Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஆப்கானிஸ்தானில் இடிபாடுகளில் சிக்கிய பெண்கள் மீட்கப்படவில்லை?.. அதிர்ச்சியூட்டும் காரணம்!

Afghanistan Earthquake Issue | ஆப்கானிஸ்தானில் ஆகஸ்ட் 31, 2025 அன்று ஏற்பட்ட நிலநடுக்கம் அங்கு மிக கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியது. இதன் காரணமாக அங்கு இதுவரை சுமார் 2,200 பேர் பலியாகியுள்ள நிலையில், மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கி தவித்து வருகின்றனர்.

ஆப்கானிஸ்தானில் இடிபாடுகளில் சிக்கிய பெண்கள் மீட்கப்படவில்லை?.. அதிர்ச்சியூட்டும் காரணம்!
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதி
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 06 Sep 2025 12:14 PM IST

காபூல், செப்டம்பர் 06 : ஆபாகிஸ்தானை (Afghanistan) கடந்த சில நாட்களுக்கு முன்பு மிக கடுமையான நிலநடுக்கம் தாக்கியுள்ள நிலையில், அங்கு இடிபாடுகளில் சிக்கியுள்ள பெண்களை மீட்கும் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது, அங்கு ஆண்கள் பெண்களை தொடக்கூடாது என்ற விதி உள்ளதால், இடிபாடுகளில் சிக்கியுள்ள பெண்களை கண்டும் மீட்பு படையினர் அவர்களை மீட்காமல் அங்கேயே விட்டுச் செல்வதாக அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் நிலவும் இந்த நிலமை குறித்து விரிவாக பார்க்கலாம்.

பெண்களை மீட்க முடியாது? – ஆபாகிஸ்தானில் அவல நிலை

ஆகஸ்ட் 31, 2025 அன்று ஆப்கானிஸ்தானில் மிக கடுமையான நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் மிக அதிகமாக இருந்தது. அதாவது 6.0 என்ற ரிக்டர் அளவில் அங்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக ஆப்கானிஸ்தான் மிக கடுமையான பாதிப்புகளை சந்தித்தது. நிலநடுக்கம் காரணமாக அங்கிருந்த கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகி விபத்துக்குள்ளாகின. அந்த கட்டடங்களில் பொதுமக்கள் இருந்த நிலையில், ஏராளமானோர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்துள்ளனர். இதுவரை இந்த நிலநடுக்கத்தில் சிக்கி சுமார் 2,200-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.

இதைய்ம் படிங்க : ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்… அதிர்ந்த கட்டிடங்கள்… 2,200 பேர் உயிரிழப்பு!

மீட்பு பணியில் ஏற்பட்டுள்ள சிக்கல்

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தில் சிக்கி 2,200 பேர் ஏற்கனவே பலியான நிலையில், அங்கு மேலும் பலர் கட்டட இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். இந்த கொடூர சம்பவத்தில் பலர் மாயமாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அங்கு மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், பெண்களை மீட்பதில் அங்கு மிகப்பெரிய, அதிர்ச்சியூட்டும் சிக்கல் உருவாகியுள்ளது. காரணம், ஆப்கானிஸ்தானில் தற்போது தாலிபான்களின் ஆட்சி நடைபெற்று வருகிறது. தாலிபான்கள் மிக கடுமையான சட்டங்களை அமலில் வைத்துள்ளனர். அத்தகைய சட்டங்களில் ஒன்றுதான் No Skin Contact with Males. 

இதையும் படிங்க : டென்மார்க்கில் கடலுக்குள் 8,500 ஆண்டுகள் பழமையான நகரம் கண்டுபிடிப்பு – ஆச்சரிய தகவல்

அதாவது ஆப்கானிஸ்தானில் உள்ள பெண்களை அவர்களது நெருங்கிய உறவுகள் மட்டுமே தொட வேண்டும். உதாரணமாக கணவர், தந்தை, சகோதரர்கள் மற்றும் பிள்ளைகள். இவர்களை தவிர வேறு யார் ஒருவர் ஒரு பெண்ணை தொட்டாலும் அது தண்டனைக்கு உரிய குற்றமாக கருதப்படுகிறது. இதன் காரணமாக தான் தற்போது ஆப்கானிஸ்தானில் பெண்களை மீட்கும் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தற்போது நிலநடுக்க பாதிப்புக்கு உள்ளாகியுள்ள பகுதியிலும் கூட இந்த சட்டம் மிக கடுமையாக பின்பற்றப்படுகிறது. இதன் காரணமாக, மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள ஆண்கள் பெண்களை கண்டாலும் அவர்களை மீட்காலம் செல்கின்றனர் என தகவல்கள் கூறுவது குறிப்பிடத்தக்கது.