AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Food Recipe: ஜில் கிளைமேட்டில் ஹாட்டா சாப்பிட ஆசையா..? 10 நிமிடத்தில் தயாராகும் ப்ரோக்கோலி சூப் ரெசிபி இதோ!

Broccoli Soup Recipe: ப்ரோக்கோலியில் உள்ள வைட்டமின் கே மற்றும் கால்சியம் நிறைந்திருந்தால், எலும்பு ஆரோக்கியத்தை (Bone Strength) பராமரிக்கும். மேலும், இதில் ஆண்டி - ஆக்ஸிடண்ட்கலும், அழற்ஜி எதிர்ப்பு பண்புகளும் நிறைந்துள்ளன. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், சரியான செரிமானத்தை பராமரிக்கவும் உதவும்.

Food Recipe: ஜில் கிளைமேட்டில் ஹாட்டா சாப்பிட ஆசையா..? 10 நிமிடத்தில் தயாராகும் ப்ரோக்கோலி சூப் ரெசிபி இதோ!
ப்ரோக்கோலி சூப் Image Source: Freepik
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 16 Sep 2025 17:49 PM IST

மாறிவரும் ஜில்லான வானிலைக்கு ஏதாவது ஒன்றை சூடாக சாப்பிட வேண்டும் என்று நினைப்போம். அந்தவகையில், ஆரோக்கியமான சூப் ஒன்றை தேடினால், ப்ரோக்கோலி சூப் உங்களுக்கு மிக சிறந்த ஒன்றாகும். ப்ரோக்கோலி (Broccoli) காலிஃபிளவர் போல இருந்தாலும், இதன் நிறம் பச்சை நிறமாக இருக்கும். இதில் நல்ல அளவு வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. ப்ரோக்கோலியில் உள்ள வைட்டமின் கே மற்றும் கால்சியம் நிறைந்திருந்தால், எலும்பு ஆரோக்கியத்தை (Bone Strength) பராமரிக்கும். மேலும், இதில் ஆண்டி – ஆக்ஸிடண்ட்கலும், அழற்ஜி எதிர்ப்பு பண்புகளும் நிறைந்துள்ளன. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், சரியான செரிமானத்தை பராமரிக்கவும், சருமத்தை ஆரோக்கியமாகவும் மாற்ற உதவுகிறது. அதன்படி, ப்ரோக்கோலி சூப்பை எப்படி தயாரிக்கலாம் என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.

ALSO READ: 10 நிமிடங்களில் செய்யக்கூடிய சூப்பர் டிஷ்! ஈஸியான சென்னா கீரை நெய் சாதம் ரெசிபி இதோ!

ப்ரோக்கோலி சூப்:

தேவையான பொருட்கள்:

ப்ரோக்கோலி – 300 கிராம்
தக்காளி – 3
உருளைக்கிழங்கு – 2
மிளகு – 8
கிராம்பு – 4
இஞ்சி – 1 அங்குல துண்டு
இலவங்கப்பட்டை – 1
வெண்ணெய் – 1 1/2 ஸ்பூன்
கொத்தமல்லி – கைப்பிடி அளவு
உப்பு – தேவையான அளவு

ALSO READ: மென்மையான சப்பாத்தி மேக்கிங் டிப்ஸ்.. பனீர் ஸ்டஃப்டு பரோட்டா ரெசிபியையும் தெரிஞ்சுக்கோங்க!

ப்ரொக்கோலி சூப் செய்வது எப்படி..?

  1. ப்ரோக்கோலியை துண்டுகளாக நறுக்கி, தண்ணீர் ஊற்றி 5 நிமிடங்கள் வேகவைக்கவும். இதனுடன், தக்காளி மற்றும் உருளைக்கிழங்கை நீளமான பெரிய துண்டுகளாக நறுக்கி, இஞ்சியை உரித்து சிறிய துண்டுகளாக வெட்டவும்.
  2. இப்போது ஒரு பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் வெண்ணெயை போட்டு சூடாக்கவும். சூடான வெண்ணெயில் மிளகு, கிராம்பு மற்றும் இலவங்கப்பட்டை சேர்த்து லேசாக வறுக்கவும்.
  3. இதனுடன் தக்காளி, உருளைக்கிழங்கு மற்றும் ப்ரோக்கோலி துண்டுகளை போட்டு பிரட்டவும். சிறிது தண்ணீர் ஊற்றி மூடி போடவும்.
  4. சுமார் ஒரு 5 நிமிடங்களுக்கு பிறகு, மூடியை திறந்து உருளைக்கிழங்கு வெந்துவிட்டதா என்பதை சரிபார்க்கவும். உருளை வேகவில்லை எனில், 3 நிமிடங்கள் வேகவிடவும்.
  5. அடுத்ததாக, அடுப்பை அணைத்து தயாரிக்கப்பட்ட காய்கரிகளை மிக்ஸியில் போட்டு அரைக்கவும். அரைத்த மசாலா ப்ரோக்கோலியை வாணலியில் போட்டு, இப்போது சுவைக்கேற்ப 4 கப் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து 5 நிமிடங்கள் வேக விடவும்.
  6. அவ்வளவுதான், கடைசியாக ஒரு பரிமாறும் கப்பில் சூப்பை ஊற்றி, நறுக்கிய பச்சை கொத்தமல்லி இலைகள் மற்றும் வெண்ணெய் அல்லது கிரீம் சேர்த்து பரிமாறினால் சுவையான ப்ரோக்கோலி சூப் தயார்.

ப்ரோக்கோலியின் நன்மைகள்:

ப்ரோக்கோலியில் உள்ள சல்ஃபோராபேன் ஒரு சக்திவாய்ந்த கலவை ஆகும், இது புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்க உதவும். ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியின் படி, சல்ஃபோராபேன் உடலில் உள்ள புற்றுநோய் உண்டாக்கும் நொதிகளை செயலிழக்கச் செய்து டிஎன்ஏ சேதமடைவதைத் தடுக்கிறது. ப்ரோக்கோலி நுரையீரல், மார்பகம், புரோஸ்டேட் மற்றும் பெருங்குடல் புற்றுநோயின் அபாயத்தைக் குறைப்பதில் குறிப்பாக பயனுள்ளதாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

ப்ரோக்கோலி இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இதில் உள்ள பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் நார்ச்சத்து இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. அமெரிக்காவின் தேசிய இதயம், நுரையீரல் மற்றும் இரத்த நிறுவனத்தின் கூற்றுப்படி, ப்ரோக்கோலி போன்ற அதிக நார்ச்சத்துள்ள உணவு இதய நோய் அபாயத்தை 20-25% குறைக்கும்.

Follow Us