AI : சிறிய குற்ற வழக்குகளில் இனி ஏஐ மூலம் தீர்ப்பு?.. வெளியான முக்கிய தகவல்!
AI in Indian Courts | உலகம் முழுவதும் பெரும்பாலான துறைகளில் செயற்கை நுண்ணறிவு அம்சம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது நீதிமன்றங்களில் சிறிய குற்ற வழக்குகளில் விரைவாக தீர்ப்பு வழங்க செயற்கை நுண்ணறிவு அம்சத்தை பயன்படுத்த அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போதைய காலக்கட்டத்தில் உலகில் உள்ள அனைத்து துறைகளிலும் செயற்கை நுண்ணறிவின் (AI – Artificial Intelligence) ஆதிக்கம் அதிகமாகவே உள்ளது. இந்த நிலையில், செயற்கை நுண்ணறிவின் ஆதிக்கம் நீதி துறைக்குள்ளும் நுழைய உள்ளது. அதாவது சிறிய குற்ற வழக்குகளில் செயற்கை நுண்ணறிவு அம்சத்தை பயன்படுத்தி தீர்ப்ப்யு வழங்க மத்திய அரசு (Central Government) முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் வழக்குகளில் தீர்ப்பு வழங்குவதற்காக செயற்கை நுண்ணறிவு அம்சங்களை பயன்படுத்த கூடாது என கேரள நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டிருந்த நிலையில், தற்போது இந்த தகவல் வெளியாகியுள்ளது.
ஆதிக்கம் செலுத்தும் செயற்கை நுண்ணறிவு
தொழில்நுட்பம் மிக வேகமாக வளர்ச்சி அடைந்துக்கொண்டே செல்லும் நிலையில், பல துறைகளில் மனிதர்களின் தேவையே இருக்காத நிலை ஏற்படுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. காரணம், உலகில் உள்ள பல துறைகளில் செயற்கை நுண்ணறிவு அம்சத்தின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக ஆயிரக்கணக்கான ஊழியர்கள் தங்களது நிறுவனங்களால் பணி நீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர். இது மற்ற ஊழியர்கள் மத்தியில் மிகுந்த கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
இதையும் படிங்க : இந்த 10 விஷயங்களை சாட்ஜிபியிடம் ஷேர் பண்ணாதீங்க – காத்திருக்கும் ஆபத்து




இந்த நிலையில், செயற்கை நுண்ணறிவின் ஆதிக்கம் குறித்து வெளியான சில ஆய்வு அறிக்கைகள், செயற்கை நுண்ணறிவால் அனைத்து துறையையும் தனது கட்டுப்பாட்டிற்கு கொண்டுவர முடியாது, சில துறைகளில் மனிதர்கள் தான் எப்போதும் ஆட்சி செய்வார்கள் என கூறப்பட்டு வந்தது. ஆனால், அவ்வாறு செயற்கை நுண்ணறிவு நுழைய முடியாது என கூறப்பட்டு வந்த நீதி துறையிலும் தற்போது செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிறிய வழங்குகளில் ஏஐ பயன்படுத்து தீர்ப்பு – வெளியான முக்கிய தகவல்
இந்தியாவில் உள்ள நீதிமன்றங்களில் ஆயிரக்கணக்கில் வழங்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில், சிறிய குற்ற வழக்குகளில் செயற்கை நுண்ணறிவு அம்சத்தை பயன்படுத்தி தீர்ப்பு வழங்கி விரைவில் வழக்குகளை முடித்து வைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதிகளுக்கு செயற்கை நுண்ணறிவு பயிற்சி அளிக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி, இந்த திட்டம் ஏற்கனவே வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வரும் நாடுகளுக்கு நீதிபதிகளை அனுப்பி ஆய்வு செய்யும் முடிவும் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.