா..?
வீட்டில் சமைக்கும்போது கூட பூரி, சிக்கன் போன்றவற்றை சூடாக இருக்கும்போது டிஸ்யூ பேப்பரில் வைப்பது பாதுகாப்பானது. எக்காரணத்தை கொண்டும் செய்தித்தாள்களில் சூடான உணவு பொருட்களை பயன்படுத்தி சாப்பிட வேண்டாம்.