Men’s Health: 40 வயதுக்கு மேற்பட்ட ஆண்களா நீங்கள்..? ஆரோக்கியத்திற்கு இந்த உணவுமுறை மாற்றம் தேவை!
Healthy Eating for Men Over 40: 40 வயதிற்கு மேற்பட்ட ஆண்களின் உடல்நலனை மேம்படுத்த சிறந்த உணவுப் பழக்கங்களை இந்தக் கட்டுரை விளக்குகிறது. நீர்ச்சத்து, நார்ச்சத்து, நல்ல கொழுப்பு, தானியங்கள் மற்றும் புரதம் நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.

ஆண்கள் 40 வயதை (Men’s Health) கடந்துவிட்டாலோ அல்லது 40 வயதை தொடபோகிறவர்கள் என்றாலோ, உங்கள் உடலில் பல மாற்றங்கள் ஏற்படும். இந்த மாற்றங்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் இருக்கலாம். இந்த மாற்றங்களுக்கு நீங்கள் எடுத்துகொள்ளும் உணவு முறையும் ஒரு காரணமாக இருக்கலாம். 40 வயதை தொடும்போது உங்கள் உணவை (Healthy Food) மாற்றவதன் மூலம், உடல் மற்றும் மன சமநிலையை சரிசெய்யலாம். ஆரோக்கியத்தை பராமரிக்க உணவில் சில மாற்றங்களை செய்வதன்மூலம், 40 வயதிற்குப் பிறகும், நீங்கள் 20 வயது இளைஞனைப் போல் இருக்கலாம். அதன்படி, ஆண்கள் என்னென்ன உணவுகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.
ஆரோக்கியம்:
இன்றைய நவீன காலகட்டத்தில், உங்களை ஆரோக்கியமாக வைத்திருப்பது மிகவும் சவாலான ஒன்றாகும். முன்பெல்லாம், ஆண்கள் வியர்வை சிந்தி கடுமையாக உழைத்தார்கள். ஆனால், தற்போது அனைத்து வேலைகளும் கணினி அல்லது மடிக்கணினியை பயன்படுத்தி உடல் செயல்பாடு இல்லாமல் வேலை பார்க்கிறார்கள். மேலும், ஆரோக்கியமற்ற உணவுகளான துரித மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகமாக எடுத்துக்கொள்கிறார்கள். இதுமாதிரியான சூழ்நிலைகளில் நீங்களும் 40 வயதை எட்டியிருந்தால் உங்கள் உணவுப் பழக்கத்தில் சில மாற்றங்களை செய்ய வேண்டியது முக்கியம்.
40 வயதிற்கு பிறகு பெரும்பாலானோருக்கு உடல்நலப் பிரச்சினைகள் அடிக்கடி ஏற்பட தொடங்கும். சர்க்கரை நோய், உடல் பருமன், மெதுவான வளர்சிதை மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடைதல் போன்றவை ஏற்படும். இது மட்டுமின்றி, இதயம் தொடர்பான நோய்களும் வரக்கூடிய ஆபத்துகளும் உள்ளன. வயது அதிகரிப்பது பெரும்பாலும் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். வயதுக்கு ஏற்ப, உடலின் வெளிப்புற அமைப்பில் மாற்றங்கள் காணப்படுகின்றன, ஆனால் இது நபரின் உள் உறுப்புகளையும் பாதிக்கிறது. அத்தகைய சூழ்நிலையில், உங்கள் உடலையும் உள் உறுப்புகளையும் ஆரோக்கியமாக வைக்க முன்னுரிமை அளிக்க வேண்டும்.




ALSO READ: செய்தித்தாளில் வைக்கப்பட்ட உணவை சாப்பிடலாமா..? செய்தித்தாள் மையின் ஆபத்துகள்!
நீர்ச்சத்து:
40 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்யவும் நீரேற்றத்துடன் இருப்பது முக்கியம். ஒரு நாளைக்கு குறைந்தது 2.5 லிட்டர் முதல் 3 லிட்டர் தண்ணீர் எடுத்து கொள்ள வேண்டும். உங்களுக்கு வெறுமனமே தண்ணீர் குடிக்க போர் அடித்தால் இளநீர், ஜூஸ் ஆகியவற்றை எடுத்து கொள்ளலாம். இது உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.
நார்ச்சத்து:
நார்ச்சத்து நம் உடலுக்கு மிகவும் முக்கியமானது. இது மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளிலிருந்து உங்களைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், அதன் மூலம் உங்கள் எடையை சமநிலையில் வைத்திருக்கவும் உதவுகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை உங்கள் உணவில் சேர்க்க வேண்டும். கொழுப்பின் அளவு மற்றும் இரத்த அழுத்தம் நார்ச்சத்து மூலம் மட்டுமே சமநிலையில் இருக்கும். நார்ச்சத்துக்காக நீங்கள் ப்ரோக்கோலி, முட்டைக்கோஸ், வால்நட்ஸ், முளைகள், கிரீன் டீ, பெர்ரி போன்றவற்றை உட்கொள்ளலாம். இந்த அனைத்து பொருட்களிலும் ஒமேகா 3 உள்ளது, இது புற்றுநோயிலிருந்து உங்களைப் பாதுகாக்கிறது.
நல்ல கொழுப்பு:
நாம் தினமும் சாப்பிடும் உணவுகளில் கெட்ட கொழுப்புகள் அதிகம். எனவே, வெண்ணெய், ஆலிவ், நட்ஸ் மற்றும் பாதாம் போன்ற நல்ல கொழுப்புகளை கொண்டவற்றை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த உணவுகள் அனைத்தும் நல்ல கொழுப்புகளால் நிறைந்தவை. இது உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
ALSO READ: இரவு உணவை தாமதமாக சாப்பிடுகிறீர்களா? காத்திருக்கும் நோய்களின் ஆபத்து
தானியங்கள்:
உடல் ஆரோக்கியத்திற்கு தானியங்கள் மிக முக்கியம். அதன்படி சோளம், கம்பு, குதிரைவாலி, பச்சை பயிறு, சிவப்பு அரிசி போன்ற தானிய வகைகளை எடுத்துகொள்ளலாம். மேலும், இவற்றி வைட்டமின் பி உள்ளது. இது உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவி செய்யும்.
புரதம்:
நீங்கள் தினமும் சோயா பால், டோஃபு போன்றவை புரதங்கள் நிறைந்தவையாகும். இது தவிர மட்டன், சிக்கன், முட்டை, மீன் மற்றும் ட்ரை ப்ரூட்ஸ் எடுத்து கொள்ளலாம்.