Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Australia Earthquake : ஆஸ்திரேலியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. 6.1 ரிக்டர் பதிவு!

Strongest Earthquake Strikes Australia | ஆஸ்திரேலியாவில் இன்று (ஜூன் 08, 2025) அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் பெரிய நிலநடுக்கமாக இது கருதப்படும் நிலையில், அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்திற்கு உள்ளாகியுள்ளனர். கடல் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள நிலையில், பாதிப்புகள் குறித்து இதுவரை தகவல் எதுவும் வெளியாகாமல் உள்ளது.

Australia Earthquake : ஆஸ்திரேலியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. 6.1 ரிக்டர் பதிவு!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 08 Jun 2025 07:59 AM IST

ஆஸ்திரேலியா, ஜுன் 08 : ஆஸ்திரேலியாவில் (Australia) இன்று (ஜூன் 08, 2025) அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் (Earthquake) ஏற்பட்டுள்ளது. இந்திய நேரப்படி சரியாக காலை 4.50 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் (National Center of Seismology) தெரிவித்துள்ளது. இந்த நிலையில், ஆஸ்திரேல்லியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம் என்னவாக உள்ளது, ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஆஸ்திரேலியாவின் தெற்கு கடற்கரையில் இன்று (ஜூன் 08, 2025) அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதாவது, ஆஸ்திரேலியாவில் 10 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 47.76 டிகிரி வடக்கு அச்டரேகையிலும், 116.05 டிகிரி கிழக்கு அச்டரேகையிலும் இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.

6.1 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கம்

சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அதிர்ச்சியில் உறைந்துள்ள பொதுமக்கள்

நிலநடுக்கத்தை பொருத்தவரை ரிக்டர் அளவு 5-ஐ தாண்டினாலே சக்திவாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த நிலையில், ஆஸ்திரேலியாவில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் அந்த பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் உறைந்துள்ளனர். இந்த நிலநடுக்கம் கடல் பகுதியில் ஏற்பட்ட நிலையில், பாதிப்புகள் குறித்து இன்னும் தகவல்கள் வெளியாகாமல் உள்ளது.