Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

NASA : விண்வெளியில் நாசா கண்டுபிடித்த இரண்டு புதிய எக்ஸோப்ளானெட்ஸ்!

2 Earth-Sized Exoplanets | விண்வெளி தொடர்பான ஆராய்ச்சிகளில் நாசா தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது பூமி வடிவிலான இரண்டு எக்ஸோப்ளானெட்ஸ்களை நாசா கண்டுபிடித்துள்ளது. அவை பூமியில் இருந்து சுமார் 195 ஒலி ஆண்டுகளுக்கு பின்னால் இருப்பதாக விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

NASA : விண்வெளியில் நாசா கண்டுபிடித்த இரண்டு புதிய எக்ஸோப்ளானெட்ஸ்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 05 Sep 2025 11:46 AM IST

நாசா (NASA – National Aeronautical Space Administration) பாறை வடிவிலான இரண்டு எக்ஸோப்ளானெட்ஸ் (Exoplanets)  இருப்பதை கண்டுபிடித்துள்ளது. எக்ஸோப்ளானெட்ஸ் என்பது சூரிய குடும்பத்திற்கு வெளியே உள்ள நட்சத்திரம் ஆகும். இந்த இரண்டு எக்ஸோப்ளானெட்ஸ்களும் பூமியின் அளவை ஒத்ததாக இருப்பதாகவும், அவை பூமியில் இருந்து சுமார் 195 ஒலி ஆண்டுகளுக்கு பின்னால் இருப்பதாகவும் விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். அதிநவீன அம்சத்தை கொண்ட விண்வெளி கண்காணிப்பு கருவிகளை கொண்டு இந்த இரண்டு எக்ஸோப்ளானெட்ஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

விண்வெளியில் நாசா கண்டுபிடித்த இரண்டு புதிய எக்ஸோப்ளானெட்ஸ்

நாசா கண்டுபிடித்துள்ள இந்த இரண்டு எக்ஸோப்ளானெட்ஸ்களில் ஒன்று பூமியின் அளவை கொண்டிருக்கும் நிலையில், மற்றொன்று பூமியை விட அளவில் சற்று பெரியதாக உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. ஜெனீவா பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் குழு இந்த ஆய்வில் ஈடுபட்ட நிலையில், அவர்கள் இந்த இரண்டு எக்ஸோப்ளானெட்ஸ்களும் பூமியை விடவும் மிக குறைவான ஆர்பிட்டல் காலத்தை கொண்டிருப்பதாக கூறியுள்ளனர்.

இதையும் படிங்க : பாகிஸ்தானில் பயங்கரம்.. பேரணியில் குண்டுவெடித்து 14 பேர் பலி.. பலர் காயம்!

இந்த எக்ஸோப்ளானெட்ஸ்கள் குறித்து கூறும் விஞ்ஞானிகள், இந்த இரண்டு கிரகங்களும் பூமியுடன் ஒப்பிடும்போது குறுகிய சுற்றுப்பாதை காலங்களை கொண்டுள்ளன. இந்த கிரகங்கள் முதன்முதலில் 2020 ஆம்  ஆண்டு விண்வெளியில் ஏவப்பட்ட டிரான்சிட்டிங் எக்ஸோப்ளானெட் சர்வே சேட்டிலைட் (TESS – Transiting Exoplanet Survey Satellite) மூலம் முதன்முதலில் காணப்பட்டன என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

2 லட்சம் நட்சத்திரங்களை ஆய்வு செய்யும் ESPRESSO

இந்த எஸ்பிரசோ (ESPRESSO) என்பது ஒரு நட்சத்திரத்தின் இயக்கத்தில் உள்ள சிறிய தள்ளாட்டங்களை அளவிடுவது மட்டுமன்றி நட்சத்திர செயல்பாட்டின் அறிகுறிகளை சரிப்பார்க்கும் சக்திவாய்ந்த கருவியாகும். இந்த கருவி விஞ்ஞானிகளுக்கு கிரகங்களின் நிலை மற்றும் சுற்றுப்பாதையை அறிய மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இது சூரியனுக்கு அருகில் உள்ள சுமார் 2 லட்சம் பிரகாசமான நட்சத்திரங்களை ஆய்வு செய்து வருகிறது.

இதையும் படிங்க : ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்.. ரிக்டர் அளவுக்கோலில் 5.3 ஆக பதிவு..

இந்த கிரகங்களில் உள் கிரகமான TOI-2322 b, பூமியை போலவே உள்ளது. அது பூமியை விட 2.03 மடங்கு குறைவான நிறை கொண்டுள்ளது. இது ஒவ்வொரு 11.3 நாட்களுக்கும் சுற்றுகிறது. இந்த கிரகம் சுமார் 330 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை கொண்டுள்ள நிலையில், இது பூமியை விட அதிக வெப்பமானது என ஆய்வுகள் கூறுகின்றன. இதேபோல, வெளிப்புற கிரகமான TOI-2322 c, பூமியை விட 18 மடங்கு கனமானது என மதிப்பிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.