மீண்டும் ஒருமுறை என் மீது மோது பேபி பாடலை பாடிக்கொண்டு கார் ஓட்டிய பெண்.. விபத்தில் சிக்கிய பகீர் காட்சி வைரல்!
College Student Met with An Accident | அமெரிக்காவின் பென்சிவேனியா பகுதியில் பாடல் பாடிக்கொண்டே கார் ஓட்டிச் சென்ற கல்லூரி மாணவி ஒருவர் விபத்தில் சிக்கும் வீடியோ காட்சி இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது. அது குறித்து பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

வாஷிங்டன், செப்டம்பர் 07 : அமெரிக்காவில் (America) கல்லூரி மாணவி ஒருவர் மீண்டும் ஒருமுறை என் மீது மோது பேபி (Hit Me Once More Baby) என்ற பாடலை பாடிக்கொண்டு காரில் பயணம் செய்த நிலையில், அவர் விபத்தில் சிக்கிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த கல்லூரி மாணவி விபத்தில் சிக்கும் காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த நிலையில், பாடல் பாடிக்கொண்டு காரில் பயணம் செய்த கல்லூரி மாணவி விபத்தில் சிக்கியது எப்படி, அது தொடர்பாக இணையத்தில் வைரலாகும் வீடியோவில் இடம்பெற்றுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
பாடல் பாடிக்கொண்டு கார் ஓட்டிய இளம் பெண் – விபத்தில் சிக்கிய அதிர்ச்சி
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தை சேர்ந்தவர் நர்சிங் படிக்கும் கல்லூரி மாணவி கெத்லின். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக தனது காரில் சென்றுக்கொண்டு இருந்துள்ளார். காரை ஓட்டும்போது அந்த மாணவி தனது ஸ்மார்ட்போன் மூலம் டிக் டாக் வீடியோவை பதிவு செய்துக்கொண்டும் இருந்துள்ளார். அந்த டிக் டாக் வீடியோப்வுக்காக அந்த பெண் மீண்டும் ஒருமுறை என் மீது மோது பேபி என்ற பாடலை பாடிக்கொண்டு மிகவும் உற்சாகமாக காரில் பயணம் செய்துள்ளார். அப்போது அவரது பாடல் வரிகளை உண்மையாக்கும் விதமாக அவர் விபத்தில் சிக்கியுள்ளார். அந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க : நடுவானில் பயணிகளை பாட்டிலில் சிறுநீர் கழிக்க கூறிய விமான ஊழியர்கள்.. அதிர்ச்சி சம்பம்!
இணையத்தில் வைரலாகும் வீடியோ
The woman promptly crashes her car, saying, “HIT ME ONE MORE TIME, BABY.” pic.twitter.com/cunFOzngch
— Islamist Cannibal (@Raviagrawal300) September 2, 2025
இணையத்தில் வைரலாகும் வீடியோவில் அந்த பெண் மீண்டும் ஒருமுறை என் மீது மோது பேபி என்ற பாடலை மிகவும் உற்சாகமாக பாடிக்கொண்டு பயணம் செய்கிறார். அப்போது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த கார் இழுத்துச் செல்லப்படுகிறது. என்ன செயவ்து என தெரியாது குழம்பி போன அந்த இளம் பெண் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகிறார். பின்னர் அந்த கார் எதன் மீதோ மோதி தலை குப்புற கவிழ்கிறது. இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்க்கும் பலரும் அந்த பெண் பாடிய பாடல் வரிகள் உணமையாகிவிட்டதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.