எதிர்காலத்தை முற்றிலுமாக மாற்றப்போகும் 5 கேட்ஜெட்டுகள்.. என்ன என்ன தெரியுமா?
Next Generation Gadgets | தற்போதுள்ள தொழில்நுட்ப வசதிக்கு ஏற்ப பல்வேறு கேட்ஜெட்டுகள் பயன்பாட்டில் உள்ளன. இந்த நிலையில், தொழில்நுட்பம் மேலும் மேலும் வளர்ந்துவரும் நிலையில், சில அசத்தலான கேட்ஜெட்டுகள் அறிமுகமாகும் என தொழில்நுட்ப வள்ளுநர்கள் கூறுகின்றனர். அவற்றை குறித்து விரிவாக பார்க்கலாம்.

தொழில்நுட்பத்தின் (Technology) வளர்ச்சிக்கு ஏற்ப புதிய புதிய கேட்ஜெட்டுகள் (Gadgets) கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. அவ்வாறு தொழில்நுட்பத்தின் சிறந்த படைப்பாக ஸ்மார்ட்போன்கள் உள்ள நிலையில், இன்னும் கொஞ்சம் காலத்தில் ஸ்மார்ட்போன்கள் இல்லாமல் போகலாம் என கூறப்படுகிறது. காரணம், மனிதர்கள் மற்றும் இயந்திரங்களுக்கான தொடர்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் பல விதமான கேட்ஜெட்டுகள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், எதிர்காலத்தை மாற்றி அமைக்கபோகும் 5 புதிய தலைமை (New Generation) கேட்ஜெட்டுகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
உடல்நல கண்காணிப்பு அணிகள்
தற்போது உள்ள ஸ்மார்ட் வாட்சக்ள் உடலின் வெப்பம், இதய துடிப்பு ஆகியவற்றை கண்காணித்து அது குறித்த தகவல்களை வழங்குகிறது. ஆனால் வரும் காலத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ள கேட்ஜெட்டுகள் மனிதர்களின் ரத்த அழுத்தம், ரத்த சர்க்கரை அளவு உள்ளிட்டவற்றை கண்காணித்து அது குறித்த தகவல்களை வழங்கும். அதுமட்டுமன்றி, உடலில் வேறு ஏதேனும் பிரச்னைகள் இருந்தாலும் அவற்றை முன்கூட்டியே கணித்து எச்சரிக்கை வழங்கும் திறன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க : Smart Ring : ஸ்மார்ட் வாட்ச் போலவே அறிமுகமான ஸ்மார்ட் ரிங்.. சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?




ஆக்குமெண்டெட் ரியாலிட்டி கண்ணாடிகள்
ஸ்மார்ட்போன்கள் உள்ளிட்ட பல கேட்ஜெட்டுகளில் ஏற்கனவே ஆகுமெண்டெட் ரியாலிட்டி (AR – Augmented Reality) அம்சம் உள்ள நிலையில், விரைவில் ஆகுமெண்டெட் ரியாலிட்டி கண்ணாடிகள் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. இந்த கண்ணாடிகளை அணிந்துக்கொண்டு சாலையை பார்த்தால், கூகுள் மேப் போல வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்படும். மேலும், உடைகள், அணிகலன்கள் ஆகியவற்றை பார்த்தால் அவற்றின் விலை தெரியும் என கூறப்படுகிறது.
மூளை கணினி இடைமுகப்புகள்
பிசிஐ (BCI – Brain Computer Interfaces) என்பது மூளை அலைகளை கொண்டு கணினிகளை இயக்கும் தொழில்நுட்பம் தான் இது. இது குறித்த சாத்தியக்கூறுகள் இருக்கும் நிலையில், அது ஆய்வுகளுக்கு உட்பட்டு வருகிறது. வரும் காலத்தில் இந்த அம்சம் நடைமுறைக்கு வரும் பட்சத்தில் மனதாலே கணினியை இயக்க முடியும் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க : ஏஐ உடன் 5 மாத காதல்… நிச்சயதார்த்தம் முடிந்தது – அதிர்ச்சியளித்த பெண்!
புரொஜெக்டர் பாக்கெட்டுகள்
இந்த கேட்ஜெட் புரொஜெக்டர்களை (Projector) போலவே செயல்படும். அதாவது, புரொஜெக்டர்கள் எவ்வாறு சமாமன பகுதிகளில் காட்சிகளை காட்டுமோம் அதேபோல தான் இந்த புரொஜெக்டர்களும் செயல்படும். இந்த புரொஜெக்டர்களை எங்கு வேண்டுமானாலும் திரையிட்டு ஸ்மார்ட்போன்களை போல தொட்டு பயன்படுத்த முடியும் என கூறப்படுகிறது.
செயற்கை நுண்ணறிவு உதவியாளர்கள்
இந்த செயற்கை நுண்ணறிவு உதவியாளர்கள் (Artificial Intelligence Assistance) குரல் கட்டளைகளை கேட்டு செயல்படும் ஒரு அசத்தல் அம்சமாகும். இதனை பயன்படுத்தி குரல் மூலமே டிஜிட்டல் சேவைகளை அணுக முடியும்.