Diwali Sweets: அடுத்தடுத்து பண்டிகை காலம்! சூப்பரா ஸ்வீட்ஸ் செய்ய டிப்ஸ் இதோ!
Diwali Sweets Recipes: தீபாவளி நேரத்தின்போதும், அதற்கு முன்பும் கடைகளில் இனிப்புகள் அதிக அளவில் வாங்கப்படுகின்றன. பல ஸ்வீட் கடைகளில் வண்ணமயமான இனிப்புகளை விற்கின்றன. ஆனால் இப்போதெல்லாம் பழைய இனிப்புகள் களமிறங்குகின்றன. இந்த இனிப்புகளை உட்கொள்வது பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

ஆயுத பூஜை மற்றும் தீபாவளிக்கு (Diwali) இன்னும் சில நாட்களே உள்ளன. இது போன்ற விசேஷ நாட்களில் கடவுளுக்கு இனிப்பு வகைகளை படைப்போம். பலர் நல்ல நாட்களில் தங்கள் சுற்றுபுற சூழ்நிலையில் உள்ள அண்டை வீட்டார்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்து இனிப்புகளை (Sweets) வழங்குவார்கள். தீபாவளி நேரத்தின்போதும், அதற்கு முன்பும் கடைகளில் இனிப்புகள் அதிக அளவில் வாங்கப்படுகின்றன. பல கடைகளில் வண்ணமயமான இனிப்புகளை விற்கின்றன. ஆனால் இப்போதெல்லாம் பழைய இனிப்புகள் களமிறங்குகின்றன. இந்த இனிப்புகளை உட்கொள்வது பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். இந்த தீபாவளிக்கு கடைகளில் இனிப்புகளை வாங்காமல், வீட்டிலேயே எளிதாக இனிப்புகளை செய்யலாம்.
மைசூர் பாக்
மைசூர் பாக் எல்லோரும் விரும்பும் ஒரு இனிப்பு. அதன் சுவை மிகவும் சுவையாக இருக்கும்.
ALSO READ: பண்டிகை கால ஸ்நாக்ஸ்! சூப்பரா ஒரு பனீர் பாப்கார்ன் ரெசிபி இதோ!




தேவையான பொருட்கள்:
- கடலை மாவு
- சர்க்கரை
- நெய்
- ஏலக்காய் பொடி
- முந்திரி, பாதாம், பிஸ்தா சிறிதளவு
மைசூர் பாக் தயாரிக்கும் முறை:
- ஒரு கடாயில் நெய்யை சூடாக்கி, கடலை மாவைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும். கடலை மாவு பொன்னிறமாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள், இல்லையெனில் மைசூர் பாக் கருப்பாக மாறிவிடும்.
- ஒரு தனி வாணலியில், சர்க்கரையையும் தண்ணீரையும் சேர்த்து சிரப் தயாரிக்கவும். சிரப் ஒரு சரம் நிலைத்தன்மையை அடையும் அளவுக்கு தடிமனாக இருக்க வேண்டும்.
- வறுத்த கடலை மாவை மெதுவாக சிரப்பில் சேர்த்து நன்கு கலக்கவும். ஏலக்காய் பொடி மற்றும் நறுக்கிய முந்திரி, பாதாம், பிஸ்தா சேர்க்கலாம்.
- இப்போது இந்தக் கலவையை ஒரு தட்டில் மாற்றி ஆற விடவும். கலவை முழுவதுமாக ஆறியதும், விரும்பிய வடிவங்களில் வெட்டவும்.
ட்ரை ப்ரூட்ஸ் பர்ஃபி:
- பாதாம் – 3/4 கப்
- முந்திரி – 3/4
- பால்
- சர்க்கரை – 1 கப்
- பிஸ்தா – சிறிதளவு
- உலர்ந்த தேங்காய் தூள் – 1/2 கப்
ALSO READ: கசக்குதுன்னு ஒதுக்காதீங்க! ஸ்டஃப்டு பாகற்காய் இப்படி செய்தால் ருசி அள்ளும்!
ட்ரை ப்ரூட்ஸ் பர்ஃபி செய்வது எப்படி..?
- முதலில் முந்திரி மற்றும் பாதாம் பருப்பை தண்ணீரில் போட்டு 1-2 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். இது அவற்றை மென்மையாக்கும்.
- பின்னர் தண்ணீரை வடிகட்டி முந்திரி மற்றும் பாதாமை குளிர்ந்த நீரில் கழுவவும். இவை சிறிது ஆறியதும், பாதாமில் இருந்து தோல்களை அகற்றவும்.
- வேகவைத்த ட்ரை ப்ரூட்ஸ்களை மிக்ஸியில் போட்டு, 250 மில்லி பால் சேர்த்து நன்றாக கூழாக அரைக்கவும்.
- அடுத்ததாக, ஒரு பாத்திரத்தில் 750 மில்லி பாலை ஊற்றி, பாதியாக குறையும் வரை நன்கு கொதிக்க வைக்கவும்.
- பால் பாதியாக வத்தியதும், 1 டீஸ்பூன் சர்க்கரையை சேர்த்து 1 நிமிடம் கிளறவும். சர்க்கரை கரைந்த பிறகு, பால் மற்றும் முன்பு தயாரிக்கப்பட்ட ட்ரை ப்ரூட்ஸ் கூழை மெதுவாக சேர்க்கவும்.
- இப்போது பாலை தொடர்ந்து மெதுவான தீயில் வைத்து கிளறவும். கலவை கெட்டியானது அடுப்பை ஆப் செய்யுங்கள்.
- தட்டில் எண்ணெய் அல்லது நெய் தடவி, அதில் பர்ஃபியை செட் செய்யவும். உங்களுக்கு விருப்பம் இருந்தால், பர்ஃபியின் மேல் சிறிது நறுக்கிய ட்ரை ப்ரூட்ஸை தூவலாம். அவ்வளவுதான், பர்ஃபி செட் ஆனதும், கத்தியால் சிறிய துண்டுகளாக வெட்டினால் தயார்.