ஹெலிகாப்டரில் தொங்கியபடி சென்ற அமைச்சர் குடும்பம்.. போராட்டக்காரர்களிடம் இருந்து நூலிழையில் தப்பினர்!
Minister's Family Escapes Violence | நேபாளத்தில் வெடித்த வன்முறை காரணமாக போராட்டக்காரர்கள் அமைச்சர்களையும், அவர்களின் வீடுகள் மற்றும் குடும்பத்தை மையப்படுத்தி தாக்குதல்களை நடத்தினர். இந்த நிலையில், போராட்டக்காரர்களிடம் இருந்து தப்பிக்க அமைச்சர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் உடன் ஹெலிகாப்டரில் தப்பிச் சென்றுள்ளனர்.

காத்மாண்டு, செப்டம்பர் 12 : நேபாளத்தில் (Nepal) வெடித்த வன்முறை காரணமாக அமைச்சரின் குடும்பம் ஹெலிகாப்டர் கயிற்றை பிடித்துக்கொண்டு தப்பிச் செல்லும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. போராட்டக்காரர்கள் அமைச்சர்களின் வீடுகளை குறிவைத்து தாக்கிய நிலையில், தாக்குதலில் இருந்து தப்பிச் செல்வதற்காக பல அமைச்சர்கள் தங்களது குடும்பங்களுடம் ராணுவ ஹெலிகாப்டர்களில் தப்பிச் சென்றுள்ளனர். அந்த வகையில், ஒரு அமைச்சரின் குடும்பம் ஹெலிகாப்டரில் தப்பிச் செல்லும் வீடியோ காட்சி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
நேபாளத்தில் வெடித்த போராட்டம்
நேபாளத்தில் உரிய நெறிமுறைகளை பின்பற்றாமல் செயல்பட்டு வந்த சமூக உடக செயலிகளை அந்த நாட்டு அரசு முடக்கியது. அதாபது, உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக உள்ள ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய செயலிகள் அங்கு முடக்கப்பட்டன. அரசின் இந்த நடவடிக்கை அங்குள்ள இளைஞர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தும் விதமாக அமைந்தது. அதுமட்டுமன்றி, நாட்டில் ஊழல் அதிகரித்து வந்த நிலையில், அது இளைஞர்கள் மத்தியில் நிலவிய கோபத்தை மேலும் அதிகரிக்கும் விதமாக அமைந்துள்ளது. இந்த நிலையில், டிக் டாக் உள்ளிட்ட செயலிகள் மூலம் ஒன்று திரண்ட ஜென் சி தலைமுறையினர் அரசுக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுத்தனர். இதனால் அங்கு சில நாட்கள் பதற்றம் நீடித்தது.
இதையும் படிங்க : திருமணமான 4 மாதம்.. வரதட்சணை கொடுமையால் பெண் எடுத்த விபரீத முடிவு!
இணையத்தில் வைரலாகும் வீடியோ
Politicians escaping the wrath of the people in Nepal pic.twitter.com/tia5JjkqmL
— jim Njue (@jimNjue_) September 10, 2025
நேபாள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்த போராட்டக்காரர்கள் நாடாளுமன்றம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களை தாக்கி சேதப்படுத்தினர். அதுமட்டுமன்றி, அமைச்சர்களின் வீடுகளையும் அவர்கள் சூரையாடினர். இந்த நிலையில், போராட்டக்காரர்களுக்கு பயந்து அமைச்சர்கள் தங்களது குடும்பங்களுடன் ராணுவ ஹெலிகாப்டர்களில் தப்பிச் சென்றுள்ளனர். அவ்வாறு ஒரு அமைச்சர் தனது குடும்பத்துடன் ஹெலிகாப்டரில் தப்பிச் செல்வதற்கு முன்னதாகவே போராட்டக்காரர்கள் அவர்களை சூழ்ந்துக்கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க : 77 வயதில் பிளஸ் 2 தேர்வு எழுதிய மூதாட்டி.. 1,200-க்கு 829 மதிப்பெண்கள் பெற்று அசத்தல்!
இதனால் வேறு வழி இல்லாமல் அமைச்சர் தனது குடும்பத்துடன் ஹெலிகாப்டர் படிகட்டில் தொங்கியபடி பயணம் செய்கின்றனர். அதனை போராட்டக்காரர்கள் தரையில் நின்றபடி வேடிக்கை பார்க்கின்றனர். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.