உலகின் முதல் AI அமைச்சர்.. ஊழலை ஒழிக்க அல்பேனியா அரசு அதிரடி நடவடிக்கை!
World's First AI Minister | உலகம் முழுவதும் தற்போது செயற்கை நுண்ணறிவு ஆட்சி செய்து வருகிறது. பல்வேறு துறைகளில் செயற்கை நுண்ணறிவின் ஆதிக்கம் அதிகரித்துள்ள நிலையில், தற்போது அரசாங்கத்திலும் செயற்கை நுண்ணறிவு அம்சம் வந்துள்ளது. அல்பேனியாவில் செயற்கை நுண்ணறிவு அமைச்சர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளார்.

அல்பேனியா, செப்டம்பர் 12 : உலகம் முழுவதும் பல பணிகளில் மற்றும் துறைகளில் செயற்கை நுண்ணறிவு (AI – Artificial Intelligence) அம்சம் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் உலக அளவில் முதல் முறையாக அல்பேனியாவில் செயற்கை நுண்ணறிவு அம்சத்தால் ஆன அமைச்சரை (Artificial Intelligence Minister) அந்த நாட்டு அரசு அறிமுகம் செய்துள்ளது. ஊழலை ஒழிக்கும் வகையில் அல்பேனியா அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. அதன்படி, டைலா என்ற செயற்கை நுண்ணறிவு அம்சம் அமைச்சராக பணியமர்த்தப்பட்டுள்ளது. இந்த உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு அமைச்சர் குறித்து விரிவாக பார்க்கலாம்.
அல்பேனியாவில் உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு அமைச்சர்
அல்பேனியா அரசு தனது அமைச்சரவையில் செயற்கை நுண்ணறிவு அமைச்சரை அறிமுகம் செய்துள்ளது. டைலா என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த அமைச்சர் தான் உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு அமைச்சர். டைலா என்பதற்கு அல்பேனியா மொழியில் மகன் என்று பொருள். இந்த அமைச்சருக்கு அரசாங்க டெண்டர்களில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்கும், கண்காணிக்கும் பணிகளை அந்த நாட்டு பிரதமர் எடி ராமா வழங்கியுள்ளார்.
இதையும் படிங்க : இந்தியா மீது 100% வரி விதிக்க வேண்டும்.. ஐரோப்பிய நாடுகளுக்கு அதிபர் ட்ரம்ப் வலியுறுத்தல்..




அரசாங்க சேவைகளில் பயன்பெற மக்களுக்கு உதவி வரும் டைலா
டைலா அல்பேனியாவில் 2025 ஜனவரி மாதம் முதல் பணி செய்து வருகிறது. அதாவது அல்பேனிய அரசின் இ அல்பேனியா என்ற இணையதளத்தில் பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறது. சுமார் 95-க்கும் மேற்பட்ட அரசாங்க சேவைகளை வாய்ஸ் கமெண்ட்ஸ் (Voice Commands) மூலம் செய்து வருகிறது. விண்ணப்பங்கள், ஆவணங்களை சமர்ப்பிப்பது, பொதுவான அறிவுரைகள் ஆகியவற்றையும் பொதுமக்களுக்காக டைலா வழங்கி வருகிறது.
இதையும் படிங்க : ‘நண்பர் பிரதமர் மோடியுடன் பேசுவேன்’ இந்தியா அமெரிக்க உறவில் கிரீன் சிக்னல்.. ரத்தாகுமா வரி?
இணையதளம் மூலம் டைலா மக்களுக்கு உதவி வந்த நிலையில், டைலாவின் பணிகளை மேலும் வலிமையாக்க அந்த நாட்டு பிரதமர் நினைத்துள்ளார். அதாவது அல்பேனியாவின் அரசு டெண்டர்களில் 100 சதவீதம் முறைகேடுகளை தடுக்க டைலாவை பணி அமர்த்துவதாக அறிவித்துள்ளார். அல்பேனியாவின் பாரம்பரிய உடையுடன் இ அல்பேனியா இணையதளத்தில் தோன்றவுள்ள டைலா, மக்கள் பணிகளை செய்ய உள்ளதாக கூறியுள்ளார். அல்பேனியாவின் இந்த முன்னெடுப்பு உலக நாடுகளின் கவனத்தை பெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.