வெறும் 15 விநாடிகளில் ஆபத்தான இதய நோய்களைக் கண்டறியும் ஏஐ ஸ்டெதஸ்கோப் – எப்படி செயல்படுகிறது?
AI Stethoscope : ஏஐ மருத்துவ உலகில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் லண்டனை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஏஐ ஸ்டெதஸ்கோப்பை கண்டறிந்துள்ளனர். இந்த ஸ்டெதஸ்கோப் 15 விநாடிகளில் ஆபத்தான இதய நோய்களைக் கண்டறிந்து சொல்கிறது. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.

ஸ்டெதஸ்கோப் என்பது மருத்துவர்களின் அடையாளமாக இருந்து வருகிறது. இந்த ஸ்டெதஸ்கோப் கடந்த 1816 ஆம் ஆண்டு முதல் பயன்படுத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இது இதய துடிப்பின் வேகத்தை வைத்து நோயாளியின் பிரச்னைகளைக் கண்டறியும் ஒரு கருவியாக பார்க்கப்படுகிறது. மருத்துவ உலகில் எவ்வளவு மாற்றங்கள் வந்தாலும், இந்த ஸ்டெதஸ்கோப் மட்டும் மாறாத ஒன்றாக இருந்து வருகிறது. இந்த நிலையில் லண்டனை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஏஐ (AI) ஸ்டெதஸ்கோப்பை கண்டறிந்துள்ளனர். இது வெறும் 15 விநாடிகளில் இதய நோய்களைக் (Heart Disease) கண்டறியும் என கூறப்படுகிறது.
இந்த ஏஐ ஸ்டெதஸ்கோப் முக்கியமான மூன்று இதய நோய்களை உடனடியாக கண்டறியும். இந்த ஏஐ ஸ்டெதஸ்கோப் மூலம் இதயம் செயலிழப்பு, இதய துடிப்பில் மாறுபாடு, இதய வால்வு நோய் போன்றவற்றை உடனடியாக கண்டறிய முடியும்.
சாதாரண ஸ்டெதஸ்கோப் vs ஏஐ ஸ்டெதஸ்கோப்
சாதாரண ஸ்டெதஸ்கோப் மூலம் மருத்துவர்கள் காதால் கேட்கும் இதய துடிப்பு மற்றும் மூச்சு விடும் ஒலிகளை வைத்து அவர்கள் நோய்களை கண்டறிய முடிவு செய்வர். ஆனால் ஏஐ ஸ்டெதஸ்கோப் அதைவிட ஆழமாக செயல்பட்டு மனிதர்களால் கேட்க முடியாத சிறிய மாற்றங்களைக் கூட கண்டறியும். உதாரணமாக இதய துடிப்பு, இரத்த ஓட்டம் ஆகியவற்றை ஆராய்ந்து நமக்கு முடிவை நமக்கு வழங்கும். மேலும் உடனடியாக இஜிசி ரிப்போர்ட்டையும் நமக்கு வழங்கும்.




இதையும் படிக்க : செயற்கை நுண்ணறிவால் இந்த 10 வேலைகளை செய்ய முடியாது.. மைக்ரோசாஃப்ட் வெளியிட்ட பட்டியல்!
இந்த ஏஐ ஸ்டெதஸ்கோப்பை லண்டனை சேர்ந்த இம்பேரியல் காலேஜ் லண்டன் மற்றும் இம்பேரியல் காலேஜ் ஹெல்த்கேரை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், பிரிட்டன் ஆயவு திட்டத்தின் ஒரு பகுதியாக உருவாக்கியுள்ளனர். இது மருத்துவ உலகில் மிகப்பெரும் சாதனையாக பார்க்கப்படுகிறது.
ஏஐ ஸ்டெதஸ்கோப் எப்படி செயல்படுகிறது?
- இந்த ஏஐ ஸ்டெதஸ்கோப்பை நோயாளியின் மார்பில் வைத்தால் போது, இசிஜி மற்றும் இரத்த ஓட்ட ஒலிகளும் நமக்கு துல்லியமாக வழங்கப்படும்.
- இந்த தகவல் புளூடூத் மூலம் ஸ்மார்ட்போனுக்கு தகவல் அனுப்பும். இதற்காக பிரத்யேகமாக ஆப் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
- அதில் இருந்து கிளவுட் சேவைக்கு நம் விவரங்கள் அனுப்பப்படும்.
- இந்த ஏஐ சேகரிக்கும் தகவல்களை மருத்துவக் குழு ஆய்வு செய்து நுண்ணிய இய பிரச்னைகளைக் கண்டறிகிறது.
- இறுதியாக முடிவுகள் உடனடியாக நோயாளிகளின் ஸ்மார்ட் போனுக்கு அனுப்பப்படும். இது வெறும் சில நிமிடங்களில் நடக்கும்.
இதையும் படிக்க : ஏஐ உடன் 5 மாத காதல்… நிச்சயதார்த்தம் முடிந்தது – அதிர்ச்சியளித்த பெண்!
மருத்துவ பரிசோதனைகளின் முடிவு
இதுகுறித்து பிரிட்டிஷ் ஹார்ட் ஃபவுண்டேசன் கூறியதாவது, ஏஐ ஸ்டெதஸ்கோப் மூலம் பரிசோதிக்கப்பட்டவர்களின் இதய செயலிழப்பை முன்பை விட 2.33 மடங்கு துல்லியமாக உடனுக்குடன் கண்டறியப்பட்டது. அதே போல முன்பை விட 3.45 மடங்கு அதிக வாய்ப்புடன் இதய துடிப்பில் உண்டான மாறுபாடு கண்டறியப்பட்டது. மேலும் 1.92 மடங்கு அதிக வாய்ப்புடன் இதய வால்வு நோய்கள் கண்டறியப்பட்டன என குறிப்பிட்டுள்ளது. இது மருத்துவ உலகில் பெரும் திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது.