Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தவறான உரையாடல்களை போலீசிடம் சொல்லும் சாட்ஜிபிடி – பயனர்களுக்கு எச்சரிக்கை

ChatGPT Privacy Warning : சாட்ஜிபிடியில் பயனர்களின் தவறான உரையாடல்களை கண்காணிக்க சிறப்பு மதிப்பாய்வு குழு ஒன்றை ஓபன் ஏஐ தொடங்கியுள்ளது. இதன் மூலம் பயனர்கள் ஆபத்தான உரையாடல்களை மேற்கொண்டால் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.

தவறான உரையாடல்களை போலீசிடம் சொல்லும் சாட்ஜிபிடி – பயனர்களுக்கு எச்சரிக்கை
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 02 Sep 2025 19:21 PM

ஓபன் ஏஐ (Open AI) நிறுவனத்தின் சாட்ஜிபிடியில் (Chatgpt) பயனர்களின் உரையாடல்கள் கண்காணிக்கப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. சாட்ஜிபிடியுடனான உரையாடல்களின் போது பயனர்கள் வன்முறை அல்லது சமூகத்துக்கு தீங்கு விளைவிக்கும்படியான உரையாடல்களை கண்காணிப்பதற்காக சிறப்பு மதிப்பாய்வுக் குழு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சாட்ஜிபிடியுடன் பயனர்களின் உரையாடல்கள் தீங்கு விளைவிக்கும் என அறிந்தால் அவை காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்படாலம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பயனர்களிடையே பிரைவசி குறித்து கேள்வி எழுப்பியுள்ளது. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.

கேள்விக்குறியாகும் பிரைவசி

சாட்ஜிபிடியுடன் பயனர்கள் உரையாடல்கள் தீங்குவிளைவிக்கக் கூடியது என கண்டறியப்பட்டால் அது காவல்துறைக்கோ அல்லது சட்ட நடவடிக்கையோ மேற்கொள்ளப்படாலம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இது பயனர்களிடையே பிரைவசி குறித்து கேள்வி எழுப்பியுள்ளது. இதுவரை சாட்ஜிபிடியுடனான உரையாடல்கள் தனிப்பட்டதாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும் என கூறப்பட்ட நிலையில் அவை குழுவால் கண்காணிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருப்பது பயனர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க : நண்பனை போல் பழகிய ஏஐ செய்த காரியம்.. தாயை கொன்ற முன்னாள் யாகூ மேனேஜர் தற்கொலை.. என்ன நடந்தது?

ஏஐயின் செயல்பாடுகளால் அதிகரிக்கும் கவலை

ஏஐ பாதுகாப்பு குறித்த அதிகரித்து வரும் கவலைகள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் ஒரு நபர் சாட்ஜிபிடியுடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்ததாகவும், பின்னர் அந்த நபர் தனது தாயைக் கொன்று பின்னர் தானும் தற்கொலை செய்து கொண்டதாகவும் தானும் தற்கொலை செய்து கொண்டதாகவும் சமீபத்தில் ஒரு வழக்கு வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த ஸ்டீன் எரிக் சோல் பெர் என்ற 56 வயதான சாட்ஜிபிடியை தனது நண்பராக கருதி பேசி வந்ததாக கூறப்படுகிறது. அவருக்கு மன நோய் பாதிப்பு இருந்திருக்கிறது. இந்த நிலையில் சாட்ஜிபிடி அவரிடம் அவரது தாய், அவருக்கு விஷம் கொடுக்க முயற்சிக்கிறார் என சொல்லியிருக்கிறது. அதாவது சாட்ஜிபிடி அவரிடம், உங்கள் உள்ளுணர்வு நியாயமானது. உங்கள் எச்சரிக்கை உணர்வு முற்றிலும் சரி என கூறியதாக ஸ்கீரின்ஷாட் வைரலாகி வருகிறது. இதனை கேட்டு அவர் தனது தாயை கொலை செய்திருக்கிறார். இந்த சம்பவம் தொடர்பாக ஒபன் ஏஐ தனது வருத்ததை பதிவு செய்துள்ளது.

இதையும் படிக்க : வாட்ஸ்அப்பில் ஏஐ உதவியுடன் பிழையின்றி குறுஞ்செய்தி அனுப்பலாம்.. விரைவில் வரும் அசத்தல் அம்சம்!

இதுபோன்ற சம்பவங்கள் சாட்ஜிபிடி போன்ற ஏஐ சாட்பாட்களினால் ஏற்படும் ஆபத்தை நமக்கு உணர்த்துகிறது. ஏஐ சாட்பாட்களை பயன்படுத்த கட்டுப்பாடுகள் தேவை என கோரிக்கை எழுந்துள்ளது. குறிப்பாக குழந்தைகள் அதனை தவறாக பயன்படுத்தக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. காரணம் பொதுவான தகவல்களை மட்டுமே நமக்கு வழங்கும். தனிப்பட்ட முறையில் நமக்கு உதவும் அளவுக்கு ஏஐ சாட்பாட்கள் இன்னும் வளர்ச்சியடையவில்லை என தொழில்நுட்ப வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.