AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இறந்தும் எச்சரிக்கை?.. அயதுல்லா அலி கமேனியின் எக்ஸ் பதிவு இணையத்தில் வைரல்!

Ayatollah Ali Khamenei X Post | இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஈரான் உட்சபட்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி படுகொலை செய்யப்பட்டார். இந்த நிலையில், கமேனியின் எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இறந்தும் எச்சரிக்கை?.. அயதுல்லா அலி கமேனியின் எக்ஸ் பதிவு இணையத்தில் வைரல்!
அயதுல்லா அலி கமேனி
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 07 Mar 2026 17:41 PM IST

ஈரான் (Iran) மீது இஸ்ரேல் (Israel) மற்றும் அமெரிக்கா (America) நடத்திய தொடர் தாக்குதலில் ஈரானின் உட்சபட்ச தலைவர் அயதுல்ல அலி கமேனி படுகொலை செய்யப்பட்டார். இதனை ஈரான் ஊடகங்கள் உறுதி செய்தன. கமேனியின் மறைவால் ஈரான் கடும் கோபம் கொண்டுள்ள நிலையில், அதற்கு பதில் தாக்குதல் நடத்துவோம் என்றும் கூறியுள்ளது. இந்த நிலையில், மறைந்த ஈரானின் உட்சபட்ச தலைவர் கமேனியின் எக்ஸ் பக்கத்தில் பகிரப்பட்டுள்ள பதிவு ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலால் கொல்லப்பட்ட கமேனி

ஈரான் அணு ஆயுதங்களை தயாரிப்பதாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தது. இந்த நிலையில், பிப்ரவரி 28, 2026 முதல் இரு நாடுகளும் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தொடர் தாக்குதலில் ஈரானின் உட்சபட்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இது ஈரானை கடும் கோபத்திற்கு உள்ளாக்கிய நிலையில், கமேனியின் மரணத்திற்கு பழி வாங்கும் நடவடிக்கையை ஈரான் கையில் எடுத்துள்ளது.

இதையும் படிங்க : அமெரிக்கப் படைகளைத் தாக்க ஈரானுக்கு கைகொடுக்கும் ரஷ்யா.. கடும் எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப்..

கமேனியின் எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்ட பதிவு

ஈரான் மீது நடத்திய தாக்குதலலுக்கும், கமேனியின் மரணத்திற்கும் பழி வாங்கும் நோக்கில் ஈரான் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த நிலையில், மறைந்த ஈரானின் உட்சபட்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவு வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயருதா? அமெரிக்கா சொன்ன ஹேப்பி நியூஸ்!

அவரது எக்ஸ் பக்கத்தில் வெளியாகியுள்ள பதிவில், இஸ்ரேல் மிகப்பெரிய தவறு செய்துவிட்டது. அதன் விளைவுகள் அந்த நாட்டை நிலைகுலைய செய்யும் என்று கூறப்பட்டுள்ளது. தற்போது இந்த பதிவு தான் இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.

Follow Us