Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Food Recipe: பண்டிகை கால ஸ்நாக்ஸ்! சூப்பரா ஒரு பனீர் பாப்கார்ன் ரெசிபி இதோ!

Paneer Popcorn: பனீர் உடலில் தசைகளை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல், உடலுக்குத் தேவையான ஆற்றலையும் தொடர்ந்து வழங்குகிறது. உடல் அமைப்பை மேம்படுத்த விரும்புவோருக்கு பனீர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்தநிலையில், பனீரை கொண்டு பாப்கார்ன் செய்வது எப்படி என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.

Food Recipe: பண்டிகை கால ஸ்நாக்ஸ்! சூப்பரா ஒரு பனீர் பாப்கார்ன் ரெசிபி இதோ!
பனீர் பாப்கார்ன்Image Source: Freepik
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 27 Sep 2025 20:44 PM IST

நமது அன்றாட உணவில் பால் பொருட்கள் (Dairy products) ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளன. அவற்றில், பனீர் சுவையானது மட்டுமல்ல, ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது. பனீர் (Paneer) புரதம், கால்சியம், பாஸ்பரஸ், துத்தநாகம், வைட்டமின் பி12 மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளால் நிறைந்துள்ளது. இதன் காரணமாக, இது அனைத்து வயதினருக்கும் ஏற்ற உணவாகக் கருதப்படுகிறது. புரதச்சத்து நிறைந்த பனீர், குறிப்பாக உடற்பயிற்சி செய்பவர்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். இது தசைகளை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல், உடலுக்குத் தேவையான ஆற்றலையும் வழங்குகிறது. உடல் அமைப்பை மேம்படுத்த விரும்புவோருக்கு பனீர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்தநிலையில், பனீரை கொண்டு பாப்கார்ன் செய்வது எப்படி என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.

ALSO READ: 5 நிமிடத்தில் அசால்ட்டாக செய்யக்கூடிய முட்டை ரெசிபி.. காலை உணவு இனி களைகட்டும்!

பனீர் பாப்கார்ன்

தேவையான பொருட்கள்:

  • பனீர் – 200 கிராம்
  • அரிசி மாவு- அரை கப்
  • கார்ன்ஃப்ளார் மாவு – ¼ கப்
  • பிரட்தூள்கள் – ஒரு கப்
  • இஞ்சி-பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்
  • சிவப்பு மிளகாய் தூள் – ஒரு தேக்கரண்டி
  • கருப்பு மிளகு தூள் – அரை தேக்கரண்டி
  • உப்பு – தேவையான அளவு
  • தேவைக்கேற்ப தண்ணீர்
  • எண்ணெய் – பொரிப்பதற்கு

ALSO READ: கசக்குதுன்னு ஒதுக்காதீங்க! ஸ்டஃப்டு பாகற்காய் இப்படி செய்தால் ருசி அள்ளும்!

பனீர் பாப்கார்ன் செய்வது எப்படி..?

  1. கடைகளில் வாங்கிய பனீரை உங்களுக்கு தேவையான அளவில் வெட்டி எடுத்து கொள்ளவும். பின்னர் அதனை கழுவி, உலர்த்தி, பின்னர் சிறிய க்யூப்ஸாக ஒரே அளவில் சரியாக இருக்கிறதா என்பதை பார்த்து கொள்ளவும்.
  2. அதன்பிறகு, பனீரை கலக்கி கொள்வதற்கு மாவை தயார் செய்ய தயாராகுவோம். இதற்காக, ஒரு பாத்திரத்தில் மாவு, சோள மாவு, இஞ்சி-பூண்டு விழுது, சிவப்பு மிளகாய் தூள், கருப்பு மிளகு தூள் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து கலக்கவும்.
  3. இதனுடன், சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து ஒரு தடிமனான மாவு கலவையாக, அதாவது பஜ்ஜி மாவு பதத்தில் உருவாக்கவும்.
  4. பின்னர்,  பிரட்தூள்களை ஒரு தட்டில் பரப்பி எடுத்து கொள்ளவும்.
  5. இப்போது, வெட்டி வைத்த பனீர் துண்டுகளை தயாரிக்கப்பட்ட மாவில் நனைத்து, பின்னர் பிரட்தூள்களில் நன்றாக பூசவும்.
  6. இப்போது அவற்றை வறுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. இதற்காக, ஒரு கடாயில் எண்ணெயை சூடாக்கி, மாவு கலவையில் பிரட்டி வைத்துள்ள பனீர் க்யூப்ஸை நடுத்தர தீயில் பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
  7. அவ்வளவுதான் கருகாமல் பொரித்து எடுத்தால், உங்களுக்கு மொறுமொறுப்பான பனீர் பாப்கார்ன் தயாராக உள்ளது.
  8.  தக்காளி சாஸ், மயோனைஸ் சூடான பனீர் பாப்கார்னைப் பரிமாறினால் குடும்பத்தினர் விரும்பி சாப்பிடுவார்கள்.