அப்படிப்போடு.. தீபாவளிக்கு மவுசு.. கலிபோர்னியாவில் அரசு விடுமுறை!
Diwali Festival: அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணம் தீபாவளியை அரசு விடுமுறையாக அறிவித்துள்ளது. பென்சில்வேனியா, கனெக்டிகட் மாநிலங்களைத் தொடர்ந்து, இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பு இந்தியப் புலம்பெயர்ந்தோர், இந்திய வம்சாவளியினரிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அரசு ஊழியர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுப்பு எடுக்க வாய்ப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா, அக்டோபர் 8: இந்தியாவின் மிக முக்கியமான பண்டிகையாக கொண்டாடப்படும் தீபாவளிக்கு அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணம் அரசு விடுமுறை அறிவித்துள்ளது. இந்த தகவல் புலம்பெயர்ந்த இந்திய மக்களுக்கும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது. இந்தியப் பண்டிகையான தீபாவளியை அதிகாரப்பூர்வமாக மாநிலம் தழுவிய விடுமுறையாக நியமித்த மூன்றாவது அமெரிக்க மாநிலமாக கலிபோர்னியா மாறியுள்ளது. முன்னதாக அக்டோபர் 2024 ஆம் ஆண்டு தீபாவளியை அரசு விடுமுறையாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்த அமெரிக்காவின் முதல் மாநிலமாக பென்சில்வேனியா சிறப்பைப் பெற்றது. அதைத் தொடர்ந்து 2025 ஆம் ஆண்டு முதல் கனெக்டிகட் மாநிலம் விடுமுறை விடுவதாக அறிவித்தது.
இந்திய புலம்பெயர்ந்தோருக்கு ஒரு வரலாற்று நிகழ்வாக, தீபாவளியை அதிகாரப்பூர்வ அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது மாறியுள்ளது. கலிபோர்னியா ஆளுநர் கவின் நியூசம் அக்டோபர் 7ம் தேதி இந்த மசோதாவில் கையெழுத்திட்டார். இது சான் ஜோஸைச் சேர்ந்த ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஆஷ் கல்ரா மற்றும் சான் டியாகோவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் தர்ஷனா படேல் ஆகியோரால் சமர்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read: தீபாவளி நாளில் சிறுவர்களுக்கு காயம் ஏற்படும் பயமா? இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை முக்கியம்!




இதன்மூலம் 2026ம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ள ஆளுநர் நியூசம் கையெழுத்திட்ட மசோதா, தீபாவளி பண்டிகையின் போது பொதுப் பள்ளிகள் மற்றும் சமூகக் கல்லூரிகளை மூடுவதற்கு அங்கீகாரம் அளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு ஊழியர்கள் விடுமுறை எடுக்கத் தேர்வுசெய்யும் வாய்ப்பு வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த புதிய மசோதா தீபாவளியை அமெரிக்காவில் இந்தியர்கள் மட்டுமல்லாது ஜைனர்கள், சீக்கியர்கள் மற்றும் பௌத்தர்களும் கொண்டாடுகிறார்கள் என்பதை சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த அறிவிப்பு தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள், “தெற்காசிய குழந்தைகள் பெருமையுடன் கொண்டாடவும் அதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் தீபாவளி விடுமுறை ஒரு குறிப்பிடத்தக்க தருணம்” என கூறியுள்ளனர். 2025 கணக்கெடுப்பின்படி, அமெரிக்க நாட்டில் வசிக்கும் 4.9 மில்லியன் இந்திய மக்கள் தொகையில் 9,60,000 பேர் கலிபோர்னியாவில் வசிக்கின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read: Diwali Sweets: தீபாவளிக்கு சாதாரண லட்டு வேண்டாம்.. சுவையான ரவா லட்டு ரெசிபி இதோ!
மாணவர்கள் எந்த பாதிப்பும் இல்லாமல் தீபாவளி நாளில் விடுமுறை எடுக்கவும், அரசு ஊழியர்கள் சம்பளத்துடன் கூடிய விடுப்பு எடுக்கவும் அனுமதிக்கும் விதிகள், தீபாவளியைக் கொண்டாடுபவர்களுக்கு உண்மையிலேயே அணுகக்கூடியதாக மாற்றுவதற்கான முக்கியமான முடிவாகும்” என்று இந்து அமெரிக்க அறக்கட்டளையின் நிர்வாக இயக்குனர் சமீர் கல்ரா மகிழ்ச்சி பொங்க கூறியுள்ளார்.
2025 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் 20ம் தேதி திங்கட்கிழமை கொண்டாடப்படுகிறது. இந்தியாவைப் பொறுத்தவை மக்கள் மதங்களை கடந்து கொண்டாடும் ஒரு பண்டிகை என்றால் அது தீபாவளி தான். சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட நாடுகள் கூட தீபாவளி நாளில் அரசு விடுமுறை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.