Food Recipe: 5 நிமிடத்தில் அசால்ட்டாக செய்யக்கூடிய முட்டை ரெசிபி.. காலை உணவு இனி களைகட்டும்!
Egg Recipes: மக்கள் முட்டைகளை தங்கள் காலை உணவில் (Breakfast) ஒரு நல்ல உணவாக கருதுகிறார்கள். ஆரோக்கியமாக இருப்பது மட்டுமல்லாமல், அவை விரைவாகவும் தயாரிக்கப்படுகின்றன. ஒரே செய்முறையைச் செய்வதில் நீங்கள் சோர்வாக இருந்தால், இந்த எளிதான சமையல் குறிப்புகளை முயற்சி செய்து மகிழுங்கள்.

முட்டைகள் (Eggs) எப்போதும் சூப்பர் ஃபுட் என்று அழைக்கப்படுகிறது. முட்டையில் புரதம், வைட்டமின்கள் மற்றும் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. எனவே, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தாராளமாக சாப்பிடலாம். அதனால்தான் மக்கள் முட்டைகளை தங்கள் காலை உணவில் (Breakfast) ஒரு நல்ல உணவாக கருதுகிறார்கள். ஆரோக்கியமாக இருப்பது மட்டுமல்லாமல், அவை விரைவாகவும் தயாரிக்கப்படுகின்றன. ஒரே செய்முறையைச் செய்வதில் நீங்கள் சோர்வாக இருந்தால், இந்த எளிதான சமையல் குறிப்புகளை முயற்சிக்கவும். எனவே, 5 நிமிடங்களில் நீங்கள் இந்த முட்டை ரெசிபிகளை செய்து ருசிக்கலாம்.
காலை உணவுக்காக எளிதாக செய்யக்கூடிய ரெசிபிகள்:
ஆம்லெட்:
ஆம்லெட் அனைவருக்கும் தெரிந்த மற்றும் பிரபல உணவாகும். அதேநேரத்தில், ஆம்லெட் செய்வது முகவும் எளிதான ஒன்றும் கூட. அதன்படி, ஒரு கிண்ணத்தில் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி, வெங்காயம், தக்காளி, மிளகுத்தூள் மற்றும் உப்ப்ய் சேர்த்து நன்றாக அடித்து கொள்ளவும். பின்னர், ஒரு தோசைக்கல்லை அடிப்பில் வைத்து குறைந்த தீயில் வைத்து எண்ணெய் அல்லது வெண்ணெய் தேய்க்கவும். இப்போது, ஊற்றி கருகாமல் இரு பக்கம் திருப்பி எடுத்தால் ஆம்லெட் ரெடி.
ALSO READ: காலை உணவுக்கு சூப்பர் டிஷ்.. சுவையான சோள உப்மா செய்வது எப்படி..?




முட்டை பொரியல்:
முட்டை பொரியல் செய்ய, ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் ஊற்றி, 2 முதல் 3 முட்டைகளை உடைத்து ஊற்றி அடி பிடிக்காமல் நன்றாக கிளறி, உப்பு மற்றும் மிளகு தூள் தூவி பிரட்டலாம். அவ்வளவுதான் முட்டை பொரியல் ரெடி.
வேகவைத்த முட்டைகள்:
வேகவைத்த முட்டைகள் மிகவும் ஆரோக்கியமானதாகக் கருதப்படுகின்றன. ஒரு பாத்திரத்தில் முட்டை முங்கும் வரை தண்ணீர் சேர்த்து, அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்க்கவும். தண்ணீரில் மெதுவாக வேகும், இதன் விளைவாக கொழுப்பு குறைவாகவும் புரதம் அதிகமாகவும் இருக்கும். இதை நேரடியாக அப்படியே சாப்பிடலாம்.
முட்டை சாண்ட்விச்:
வேகவைத்த முட்டையை நன்றாக நறுக்கி, ஒரு பிரட்டுடன் சாலட் மற்றும் மயோனைசே சேர்த்து ஒரு சாண்ட்விச் தயாரிக்கலாம். இது ஆரோக்கியமான மற்றும் விரைவான காலை உணவாகும்.
முட்டை புர்ஜி:
முட்டை புர்ஜி என்பது விரைவாகத் தயாரிக்கக்கூடிய ஒரு பிரபல வட இந்திய காலை உணவாகும். இதைச் செய்ய, ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து, வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் மற்றும் மசாலாப் பொருட்களைச் சேர்த்து, அடித்த முட்டைகளை நன்கு கலக்கும் வரை வதக்கவும். புரதத்துடன், நார்ச்சத்து போன்றவை கிடைக்கும்.