Food Recipe: சிறுவர்களுக்கான சூப்பரான ஆரோக்கிய உணவு.. ஈஸியான சிக்கன் ரோல் மேக்கிங் டிப்ஸ் இதோ!
Chicken Rolls Recipe: இந்த சுவையான சிக்கன் ரோல்ஸ் செய்முறை குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான உணவு ஆகும். எளிமையான பொருட்களைக் கொண்டு வீட்டிலேயே தயாரிக்கலாம். கோதுமை மாவு சப்பாத்தி, வேகவைத்த சிக்கன், காய்கறிகள் மற்றும் ஆம்லெட் ஆகியவற்றைப் பயன்படுத்தி சுலபமாக செய்யலாம்.

சிக்கன் (Chicken) ஒரு சிறந்த புரத உணவாகும். அசைவ உணவு பிரியர்களுக்கு சிக்கன் என்றாலே தனி பிரியம். அதேநேரத்தில், நம் வீட்டு பிள்ளைகளில் சிலருக்கு அசைவ உணவு பிடிக்காது. இருப்பினும், குழந்தைகளுக்கு புரத உணவுகளை (Protein) கொடுப்பது முக்கியம். இத்தகைய நம் வீட்டின் பிள்ளைகளுக்கு சிக்கன் ரோல்ஸ் சிறந்த உணவாகும். இதை அவர்களுக்கு காலை உணவாகவோ, ஸ்நாக்ஸாகவோ அல்லது இரவு உணவாகவோ கொடுக்கலாம். இதை ஒன்று எடுத்துகொண்டாலும் போதும் வயிறு நிரம்பிய உணர்வை கொடுக்கும். இது வீட்டிலேயே தயாரிக்கப்படும் உணவு என்பதால், ஆரோக்கியத்திற்கு சிறந்தது. இதை நம் வீட்டு பிள்ளைகளுக்கு ஒருமுறை சாப்பிட்டு பழகிவிட்டார்கள் என்றால், தினம் தினம் செய்து தரக்கேட்டு அடம் பிடிப்பார்கள். அந்தவகையில், சிக்கன் ரோல்களை வீட்டிலேயே எப்படி தயாரிக்கலாம் என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.
ALSO READ: கொங்கு நாடு ஸ்டைலில் காரசார ரெசிபி.. படிப்படியான சிக்கன் சிந்தாமணி செய்முறை!




சிக்கன் ரோல்:
தேவையான பொருட்கள்:
- கோதுமை மாவு அல்லது மைதா மாவு – ஒரு கப்
- சிக்கன் கீமா – ஒரு கப்
- முட்டைக்கோஸ் விழுது – 2 ஸ்பூன்
- கேரட் விழுது – 2 ஸ்பூன்
- மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்
- மிளகாய் தூள் – 2 ஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
- இஞ்சி பூண்டு விழுது – 1 1/2 ஸ்பூன்
- சீரகப் பொடி – 1 ஸ்பூன்
- கொத்தமல்லி பொடி – 1 ஸ்பூன்
- எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன்
- கரம் மசாலா – 1 ஸ்பூன்
- தயிர் – 1 கப்
- முட்டை – 2
- கொத்தமல்லி இலைகள்
- மிளகு பொடி – 1 ஸ்பூன்
- தக்காளி கெட்ச்அப்
- வெண்ணெய் அல்லது எண்ணெய்
ALSO READ: தினமும் எவ்வளவு புரதம் உடலுக்கு தேவை..? புரதம் நிறைந்த உணவுகள் லிஸ்ட் இதோ!
சிக்கன் ரோல் செய்வது எப்படி..?
- முதலில் கடைகளில் வாங்கிய சிக்கன் துண்டுகளை நன்றாக மஞ்சள் மற்றும் உப்பு சேர்த்து கழுவி ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். அதில் மஞ்சள், மிளகாய் தூள், உப்பு, இஞ்சி பூண்டு விழுது, சீரகப் பொடி, கொத்தமல்லி பொடி, எலுமிச்சை சாறு, கரம் மசாலா, தயிர் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு மரைனேட் செய்யவும்.
- அடுத்ததாக ஒரு மணி நேரம் கழித்து, ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் மரைனேட் செய்த சிக்கனை போட்டு வேகவைக்கவும். முடிந்தவரை, மிதமான தீயில் வைத்து சிக்கனை வேகவைக்கவும்.
- இறுதியாக, கொத்தமல்லி தூவி அடுப்பை அணைக்கவும். இப்போது, மற்றொரு சிறிய கிண்ணத்தில், முட்டைகளை அடித்து, உப்பு மற்றும் கொத்தமல்லி பொடியைச் சேர்த்து கலக்கவும்.
- அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து ஆம்லெட் செய்யவும். இப்போது கோதுமை மாவை பிசைந்து சப்பாத்தி செய்யவும். ஆம்லெட்டை சப்பாத்தியின் மீது வைத்து அதன் மீது மிளகு தூள் மற்றும் தக்காளி கெட்ச்அப் தடவவும். விருப்பம் இருந்தால் மயோனைசேவையும் சேர்க்கலாம்.
- பின்னர் துருவிய முட்டைக்கோஸ் மற்றும் கேரட்டை சேர்க்கவும். இப்போது அதன் மீது சிக்கன் கலவையை வைத்து சுருட்டவும். அவ்வளவுதான், சுவையான சிக்கன் ரோல்ஸ் தயார்.