Food Recipe: கொங்கு நாடு ஸ்டைலில் காரசார ரெசிபி.. படிப்படியான சிக்கன் சிந்தாமணி செய்முறை!
Chicken Chinthamani Recipe: இந்த செய்முறையில், சுவையான சிந்தாமணி சிக்கன் செய்வது எவ்வாறு என்பதை விளக்குகிறது. சிக்கனை மசாலாக்களுடன் பிரட்டி, குறைந்த அளவு எண்ணெயில் வதக்கி செய்யப்படும் இந்த செய்முறை, எளிதானது மற்றும் ஆரோக்கியமானது. இந்த செய்முறையை பயன்படுத்தி, ருசியான சிந்தாமணி சிக்கனை வீட்டிலேயே எளிதாக தயாரிக்கலாம்.

அசைவ உணவு (Non Veg) பிரியர்களுக்கு அசைவம் என்றால் முதலில் நினைவுக்கு வருவது சிக்கன்தான். சிக்கனை குறைந்த அளவு எடுத்துக்கொள்வது ஆரோக்கியத்திற்கு நல்லது. கடை மற்றும் வீடுகளில் சிக்கனைக் கொண்டு பல வகையான ரெசிபிகள் தயாரிக்கப்படுகின்றன. இவை அனைத்தும் சுவையான ரெசிபிகள் என்பதால் மக்கள் அதிகம் விரும்பி சாப்பிடுகிறார்கள். அதன்படி, சிக்கனில் செய்யப்படும் ஒவ்வொரு ரெசிபியும் வெவ்வேறு பாணியில் செய்யப்படுகின்றன. இதற்கு இணையான சிக்கனால் செய்யப்படும் ஒரு சுவையான ரெசிபியும் உள்ளது. அதுதான் சுவையான கொங்கு ஸ்டைல் சிந்தாமணி சிக்கன் (Chicken Chinthamani) ஆகும். வழக்கமான சிக்கன் ரெசிபிகளில் சில மாற்றங்களைச் செய்தால் போதும். இதை தயாரிப்பதும் மிகவும் எளிதானது. அந்தவகையில், சுவையான சிக்கன் சிந்தாமணி எப்படி செய்வது என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.
ALSO READ: மதுரை மேலூர் ஸ்டைல் சிக்கன் ஃப்ரை: காரமான உணவு பிரியர்களுக்கு சிறந்த தேர்வு…




சிந்தாமணி சிக்கன்
தேவையான பொருட்கள்:
- சிக்கன் – அரைகிலோ
- வெங்காயம் – 2
- பச்சை மிளகாய் 2
- கடுகு – 1 ஸ்பூன்
- சீரகம் – 1 ஸ்பூன்
- வர மிளகாய – 4 முதல் 5
- இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 ஸ்பூன்
- கறிவேப்பிலை – ஒரு கொத்து
- மிளகு தூள் – 1 ஸ்பூன்
- மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
- மஞ்சள் தூள் – சிறிதளவு
- உப்பு – தேவையான அளவு
- சோம்பு – சிறிதளவு
- பெருங்காயம் – சிறிதளவு
- கொத்தமல்லி – ஒரு கைப்பிடி அளவு
ALSO READ: பருவ கால மாற்றம்! சளி, இருமல் தொல்லையா..? பாதுகாக்கும் ஆட்டுக்கால் பாயா சூப்!
சிந்தாமணி சிக்கன் செய்வது எப்படி..?
- முதலில் கடையில் வாங்கி வந்த சிக்கனை மஞ்சள் மற்றும் உப்பு சேர்த்து ஓடும் தண்ணீரில் நன்றாக கழுவி எடுத்து கொள்ளவும். தொடர்ந்து, உங்களுக்கு தேவையான அளவில் சிக்கனை துண்டு துண்டுகளாக வெட்டி கொள்ளவும்
- அதன்பிறகு, அடி பிடிக்காத அளவில் தடிமனான கடாயை அடுப்பில் வைத்து சூடாக்கவும். அடுத்ததாக, கடாயில் சிறிது நெய் மற்றும் சிறிது எண்ணெய் சேர்த்து சூடானதும் கறிவேப்பியை போட்டு தாளிக்கவும். பின்னர், சிறிது கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயம் ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும்.
- இவை வதங்கியதும், நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும். பின்னர் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை பிரட்டவும்.
- இஞ்சி பூண்டு பேஸ்டின் பச்சை வாசனை போனவுடன் கழுவி வைத்துள்ள சிக்கனை சேர்த்து பிரட்டவும். இதன் தொடர்ச்சியாக, சிக்கன் நன்றாக அதாவது சுமார் 10 நிமிடங்கள் வரை வேகவிட்டு அவ்வபோது வதக்கவும்.
- சிக்கன் ஓரளவு வெந்தவுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து சுமார் இரண்டு நிமிடங்கள் வதக்கவும். பின்னர் சோம்பு தூள், மிளகு தூள், கரம் மசாலா சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
- தண்ணீர் சேர்த்து எண்ணெய் மேலே மிதக்கும் வரை காத்திருக்கவும். கடைசியாக கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான சிந்தாமணி சிக்கன் ரெடி. ப்ரை முறையில் சிக்கன் சாப்பிட விரும்புவோர் தண்ணீர் சேர்க்காமல் குறைந்த தீயில் வதக்கினால் போதுமானது.