திக்திக்.. திடீரென பூங்கா ஊழியரை கடித்து கொன்ற சிங்கக் கூட்டம்.. அதிர்ச்சியில் சுற்றுலா பயணிகள்
Thailand Lion Attack Zookeeper Dies : தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள பூங்காவில் ஊழியர் சிங்கக் கூட்டங்களால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். சுற்றுலா பயணிகள் பலர் முன்னிலையில் பூங்கா ஊழியரை சிங்கக் கூட்டங்கள் கடித்து குதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தாய்லாந்து, செப்டம்பர் 12 : தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள பூங்காவில் ஊழியர் சிங்கக் கூட்டங்களால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். சுற்றுலா பயணிகள் பலர் முன்னிலையில் பூங்கா ஊழியர் சிங்கக் கூட்டங்கள் கடித்து குதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தாய்லாந்து மிகப்பெரிய சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். தாய்லாந்தை சுற்றிப் பார்க்க ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்கள் செல்கின்றனர். இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் இருந்து தாய்லாந்திற்கு செல்கின்றனர். அதற்கு ஏற்ப பூங்கா, கிளப் போன்ற இயற்சை சூழ்ந்த இடங்கள் உள்ளன. இந்த நிலையில், சுற்றுலா பயணிகள் முன்னிலையில் தாய்லாந்தில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்துள்ளது.
அதாவது, தாய்லாந்து பாங்காங்கில் சஃபாரி உலக உயிரியில் பூங்கா உள்ளது. இந்த பூங்கா மிகவும் பிரபலமானது. தாய்லாந்து செல்பவர்கள் இந்த பூங்காவை பார்க்காமல் செல்ல மாட்டார்கள். இந்த பூங்காவில் யானை, குரங்குகள், சிங்கம், புலி உள்ளிட்ட வன விலங்குகள் இருக்கின்றன. இந்த பூங்காவில் 20 ஆண்டுகளுக்கு மேலாக ஜியான் ராங்கராஷாமி என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இவர் தனது பணியின்போது, பாதுகாப்பு நெறிமுறைகளை மீறி, அவர் தனது காரில் இருந்து சிங்கங்கள் இருக்கும் பகுதிக்குள் சென்றிருக்கிறார். அப்போது, அவரை சிங்கங்கள் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது.




திடீரென பூங்கா ஊழியரை கடித்து கொன்ற சிங்கம்
அப்போது அங்கிருந்த சுற்றுலா பயணிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். ஜியானை 3க்கும் மேற்பட்ட சிங்கங்கள் தாக்கிக் கொண்டிருந்தன. அவரால் தப்ப முடியவில்லை. சிங்கத்தை கவனத்தை திருப்ப அங்கிருக்கும் சுற்றுலா பயணிகள் பல விஷயங்களை செய்தனர். ஆனால், அவரை அதையெல்லாம் கருத்தில் கொல்லாமல் ஜியானை கடுமையாக தாக்கி இருக்கிறது. சுமார் 15 நிமிடங்கள் ஜியானை சிங்கங்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர், அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், அவர் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். உள்ளூர் அறிக்கைகளின்படி, பார்வையாளர்கள் இந்த சம்பவத்தை அதிர்ச்சியுடன் பார்த்தனர், மேலும் சிலர் சிங்கங்களின் கவனத்தை சிதறடிக்க ஹாரன் அடித்தும் கூச்சலிட்டும் தலையிட முயன்றனர். ஃபிரா மோங்குட் கிளாவ் மருத்துவமனையின் முன்னாள் பேராசிரியரும் அறுவை சிகிச்சை நிபுணருமான கர்னல் டாக்டர் தவட்சாய் காஞ்சனரின், ஜியான் தனது வாகனத்தை விட வெளியே சில நிமிடங்களிலேயே அவரை சிங்கம் தாக்கியதாக கூறினார்.
Also Read : ஆப்கானிஸ்தானில் இடிபாடுகளில் சிக்கிய பெண்கள் மீட்கப்படவில்லை?.. அதிர்ச்சியூட்டும் காரணம்!
இதுகுறித்து வனவிலங்குத் துறையின் இயக்குநர் ஜெனரல் அட்டபோல் சரோயன்சான்சா கூறுகையில், “சிங்கங்கள் உணவருந்திக் கொண்டிருந்தபோது இந்தத் தாக்குதல் நடந்ததாகத் தெரிகிறது. அவற்றில் ஒன்று நல்ல மனநிலையில் இல்லாததால் தாக்குதலைத் தொடங்கியிருக்கலாம்” எனக் கூறினார்.