Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Food Recipe: பால் வேண்டாம்! தக்காளி கொண்டு தரமான பர்ஃபி.. தனித்துவ ஸ்வீட் ரெசிபி!

Tomato Barfi Recipe: தக்காளியைப் பயன்படுத்தி எப்படி பர்ஃபி செய்வது என்பதை விரிவாக விளக்குகிறது. எளிய படிகள் மற்றும் தெளிவான வழிமுறைகளுடன், அனைவரும் எளிதாக இந்த தனித்துவமான இனிப்பை வீட்டிலேயே தயாரிக்கலாம். பால் சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டியது முக்கியம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Food Recipe: பால் வேண்டாம்! தக்காளி கொண்டு தரமான பர்ஃபி.. தனித்துவ ஸ்வீட் ரெசிபி!
தக்காளி பர்ஃபிImage Source: Freepik
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 04 Sep 2025 20:56 PM IST

இனிப்பு என்பது யாருக்குதான் பிடிக்காது. சிலருக்கு இனிப்புகளை சாப்பிட பிடிக்கும், சிலருக்கு இனிப்புகளை செய்து நமக்கு விருப்பமானவர்களை கொடுத்து சாப்பிடவைக்க பிடிக்கும். நல்ல சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் இனிப்புகள் (Sweets) செய்வர். பிறகு சிலர் லட்டு செய்வார்கள். பிறகு சிலர் விதவிதமான பர்ஃபி செய்வார்கள். நீங்கள் தக்காளிகளை (Tomato) குழம்புகளில் போட்டு பார்த்திருப்பீர்கள், தக்காளி சாதம், தக்காளி சட்னி, இவ்வளவு ஏன் பிரியாணி உள்ளிட்ட பல சமையலிலும் தக்காளி பயன்படுத்தி சாப்பிட்டு இருப்போம். ஆனால், என்றைக்காவது தக்காளியை கொண்டு தக்காளி பர்ஃபி செய்து சாப்பிட்டு இருக்கிறீர்களா..? இன்று தக்காளி பர்ஃபிக்கான செய்முறையை இங்கு தெரிந்து கொள்வோம்.

ALSO READ: சூப்பரா ஒரு ஸ்வீட்ஸ் சாப்பிட ஆசையா..? இந்த அவல் அல்வா ரெசிபியை ட்ரை பண்ணுங்க..!

தக்காளி பர்ஃபி செய்முறை:

  • தக்காளி பர்ஃபி செய்ய, முதலில் தக்காளியை சிறு சிறு துண்டுகளாக வெட்டி அரைத்து எடுத்து கொள்ளவும்.
  • இந்த பேஸ்ட் தயாரானதும், அதை எடுத்து ஒரு கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.
  • இப்போது மெதுவாக கடலை மாவு அல்லது கோதுமை மாவை தக்காளி பேஸ்டில் கலக்கவும். மாவைக் கலக்கும்போது கட்டிகள் உருவாகாமல் கவனமாக கலக்குவது முக்கியம்.
  • இப்போது ஒரு நான்-ஸ்டிக் பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் தண்ணீரை கொதிக்க வைக்கவும். சிரப் தயாரானதும், அதில் தக்காளி மற்றும் மாவு விழுதைச் சேர்க்கவும். இப்போது நன்றாக குக் செய்யவும்.
  • பின்னர், ஒரு அரை முடி தேங்காயை துருவி, அதை ஒரு கடாயில் போட்டு எண்ணெய் ஊற்றாமல் வறுத்து எடுத்து கொள்ளவும்.
  • வறுத்த தேங்காய் துருவலை அதில் சேர்த்து இப்போது நன்கு கலக்கவும்.
  • தக்காளி நன்கு வதங்கியதும், ட்ரை ப்ரூட்ஸ்களை நறுக்கி கலந்து, குறைந்த தீயில் அடி பிடிக்காமல் மெதுவாக சமைக்கவும்.
  • கலவை கெட்டியாகத் தொடங்கியதும், ஒரு தட்டில் சில துளிகள் நெய்யைப் போட்டு, நெய்யை நன்றாகத் தடவி, அதன் மீது கலவையை ஊற்றவும்.
  • சில மணி நேரம் அப்படியே சூடாக இருப்பதை ஆற வைக்கவும். பர்ஃபி நன்றாக செட் ஆனதும், கத்தியின் உதவியுடன் சிறிய துண்டுகளாக வெட்டவும்.
  • இப்போது அதன் மேல் ட்ரை ப்ரூட்ஸ்களை தூவவும். அவ்வளவுதான் சுவையான தக்காளி பர்ஃபி தயார்.

ALSO READ: ஹாட் காபியை விடுங்க.. கிரீமி கோல்ட் காபி டேஸ்ட் தெரியுமா..? இப்படி செய்து ருசித்து பாருங்க!

தக்காளி பர்ஃபி செய்யும்போது பால் பயன்படுத்த வேண்டாம். தக்காளி புளிப்பு என்பதால், பாலுடன் கலப்பது அமிலத்தை உருவாக்கும். இது உங்களுக்கு வயிற்று உபாதையை ஏற்படுத்தலாம். இந்த பர்ஃபி தயாரிக்க புளிப்பு தக்காளியைப் பயன்படுத்த வேண்டாம்.