Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Food Recipe: மென்மையான சப்பாத்தி மேக்கிங் டிப்ஸ்.. பனீர் ஸ்டஃப்டு பரோட்டா ரெசிபியையும் தெரிஞ்சுக்கோங்க!

Wheat Flour For Soft Chapatis: முதலில் மாவு மற்றும் தண்ணீரை சம அளவில் எடுத்து கொள்ள வேண்டும். பலரும் முதலில் மாவுடன் நேரடியாக தண்ணீரை சேர்த்து பிசைய தொடங்குகிறார்கள். இது சரியான முறையல்ல. மென்மையான சப்பாத்திகளுக்கு எப்போதும் கோதுமை மாவில் சிறிது சிறிதாக தண்ணீரை சேர்த்து, மாவை மெதுவாக பிசைவது முக்கியம்.

Food Recipe: மென்மையான சப்பாத்தி மேக்கிங் டிப்ஸ்.. பனீர் ஸ்டஃப்டு பரோட்டா ரெசிபியையும் தெரிஞ்சுக்கோங்க!
சப்பாத்தி - பனீர் ஸ்டப்டு பரோட்டாImage Source: Freepik
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 15 Sep 2025 21:08 PM IST

சப்பாத்தி (Chapati) செய்வது கடினமான காரியம் என்று பலரும் நினைக்கிறார்கள். அதற்கு காரணம், எல்லோராலும் பஞ்சுபோன்ற மற்றும் மென்மையான சப்பாத்திகளை செய்ய முடியாது. மென்மையான சப்பாத்திகளை தயாரிக்க, சிலர் கோதுமை மாவை (Wheat flour) தயாரிக்க எண்ணெய் அல்லது நெய் மற்றும் தண்ணீர் சேர்த்து அரை மணிநேரம் பிசைவார்கள். சிலர் தண்ணீர் மற்றும் மாவை மட்டுமே பயன்படுத்துகிறார்கள். இந்தநிலையில், மென்மையான மற்றும் பஞ்சுபோன்ற சப்பாத்திகளை எப்படி செய்வது என்ற தந்திரத்தை இங்கே தெரிந்து கொள்வோம்.

மென்மையான சப்பாத்திக்கு மாவு பிசையும் முறை:

  • முதலில் மாவு மற்றும் தண்ணீரை சம அளவில் எடுத்து கொள்ள வேண்டும். பலரும் முதலில் மாவுடன் நேரடியாக தண்ணீரை சேர்த்து பிசைய தொடங்குகிறார்கள். இது சரியான முறையல்ல.
  • மென்மையான சப்பாத்திகளுக்கு எப்போதும் கோதுமை மாவில் சிறிது சிறிதாக தண்ணீரை சேர்த்து, மாவை மெதுவாக பிசைந்து கொண்டே இருங்கள். தண்ணீரை மெதுவாக பிசையும் போதுதான் கட்டி சேராமல் இருக்கும்.
  • கோதுமை மாவு பிசையும்போது அனைத்து தண்ணீரையும் ஒரேயடியாக சேர்க்கக்கூடாது. இது மாவு பிசைவதை தாமதமாக்கும். மேலும், இது சரியான முறையில் சப்பாத்தி மாவு பிசைவதை தடுக்கும்.

ALSO READ: கொங்கு நாடு ஸ்டைலில் காரசார ரெசிபி.. படிப்படியான சிக்கன் சிந்தாமணி செய்முறை!

  • மாவு கெட்டியாகும்வரை மெல்ல பிசைத்து, 4க்கு 5 முறை நன்றாக ஒரு தட்டில் போட்டு அடிக்கவும். அப்போதுதான், இது மென்மையான தன்மைக்கு தரும்.
  • மாவை குளிர்சாதன பெட்டியில் வைக்கும்போது, அதை காற்று புகாத கொள்கலனில் வைத்து மேலே 1/4 டீஸ்பூன் எண்ணெயை தடவவும். இதை செய்வதன்மூலம் மாவு பிரஷாக இருக்கும். மேலும், மாவு உடைந்து கெட்டியாகுவதை தடுக்கும்.
  • எண்ணெய்க்கு பதிலாக நெய் தடவினால், இதனால் தயாரிக்கப்படும் சப்பாத்திகள் நீண்ட நேரம் மென்மையாக வைக்கும்.

ALSO READ: சிறுவர்களுக்கான சூப்பரான ஆரோக்கிய உணவு.. ஈஸியான சிக்கன் ரோல் மேக்கிங் டிப்ஸ் இதோ!

பனீர் ஸ்டஃப்டு பரோட்டா செய்வது எப்படி..?

பனீர் ஸ்டஃப்டு பரோட்டோ செய்வதற்கு முதலில் சிறிது கோதுமை மாவு, தேவையான அளவு உப்பு, சிறிது எண்ணெய் என கலந்து பிசைந்து கொள்ளுங்கள். வழக்கமான இடைவெளியில் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து கொண்ட மாவை பிசையுங்கள்.

மாவு ஒட்டும் தன்மை கொண்டதாக மாறினால், மாவு கலவையில் சிறிது கோதுமை மாவு மற்றும் நெய்யை சேர்க்கவும். அது தயாரானதும், பரோட்டாக்களை தயாரிப்பதற்கு முன், சுமார் 15-20 நிமிடங்கள் ஈரமான துணியால் மூடி வைக்கவும்.

ஒரு கடாயில் சிறிது எண்ணெயை சூடாக்கி, துருவிய இஞ்சியை வதக்கவும். பின்னர். பனீர் சேர்த்து 5 நிமிடங்கள் மீண்டும் வதக்கவும். இப்போது, தேவையான அளவ்வு உப்பு தூவி கலந்து மஞ்சள் தூள், சிவப்பு மிளகாய் தூள், கரம் மசாலா போன்றவற்றை நன்கு கலக்கவும். இதை சப்பாத்திக்குள் ஸ்டப் செய்து சுட்டால் சுவையான பனீர் ஸ்டஃப்டு பரோட்டா ரெடி.