ஜியோ ஃபிரேம்ஸ்: ரிலையன்ஸின் ஏஐ ஸ்மார்ட் கண்ணாடி – அப்படி என்ன ஸ்பெஷல்?
Jio Frames : இந்தியாவில் மெட்டாவின் ரேபான் ஸ்மார்ட் கண்ணாடிகளுக்கு போட்டியாக ரிலையன்ஸ் நிறுவனம் ஜியோ ஃபிரேம்ஸ் என்ற பெயரில் ஏஐ ஸ்மார்ட் கண்ணாடியை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தெரிவித்தார். ஜியோ பிசி மற்றும் ஜியோ ஏஐ கிளவுட் போன்ற அம்சங்ளும் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி (Mukesh Ambani) ஆகஸ்ட் 29, 2025 அன்று நடைபெற்ற 48 வது ஆண்டு மீட்டிங்கில் புதிய டிஜிட்டல் மாற்றங்களை அறிவித்தார். மேலும் ரிலையன்ஸ் இண்டலிஜென்ஸ் நிறுவனத்தை தொடங்கவுள்ளதாக அறிவித்த அவர், இந்தியாவில் செயற்கை நுண்ணறிவுக்கான (Artificial Intelligence) களத்தை உருவாக்கவுள்ளதாகவும், அதற்காக முதலீடு செய்யவிருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் இந்தியாவில் ஹியூமனாய்டு ரோபோக்களை அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் அவர் தனது உறையில் குறிப்பிட்டிருந்தார். மேலும் ஜியோ ஃபிரேம்ஸ் மற்றும் ஜியோ பசி போன்ற புதிய புதிய தயாரிப்புகளையும் அவர் அறிமுகப்படுத்தினார்.
ஜியோ பிரேம்ஸ்: இந்தியாவுக்கான ஏ.ஐ. ஸ்மார்ட் கண்ணாடிகள்
ரிலையன்ஸ் நிறுவனர் முகேஷ் அம்பானி தனது உரையில் ஜியோ ஃபிரேம்ஸ் என்ற பெயரில் இந்தியாவுக்கான ஏஐ ஸ்மார்ட் கண்ணாடியை அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளார். இது மெட்டாவின் ரேபன் ஸ்மார்ட் கண்ணாடிகளுக்கு போட்டியாக இந்திய சந்தைக்கு ஏற்ப வடிவமைக்கப்பட ஸ்மார்ட் கண்ணாடியாக செயல்படும் என்றார். இது பல்வேறு இந்திய மொழிகளில் செயல்படும் ஏஐ வாய்ஸ் அசிஸ்டெண்ட் உள்ளதாக தெரிவித்தார். மேலும் இதன் மூலம் ஹெச்டி தரத்தில் பயனர்கள் வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுக்க முடியும், நேரடி ஒளிபரப்புகளை செய்ய முடியும். இப்படி அவர்கள் எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஜியோ ஏஐ கிளவுடில் சேமிக்க முடியும்.
இதையும் படிக்க : ஏஐ முதல் ஹியூமனாய்டு ரோபோ வரை… ரிலையன்ஸ் இண்டெலிஜென்ஸை அறிமுகப்படுத்திய முகேஷ் அம்பானி




ஜியோ ஏ.ஐ. கிளவுட்
ஜியோ ஏஐ கிளவுட் சேவை பயனர்களின் புகைப்படங்களை சேமிக்க ஏதுவாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும் வாய்ஸ் அசிஸ்டெண்ட் மூலம் நாம் சேமிக்கும் புகைப்படங்கள், வீடியோக்களை கண்டறிய முடியும். மேலும் இதில் கொடுக்கப்பட்ட ஏஐ கிரியேட் ஹப் மூலம் பயனர்கல் தங்கள் புகைப்படங்களை ரீல்ஸ், கொலாஜ் என தங்களுக்கு ஏற்ற வகையில் மாற்ற முடியும்.
இதையும் படிக்க : சாட்ஜிபிடியில் இனி டீனேஜர்களுக்கு வரும் பெற்றோரின் கட்டுப்பாடு.. ஓபன் ஏஐ முக்கிய முடிவு!
ஜியோ பிசி: உங்கள் டிவியை கணினியாக மாற்றும் சேவை
ஜியோ பிசி சேவையானது ஜியோ செட்-டாப் பாக்ஸ் மூலம் டிவியை முழுமையான கம்ப்பூயூட்டராக மாற்றிக்கொள்ள முடியும். இதற்கு பயனர்கள் தங்கள் கீபோர்ட் மற்றும் மவுஸ் ஆகியவற்றை இணைந்து ஜியோ கிளவுட் மூலம் இயக்கப்படும் கம்ப்யூட்டராக பயன்படுத்த முடியும். இந்த சேவையில் நாம் பயன்படுத்துவதற்கு ஏற்ப கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். வருங்காலங்களில் இதற்காக டெஸ்க்டாப் கம்ப்யூட்டருக்காக செலவழிக்க தேவையிருக்காது.
இந்த மாற்றங்கள் அனைத்தும் நடைபெற்றால் ஒரு பெரும் தொழில்நுட்ப புரட்சியாக இருக்கும். அமெரிக்கா, ஐப்பான், சீனா போன்ற நாடுகளுடன் இந்தியாவும் ஏஐ துறையில் முன்னிலையில் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.