Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

காளான் கொலையாளிக்கு சாகும் வரை ஜெயில்.. அடுத்தடுத்து 3 கொலை.. அதிர வைக்கும் பின்னணி!

Australia Mushroom Murder : ஆஸ்திரேலியாவில் நடந்த மூன்று கொலைகள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 2023ஆம் ஆண்டு நடந்த இந்த கொலை வழக்கில் 50 வயதான ஏரின் என்பவருக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 33 ஆண்டுகளுக்கு பிறகு தான், பெண் ஏரின் பரோல் கோர முடியும் என நீதிமன்றம் கூறியுள்ளது.

காளான் கொலையாளிக்கு சாகும் வரை ஜெயில்.. அடுத்தடுத்து 3 கொலை.. அதிர வைக்கும் பின்னணி!
கொலையாளி
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 08 Sep 2025 14:35 PM IST

ஆஸ்திரேலியா, செப்டம்பர் 08 : மதிய உணவில் கெட்டுப்போன காளானை விருந்தளித்து மூன்று பேர் கொன்ற பெண்ணுக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குடும்ப பிரச்னையில் மாமியார், மாமனார் மற்றும் அவரது உறவினர் என மூன்று பேருக்கும் கெட்டுப்போன காளான் மற்றும் மாட்டிறைச்சியை விருந்தளித்தால், பெண் ஏரின் கைது செய்யப்பட்டார். உலக நாடுகளில் கொலை சம்பவங்கள் அதிர்ச்சியூட்டும் வகையில் நடக்கிறது. அப்படி தான், ஆஸ்திரேலியாவில் 2023ஆம் ஆண்டு நடந்த மஸ்ரூம் கொலை நாட்டையே உலுக்கியது. அதாவது, ஆஸ்திரேலியா உள்ள விக்டோரிய மாகாணத்தைச் சேர்ந்தவர் ஏரின் பேட்டர்சன் (50). இவருக்கு சைமன் என்ற நருடன் 2007ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இவர்களது திருமண வாழ்க்கை ஆரம்பத்தில் சரியாக சென்ற நிலையில், அதன்பிறகு இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. நிதி பிரச்னையும் இருந்தது. இதனால், இருவருக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. இப்படியாக இருந்த நிலையில், 2015ல் இருவரும் பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வந்தனர். இருப்பினும், இவர்களுக்கு இடையே பிரச்னை முடிவுக்கு வரவில்லை. குழந்தைகளை வளர்ப்பதற்கு சைமன் ஒப்புக் கொள்ளவில்லை. நிதி ரீதியாக ஏரினுக்கு பிரச்னை இருந்து வந்த நிலையில், சைமனையும் குழந்தைகளை பார்க்க சொல்லி இருக்கிறார்.

Also Read : பழிக்கு பழி சம்பவம்.. இளைஞரை வெட்டிக் கொன்ற கும்பல்.. நெல்லையில் பயங்கரம்!

அடுத்தடுத்து மூன்று கொலைகள்

ஆனால், அவர் கவனிக்காமல் இருந்ததாக தெரிகிறது. இதனால், இருவருக்கு இடையே பிரச்னை, நாட்கள் போக போக பகையாக மாறியது. இதனால், குழந்தைகளின் கல்விச் செலவு தொடர்பாக சைமனின் பெற்றோர் டான்  மற்றும் கெயிலை முறையிட்டார். ஆனால், அவர்களும் இந்த பிரச்னையில் இருந்து ஒதுங்கினர். இதனால், கடுப்பாக ஏரின், தன்னை இவர்கள் வேண்டுமென்றே ஒதுக்குவதாக நினைத்து, அவர்களை பழி வாங்க முடிவு செய்தார். மேலும், அவர்களை கொலை செய்யவும் திட்டமிட்டார்.

2023 ஜூலை 29ஆம் தேதி சைமனையும் அவரது பெற்றோரையும் மதிய உணவிற்கு அழைத்தார். ஆனால், தனக்கு வேலை இருப்பதாக சைமன் கூறியதை அடுத்து, அவரது பெற்றோர் டன், கெயில் மற்றும் அவரது சகோதரி ஹீதர்ரும் அவரது கணவர் இயான்னும் இந்த விருந்தில் கலந்து கொண்டார். இந்த விருந்தில் ஏரின் கெட்டுப்போன காளானும், மாட்டிறைச்சியும் வைத்திருந்தார்.

இதனை அறியாமல், நான்கு பேர் சாப்பிட்டனர். இதனால், அவர்களுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஒரு வாரம் சிகிச்சை பெற்று வந்த 4 பேரில், 70 வயதான கெயில், 66 வதயதான ஹீதர்ரும், டான் பேட்டர்சனும் உயிரிழந்தனர். அடுத்தடுத்து மூன்று பேர் உயிரிழந்தது அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

காளான் கொலையாளிக்கு சாகும் வரை ஜெயில்

பிரேத பரிசோதனையில் கெட்டுப்போன காளாணை சாப்பிட்டு உயிரிழந்தது தெரியவந்தது. இதனை அடுத்து, 2023ல் ஏரின் கைதானார். கெட்டு போன காலான் மற்றும் மாட்டிறைச்சியை 3 மாதங்களுக்கு முன்பு வாங்கியதாக ஏரின் வாக்குமூலம் அளித்திருந்தார்.  இது சம்பந்தமான வழக்கு விசாரணை மெல்போர்ன் உச்ச நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

Also Read : குலைநடுங்க வைத்த சம்பவம்.. மனைவியை 17 துண்டுகளாக வெட்டிக் கொன்ற கணவர்.. பகீர் பின்னணி!

பல கட்ட விசாரணைகள் நடந்து முடிந்த நிலையில், 2025 செப்டம்பர் 8ஆம் தேதியான இன்று அவருக்கு தண்டனையை நீதிமன்றம் அளித்தது. 2025 ஜூலை மாதம் இவர் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த நிலையில், மூன்று கொலை செய்ததற்காக ஏரினுக்கு சாகும் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதுவும் பரோலில் வெளியே வர முடியாத வகையில், சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சிறையில் உள்ள காலத்தை சேர்ந்து, ஏரின் பரோலுக்கு 82 வயதில் தான் தகுதி பெறுவார். எனவே, இந்த 33 ஆண்டுகளும் அவர் சிறையில் அடைக்கப்படுவார் என நீதிமன்றம் கூறியது.