Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்… அதிர்ந்த கட்டிடங்கள்… 2,200 பேர் உயிரிழப்பு!

Afghanistan Earthquake : ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 2025 செப்டம்பர் 5ஆம் தேதியான இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதாக தெரிகிறது. இதுவரை, 2000க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்து, மீட்பு பணிகள் நடந்து வரும் நிலையில், மீண்டும் ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்… அதிர்ந்த கட்டிடங்கள்… 2,200 பேர் உயிரிழப்பு!
ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்Image Source: PTI
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 05 Sep 2025 06:56 AM IST

ஆப்கானிஸ்தான், செப்டம்பர் 05 : ஆப்கானிஸ்தானில் மீண்டும் பயங்கர நிலநடுக்கம் (Afghanistan Earthquake) ஏற்பட்டுள்ளது. 2025 செப்டம்பர் 5ஆம் தேதியான இன்று அதிகாலையில் 4.8 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மூன்றாவது முறையக ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஆப்கானிஸதான் உருகுலைந்து இருக்கும் நிலையில், மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது, 2025 ஆகஸ்ட் 31ஆம் தேதி ஆப்கானிஸ்தானில் பல மாகாணங்களில் 6.0 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ஜலாலாபாத்தில் இருந்து சுமார் 27 கி.மீ தொலைவில் இருந்தது.

ஆப்கானிஸ்தானின் ஐந்தாவது பெரிய நகரமான ஜலாலாபாத்திலிருந்து 27 கிலோமீட்டர் தொலைவில், மேற்பரப்பிலிருந்து சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கத்தின் மையம் இருந்தது. நிலநடுக்கத்தின் அதிர்வுகள் அங்கிருந்து சுமார் 400 கிலோமீட்டர் தொலைவில், பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத் வரை உணரப்பட்டன. ஜலாலாபாத் பகுதியில் பெரும்பாலும் மண் வீடுகளை இருந்துள்ளன. 6.0 ரிக்டர் அளவுகோலில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதால், அப்பகுதியில் இருந்து வீடுகள் அனைத்தும் சேதம் அடைந்தன. இந்த நிலநடுக்கம் பல கிராமங்களை அழித்தது, மேலும் நிலநடுக்கத்தை தொடர்ந்து, மண்ணுக்குள் அப்படியே மக்கள் புதைந்தனர்.

Also Read : பாகிஸ்தானில் பயங்கரம்.. பேரணியில் குண்டுவெடித்து 14 பேர் பலி.. பலர் காயம்!

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்


உயரமான மலைகளால் சூழப்பட்ட நதி பள்ளத்தாக்குகளில் மக்கள் வசிக்கும் குனாரில் பெரும்பாலான உயிர் மற்றும் சேதம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலநடுத்தால் 2,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் காயம் அடைந்துள்ளனர்.  பலரும் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். இந்த மரணத்தின் பிடியில் இருந்து ஆப்கானிஸ்தான் மக்கள் வெளிவராத நிலையில், மீண்டும் ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

2025 செப்டம்பர் 5ஆம் தேதியான இன்று அதிகாலை 3:16 மணிக்கு ஆப்கானிஸ்தானில் மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது. 4.8 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மூன்று முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதாக கூறப்படுகிறது.

Also Read : ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்.. ரிக்டர் அளவுக்கோலில் 5.3 ஆக பதிவு..

முன்னதாக, 2025 செப்டம்பர் 4ஆம் தேதியான நேற்று இரவு 4.1, 4.9, 5.8 என்ற அளவுகோலில் பல்வேறு மாகாணங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், புதிதாக பாதிப்பு ஏற்படவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக, மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களும் வழங்கப்பட்டு வருகிறது.