AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சூர்யா- மமிதா பைஜூவின் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ பட டீசர் ரிலீஸ் எப்போது? ஹேப்பி நியூஸ் இதோ!

Vishwanath And Sons Movie Teaser Update: தென்னிந்திய சினிமாவில் முண்ணனி நட்சத்திர நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் சூர்யா. இவரின் நடிப்பில் தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ள படம்தான் விஸ்வநாத் அண்ட் சன்ஸ். இப்படத்தின் டீசர் எப்போது வெளியாகிறது என்ற அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

சூர்யா- மமிதா பைஜூவின் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ பட டீசர் ரிலீஸ் எப்போது? ஹேப்பி நியூஸ் இதோ!
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 14 Mar 2026 17:13 PM IST

நடிகர் சூர்யா (Suriya) மற்றும் நடிகை மமிதா பைஜூவின் (Mamitha Baiju) கூட்டணியில் தயாராகியுள்ள திரைப்படம்தான் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் (Vishwanath and Sons). இந்த படமானது ஆரம்பத்த்தில் சூர்யா46 என தற்காலிகமாக அழைக்கப்பட்டுவந்த நிலையில், சமீபத்தில் இதன் டைட்டில் “விஸ்வநாத் அண்ட் சன்ஸ்” என படக்குழு அறிவித்திருந்தது. இந்த் படத்தை வாத்தி மற்றும் லக்கி பாஸ்கர் போன்ற படங்களை இயக்கியிருந்த இயக்குநர் வெங்கி அட்லூரி (Venky Atluri) இயக்கியுள்ளார். இவர் முதல் முறையாக சூர்யாவுடன் இணையும் படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியை மையமாக கொண்டு உருவாக்கப்ட்டுள்ள நிலையில், இதில் சூர்யா வித்தியாசமான வேடத்தில் நடித்துள்ளார். கிட்டத்தட்ட கஜினி பட சஞ்சய் ராமசாமியை போல பிஸ்னஸ் மேனாக சூர்யா நடித்திருப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தை சித்தாரா எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்க, ஜி.வி. பிரகாஷ் குமார் (GV.Prakash Kumar) இசையமைத்துவருகிறார்.

இதன் ஷூட்டிங் நிறைவடைந்த நிலையில், இறுதிக்கட்ட பணிகளில் தீவிரமாக இருந்துவருகிறது. அந்த வகையில் சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் பட டீசர் எப்போது வெளியாகவும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் டீசர் வரும் 2026 மார்ச் 16ம் தேதியில் மாலை 4:06 மணியளவில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: வேள்பாரி படத்திற்காக தனுஷிடம் இயக்குநர் சங்கர் வைத்த கோரிக்கை… என்ன தெரியுமா?

சூர்யா மற்றும் மமிதா பைஜூவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் பட டீசர் ரிலீஸ் அறிவிப்பு பதிவு:

இந்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படமானது தெலுங்கு மற்றும் தமிழ் மொழியை மையமாக கொண்டு இயக்கப்பட்டுள்ள நிலையில், இதில் சூர்யா மற்றும் மமிதா பைஜுவுடன் நடிகர்கள் ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். மேலும் துல்கர் சல்மான் இதில் கேமியோ வேடத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: கென் படம் எடுக்கப்போறேன்-னு சொன்னதும் ஷாக் ஆகிட்டேன்.. நா அவரை சுத்தமா நம்பள – தனுஷ் ஓபன் டாக்!

இந்த படத்தில் சூர்யா 45 வயது பிஸ்னஸ் மேனாகவும், மமிதா பைஜூ அவரை காதலிக்கும் 22 வயது பெண்ணாகவும் நடித்திருக்கிறாராம். இப்படம் 45 ஆணுக்கும், 22 வயது பெண்ணுக்கும் இடையே காதல் உறவு மற்றும் குடும்பம் பற்றிய கதைக்களத்தில் அமைந்துள்ளதாம். இந்த படத்தினை படக்குழு வரும் 2026ம் ஆண்டு ஜூலை மாதத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளார். சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us