Food Recipe: டாப் டக்கர் தந்தூரி சிக்கன்..! 30 நிமிடத்தில் ரெஸ்டாரன்ட் ஸ்டைல் ரெசிபி!
Authentic Tandoori Chicken: இந்த எளிய வழிமுறையைப் பின்பற்றி 30 நிமிடங்களில் சுவையான தந்தூரி சிக்கனை வீட்டிலேயே தயாரிக்கலாம். தயிர், இஞ்சி-பூண்டு விழுது, மசாலாப் பொருட்கள் சேர்த்து மரைனேட் செய்து, அடுப்பில் அல்லது கிரிலில் வேகவைக்க வேண்டும். அவ்வளவுதான் ருசியான தந்தூரி சிக்கன் ரெடி.

தந்தூரி சிக்கன்Image Source: Freepik
தென்னிந்தியாவிலும் சரி, வட இந்தியாவிலும் சரி தந்தூரி சிக்கன் (Tandoori Chicken) என்பது மிகவும் பிரபலமான சிக்கன் உணவாக விரும்பப்படுகிறது. ஹோட்டல்கள் முதல் பார்ட்டிகள் வரை மக்கள் அதிகம் விரும்பி ருசிக்கின்றனர். மசாலா (Indian Spices) பொருட்களால் நிரப்பப்பட்டு, உருகிய வெண்ணெயால் தடவப்பட்டு, கரியில் வேகவைக்கப்பட்ட தந்தூரி சிக்கன் அனைத்து அசைவ உணவு பிரியர்களுக்கும் ஒரு மாயாஜால விருந்தாகும். எங்களைப் போலவே தந்தூரி சிக்கனையும் நீங்கள் விரும்பினால், நீங்கள் தந்தூரி சிக்கனை முயற்சிக்கலாம். இதை 30 நிமிடங்களில் செய்வது எளிது, அதன்படி, வீட்டிலேயே செய்து அசத்தலாம்.
ALSO READ: வீட்டிலேயே மொறுமொறுப்பா ஏதாச்சும் சாப்பிடணுமா..? பார்பிக்யூ சிக்கன் ரெசிபி இதோ!
இதையும் படியுங்கள்

Food Recipe: அருமையான புதினா சிக்கன் டிக்கா செய்வது எப்படி? படிப்படியான செய்முறை இதோ!

Chicken Fry Recipe: பேச்சிலர்ஸூக்கு பெயர்போன ரெசிபி.. எளிமையாக சிக்கன் ஃப்ரை செய்வது எப்படி?

Food Recipe: வீட்டிலேயே மொறுமொறுப்பா ஏதாச்சும் சாப்பிடணுமா..? பார்பிக்யூ சிக்கன் ரெசிபி இதோ!

Food Recipe: மழைக்காலத்தில் காரசாரமா ஏதாச்சும் ருசிக்கணுமா..? செட்டிநாடு சிக்கன் ட்ரை பண்ணுங்க!
தந்தூரி சிக்கன் தேவையான பொருட்கள்:
- 1 கிலோ சிக்கன்
- 1 கப் தயிர்
- 2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு
- 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
- 1 தேக்கரண்டி மிளகாய் தூள் (அல்லது சுவைக்கேற்ப)
- 1 தேக்கரண்டி கொத்தமல்லி தூள்
- 1 தேக்கரண்டி சீரக தூள்
- ½ தேக்கரண்டி மஞ்சள்
- தூள் 1 தேக்கரண்டி கரம் மசாலா
- ½ தேக்கரண்டி மிளகு தூள்
- சிறிது எண்ணெய்
- கொத்தமல்லி இலைகள் (அலங்காரத்திற்கு)
- எலுமிச்சை துண்டுகள் (பரிமாறுவதற்கு)
- ருசிக்கேற்ப உப்பு
ALSO READ: அருமையான புதினா சிக்கன் டிக்கா செய்வது எப்படி? படிப்படியான செய்முறை இதோ!
தயாரிப்பு முறை:
- ஒரு பெரிய பாத்திரத்தில், தயிர், எலுமிச்சை சாறு, இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், கொத்தமல்லி தூள், சீரக தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா, கருப்பு மிளகு தூள் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்கவும். இந்தக் கலவையுடன் சிக்கன் துண்டுகளைச் சேர்த்து நன்கு கலக்கவும்.
- நன்றாக கலந்து வைத்துள்ள மசாலாப் பொருட்கள் சிக்கன் அடிவரை ஊடுருவிச் செல்லும் வரை ஊற வையுங்கள். இப்போது பாத்திரத்தை மூடி, குளிர்சாதன பெட்டியில் குறைந்தது 2 மணி நேரம் அல்லது இரவு முழுவதும் மரைனேட் செய்யவும். சிக்கன் நீண்ட நேரம் மரைனேட் செய்யப்பட்டால் சுவை நன்றாக இருக்கும்.
- அடுப்பை 200°C (400°F) க்கு முன்கூட்டியே சூடாக்கவும். பேக்கிங் தட்டில் அலுமினியத் தாளை விரித்து அதில், சிக்கன் துண்டுகளை ஒவ்வொன்றாக வரிசைப்படுத்தி லேசாக எண்ணெய் தேய்க்கவும். அப்படி இல்லையென்றால், கிரில் ரேக்கைப் பயன்படுத்தவும்.
- மரைனேட் செய்யப்பட்ட சிக்கன் துண்டுகளை தட்டு அல்லது ரேக்கில் அடுக்கி வைக்கவும். ஒன்றையொன்று தொடாதப்படி பார்த்து கொள்ளவும். மீதமுள்ள மசாலாப் பொருட்களை சிக்கன் துண்டுகளின் மீது தெளிக்கவும்.
- 25-30 நிமிடங்கள் அல்லது சிக்கன் வெந்து பொன்னிறமாகும் வரை அடுப்பில் வேக வைக்கவும். பாதியிலேயே திருப்பிப் போடவும்.
- அதேயே, நீங்கள் கிரில் செய்ய விரும்பினால் சிக்கன் துண்டுகளை நடுத்தர உயர் வெப்பத்தில் வைத்து, ஒவ்வொரு பக்கத்திலும் 6-8 நிமிடங்கள் வரை கிரில் செய்யவும்.
- தந்தூரி சிக்கன் தயாரானதும், கொத்தமல்லி இலைகளால் அலங்கரித்து, எலுமிச்சை துண்டுகளுடன் சூடாகப் பரிமாறவும். இந்த வழியில் நீங்கள் வீட்டிலேயே சுவையான தந்தூரி சிக்கனை செய்யலாம்.