Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Food Recipe: ஹாட் காபியை விடுங்க.. கிரீமி கோல்ட் காபி டேஸ்ட் தெரியுமா..? இப்படி செய்து ருசித்து பாருங்க!

Creamy Cold Coffee Recipe: இந்தக் கட்டுரை கிரீமி கோல்ட் காபி மற்றும் கோல்ட் ப்ரூ காபி தயாரிக்கும் எளிமையான முறைகளை விளக்குகிறது. வீட்டிலேயே சுவையான ஐஸ்கட் காபியை எப்படி செய்வது என்பது பற்றிய விரிவான வழிமுறைகள் இதில் கொடுக்கப்பட்டுள்ளன. இரண்டு வகையான காபிகளுக்கும் உள்ள வேறுபாடுகளையும் தெளிவாக விளக்குகிறது.

Food Recipe: ஹாட் காபியை விடுங்க.. கிரீமி கோல்ட் காபி டேஸ்ட் தெரியுமா..? இப்படி செய்து ருசித்து பாருங்க!
கிரீமி கோல்ட் காபிImage Source: Freepik
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 28 Aug 2025 17:38 PM

மக்கள் தங்களை குளிர்ச்சியாகவும், நீரேற்றமாகவும் வைத்திருக்க மோர் (Buttermilk), ஜூஸ், லஸ்ஸி போன்றவற்றை அடிக்கடி எடுத்துக்கொள்கிரார்கள். ஆனால், நீங்கள் ஒரு காபி பிரியராக இருந்தால் கிரீமி கோல்ட் காபியை (Creamy Cold Coffee) தயார் செய்து ருசிக்கலாம். இதை குடிப்பதன்மூலம் உடலை குளிர்வித்து மனதை புத்துணர்ச்சியடைய செய்யும். கடைகள் மற்றும் மால்களில் சென்று கோல்ட் காபிகளை வாங்கி குடிக்க நேரவில்லை என்றால், நாங்கள் சொல்லும் இந்த எளிய முறையை பயன்படுத்தி நீங்கள் வீட்டிலேயே கிரீமி கோல்ட் காபியை செய்து நினைக்கும்போதெல்லாம் ருசிக்கலாம். அதன்படி, கிரீமி கோல்ட் காபியை எப்படி தயாரிப்பது என்பதை தாமதமின்றி அறிந்து கொள்வோம்.

கிரீமி கோல்ட் காபி

தேவையான பொருட்கள்:

  • காபி பவுடர் – ஒரு தேக்கரண்டி
  • பால் – ஒன்றரை கப்
  • வெந்நீர் – ஒரு கப்
  • சர்க்கரை – ருசிக்கேற்ப
  • ஐஸ் கட்டிகள் – 5
  • சாக்லேட் சிரப் – தேவையான அளவு

ALSO READ: வீட்டிலேயே சுவையான கேக் செய்ய ஆசையா..? எளிதான வெண்ணிலா கப் கேக் செய்முறை இதோ!

கிரீமி கோல்ட் காபி செய்வது எப்படி..?

  1. ரெஸ்ட்ராண்ட் போன்ற கிரீமி கோல்ட் காபி தயாரிக்க முதலில் காபி தூளுடன் வெந்நீரை சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும். இப்போது பால், சர்க்கரை மற்றும் ஐஸ்கட்டிகளை ஒன்றாக பிளெண்டரில் சேர்த்து நுரை வரும் அடிக்கவும்.
  2. இப்போது, ஒரு கிளாஸை எடுத்து அதில் சாக்லேட் சிரப்பை ஊற்றவும். இந்த சிரப்பை இப்போது கிளாஸ் முழுவதும் தொடும்படி, கிளாஸை லேசாக மெல்ல மெல்ல திருப்பவும்.
  3. அடுத்த பிளெண்டரிலிருந்து காபியை சிரப் ஊற்றிய, காபி கிளாஸில் ஊற்றவும். இதனுடன், உங்களுக்கு தேவையெனில், சாக்லேட் பவுடர், ஐஸ்கிரீம் ஆகியவற்றால் அலங்கரித்து காபியை பரிமாறலாம்.

வீட்டிலேயே கோல்ட் ப்ரூ காபி தயாரிப்பது எப்படி?

  1. காபி கொட்டைகளை நன்றாக அரைக்கவும்.
  2. ஒரு பெரிய ஜாடியில் 1:8 என்ற விகிதத்தில் காபி மற்றும் குளிர்ந்த நீரைச் சேர்க்கவும்
  3. ஜாடியை மூடி, 12-24 மணி நேரம் குளிர்சாதன பெட்டியில் வைக்கவும்.
  4. குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு கலவையை வடிகட்டவும்.
  5. இப்போது உங்கள் கோல்ட் ப்ரூ காபி தயார். நீங்கள் விரும்பினால், அதனுடன் ஐஸ், பால் அல்லது சாக்லேட் சிரப் சேர்த்து குடிக்கலாம்.

ALSO READ: சூப்பரா ஒரு ஸ்வீட்ஸ் சாப்பிட ஆசையா..? இந்த அவல் அல்வா ரெசிபியை ட்ரை பண்ணுங்க..!

கிரீமி கோல்ட் காபிக்கும், கோல்ட் ப்ரூ காபிக்கும் என்ன வித்தியாசம்..?

பெரும்பாலும் மக்கள் கோல்ட் ப்ரூவையும், கிரீமி கோல்ட் காபியையும் ஒரே மாதிரியாகக் கருதுகிறார்கள். ஆனால், இரண்டிற்கும் இடையே ஒரு பெரிய வித்தியாசம் உள்ளது. கோல்ட் காபி தயாரிக்க, காபி முதலில் சூடான நீரில் தயாரிக்கப்பட்டு, பின்னர் அதில் ஐஸ் சேர்க்கப்படுகிறது. அதேசமயம் கோல்ட் ப்ரூவில், ஆரம்பத்திலிருந்தே குளிர்ந்த நீர் பயன்படுத்தப்படுகிறது, மேலும் அது நீண்ட நேரம் ஊறவைத்த பிறகு தயாரிக்கப்படுகிறது.