Diwali Sweets: தீபாவளிக்கு சாதாரண லட்டு வேண்டாம்.. சுவையான ரவா லட்டு ரெசிபி இதோ!
Rava Laddu Recipe: 2025 தீபாவளிக்கு, வீட்டிலேயே ரவையை கொண்டு ஒரு ஸ்வீட்டை குறைந்த நேரத்தில் செய்யலாம். இதைதான் நாம் ரவா லட்டுகள் என்றும் அழைக்கிறோம். எனவே, ரவா லட்டுகளை தயாரிப்பதற்கான இந்த எளிதான செய்முறையை இங்கே கற்று கொண்டு விருந்து படைப்போம்.

தீபாவளி (Diwali) என்பது வெறும் பட்டாசுகளுடன் மட்டுமே கொண்டாடப்படுவது அல்ல, இனிப்புகளும் முக்கிய பங்கு வகிக்கும். தீபாவளி போன்ற நல்ல நாட்களில் வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கு இனிப்புகள் வழங்கப்படும். அவர்களை மகிழ்விக்க பெரும்பாலும் கடைகளில் கிடைக்கும் இனிப்புகளை வாங்கி பழக்கப்படுத்தி கொண்டோம். சில நேரங்களில் இந்த வகையான ஸ்வீட்ஸ்கள் (Sweets) பழையதாகவும், பழைய எண்ணெயில் செய்யப்பட்டவையாகவும் இருக்கும். இது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். இது போன்ற பிரச்சனைகள் வராமல் இருக்க வீட்டிலேயே எளிதாக, சுவையான மற்றும் ஆரோக்கியமான ஸ்வீட்ஸ்களை செய்யலாம். அதன்படி, ரவையிலிருந்து எப்படி சூப்பராக ரவா லட்டு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
ALSO READ: பால் வேண்டாம்! தக்காளி கொண்டு தரமான பர்ஃபி.. தனித்துவ ஸ்வீட் ரெசிபி!




ரவா லட்டு செய்ய தேவையான பொருட்கள்:
- ரவை அல்லது ரவா – ஒரு கப்
- நெய் – அரை கப்
- சர்க்கரை – ஒரு கப்
- தண்ணீர் – தேவைக்கேற்ப
- முந்திரி – 4-5
- திராட்சை – 7-8
- பாதாம் – 6-7
- ஏலக்காய் தூள் – 1/2 டீஸ்பூன்
- துருவிய தேங்காய் – அரை கப்
ALSO READ: அடுத்தடுத்து பண்டிகை காலம்! சூப்பரா ஸ்வீட்ஸ் செய்ய டிப்ஸ் இதோ!
ரவா லட்டு செய்வது எப்படி..?
- முதலில் முந்திரி, திராட்சை, பாதாம் உள்ளிட்ட ட்ரை புரூட்ஸ்களை பொடி பொடியாக நறுக்கி கொள்ளவும். இப்போது, ஒரு பாத்திரத்தில் நெய்யை ஊற்றவும்.
- அடுத்ததாக, நறுக்கிய அனைத்து ட்ரை ப்ரூட்ஸ்களையும் சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும். இதை ஒரு தட்டிற்கு மாற்றவும்.
- அதே பாத்திரத்தில் ரவையை சேர்த்து வறுக்கவும். ரவை சேர்த்தும் தீயை குறைந்த தீயில் வைப்பதை மறந்துவிடாதீர்கள். இல்லையென்றால், கருகி வீணாகிவிடும்.
- இப்போது, ரவை இளஞ்சிவப்பு நிறமாக மாறத் தொடங்கியதும், தேங்காய்த் துருவலைச் சேர்த்து ஒரு நிமிடம் வறுக்கவும். இந்த சமயத்தில் தீயை அணைக்கவும்
- ரவையின் சூடு ஆற விடுங்கள். அடுத்ததாக, ஒரு பாத்திரத்தில் ஒரு கப் சர்க்கரை மற்றும் அரை கப் தண்ணீர் சேர்த்து சிரப்பை தயார் செய்யவும். தொடர்ந்து கிளறவும், இல்லையெனில் சர்க்கரை சரியாகக் கரையாது.
- அடுப்பிலிருந்து இறக்கி வறுத்த ரவையைச் சேர்க்கவும். கலந்த பிறகு, வறுத்த அனைத்து ட்ரை ப்ரூட்ஸ்களை சேர்த்து நன்கு கலக்கவும். கடைசியாக ஏலக்காய்த் தூள் சேர்க்கவும்.
- கட்டிகள் ஏற்படாமல் இருக்க தொடர்ந்து கிளறவும். கலவை கெட்டியானதும், அதை உங்கள் உள்ளங்கையில் எடுத்து ஒரு வட்ட லட்டுவாக உருட்ட தொடங்கவும்.
- அவ்வளவுதான் சுவையான ரவா லட்டு ரெடி. இப்போது, ஒரு பாத்திரத்தில் போட்டு இறுக்கமாக மூடி வைக்கவும்.
- தீபாவளி நாளன்று இதை பிரசாதமாகவும் கடவுளுக்கு படைக்கலாம். அதன்பிறகு, இந்த சுவையான ரவா லட்டுவை விருந்தினர்களுக்கு வழங்கி மகிழலாம்.