AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஈரான் கடற்படை முழுவதுமாக அழிக்கப்பட்டது.. அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் தகவல்!

Iran Navy Completely Destroyed | ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மிக கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த நிலையில், ஈரானின் கடற்படை முழுவதுமாக அழிக்கப்பட்டுவிட்டதாக மெரிக்கா பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் கூறியுள்ளார். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஈரான் கடற்படை முழுவதுமாக அழிக்கப்பட்டது.. அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் தகவல்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 11 Mar 2026 23:19 PM IST

அமெரிக்கா, மார்ச் 11 : ஈரான் (Iran) மீது இஸ்ரேல் (Israel) மற்றும் அமெரிக்கா (America) தொடர் தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், ஈரானின் கடற்படை (Iran Navy) முழுவதுமாக அழிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா (America) தெரிவித்துள்ளது. ஈரான் மீதான போர் 12வது நாளாக நீடித்து வரும் நிலையில், அமெரிக்கா இதனை தெரிவித்துள்ளது. இந்த நிலையில், தற்போது ஈரான் போர் எந்த நிலையில் உள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஈரான் மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வரும் அமெரிக்கா, இஸ்ரேல்

அணு ஆயுதங்கள் தயாரிப்பது தொடர்பான விவகாரத்தில் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து தாக்குதல் நடத்தி வருகிறது. 12 நாட்களாக நீடித்து வரும் இந்த தொடர் தாக்குதல்களில் ஈரான் மிக கடுமையான சிக்கல்களை எதிர்க்கொண்டுள்ளது. அதுமட்டுமன்றி, இந்த போர் காரணமாக ஈரான் கடும் சேதங்களை கண்டுள்ளது. இருப்பினும் பதிலடி கொடுத்தே தீருவோம் என ஈரான் உறுதியாக உள்ள நிலையில், ஈரான் ஆயுதங்களை விடுத்து சரணடைய வேண்டும் என அமெரிக்காவும், இஸ்ரேலும் வலியுறுத்தி வருகிறது.

இதையும் படிங்க : முற்றும் ஈரான் போர்?.. அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக 6 மாதங்கள் போர் புரிய தயார் என கூறிய ஈரான்!

ஈரான் கடற்படை முழுவதுமாக அழிக்கப்பட்டது – அமெரிக்கா

ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தொடர் தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், ஈரானின் கடற்படை முழுவதுமாக அழிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஈரான் அணு ஆயுதம் வைத்திருப்பதை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஏற்க மாட்டார். ஈரான் மீதான தாக்குதல் மிக துல்லியமாக நடந்து வருகிறது. ஆபரேஷன் எபிக் பியூரி வெற்றிப்பாதையில் உள்ளது.

இதையும் படிங்க : ஈரான் ஏவுகணையை வழிமறித்த துபாய்.. ஆனாலும் நடந்த விபத்து.. என்ன நடந்தது?

ஈரானின் ஆயுதக்கிடங்கு தீர்ந்து விட்டது என அமெரிக்கா பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் கூறியுள்ளார்.

Follow Us