Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Food Recipe: 10 நிமிடங்களில் செய்யக்கூடிய சூப்பர் டிஷ்! ஈஸியான சென்னா கீரை நெய் சாதம் ரெசிபி இதோ!

Spinach Ghee Rice: 10 நிமிடங்களில் சுவையான மற்றும் ஆரோக்கியமான சென்னா கீரை நெய் சாதம் செய்வது எப்படி என்பதை விளக்குகிறோம். முதலில், சுண்டலை ஊற வைத்து, பின்னர் கடுகு, சீரகம், வெங்காயம், கீரை ஆகியவற்றை வதக்கி, அரிசி, சுண்டல் சேர்த்து குக்கரில் வேகவைக்க வேண்டும்.

Food Recipe: 10 நிமிடங்களில் செய்யக்கூடிய சூப்பர் டிஷ்! ஈஸியான சென்னா கீரை நெய் சாதம் ரெசிபி இதோ!
சென்னா கீரை நெய் சாதம் Image Source: Freepik
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 30 Aug 2025 20:28 PM

இன்றைய காலத்தில் கிராமங்களை தவிர, பெரும்பாலும் நகரங்களில் கீரைகள் பயன்படுத்துவது கிடையாது. குறைந்தது வாரத்திற்கு ஒரு முறை அல்லது 2 முறை கீரை சார்ந்த உணவுகளை எடுத்துகொள்ள வேண்டும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். அந்தவகையில், உங்களுக்கு இன்று கீரை சென்னா நெய் (Spinach Ghee Rice) சாதத்திற்கான சூப்பர் ரெசிபியை சொல்லி தர போகிறோம். இதை வெறும் 10 நிமிடங்களில் செய்து முடித்து விடலாம். கீரை நெய் சாதம் சுவை மற்றும் ஆரோக்கியத்தை இணைக்கும் ஒரு சரியான உணவாகும். இது கீரையின் ஊட்டச்சத்துக்களையும் (Nutrients) நெய்யின் ஆற்றலையும் வழங்குகிறது. கீரை மற்றும் நெய் இரண்டும் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இவற்றை இணைப்பது ஊட்டச்சத்துக்களை இன்னும் அதிகரிக்கிறது. அந்தவகையில், கீரை சென்னா நெய் சாதம் எப்படி செய்வது என்று தெரிந்து கொள்வோம்.

ALSO READ: சுவையான பாகிஸ்தான் மட்டன் ஹலீம்.. வீட்டிலேயே எளிதாக செய்வது எப்படி?

கீரை சென்னா நெய் சாதம்:

தேவையான பொருட்கள்

  • கீரை – 1 கட்டு
  • சுண்டல் – 1 கப்
  • கடுகு – 1 ஸ்பூன்
  • சீரகம் – 1 ஸ்பூன்
  • பச்சை மிளகாய் – 2 முதல் 4
  • வெங்காயம் – 2
  • உப்பு – தேவையான அளவு
  • மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்
  • மிளகுத்தூள் – 1 ஸ்பூன்

ALSO READ: காரசாரமான டாம் யம் பிரான் சூப்.. இந்த சுவையான தாய் ரெசிபியை ருசித்து பாருங்க..!

சென்னா நெய் சாதம் செய்வது எப்படி..?

  1. முதலில் 1 கப் அளவிலான வெள்ளை சுண்டலை இரவு முழுவதும் நன்றாக ஊற வைக்கவும். பின்னர், 1 கப் அரிசியை கழுவி, தண்ணீர் ஊற்றி அலசி ஊற வைத்து கொள்ளவும்.
  2. அடுத்ததாக ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் போதுமான எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி சூடாக்கி, சிறிது கடுகு, சீரகம், சிறுது மிளகுத்தூள், காரத்திற்கு தேவையான பச்சை மிளகாய், இறுதியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  3. வெங்காயம் சிறிது வெந்து பொன்னிறமாக மாறியதும், இஞ்சி – பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கவும்.
  4. பின்னர் இரவு முழுவதும் ஊறவைத்த 1 கப் வெள்ளை சுண்டல், 1 கொத்து மெல்லியதாக நறுக்கிய கீரை, சுவைக்கு ஏற்ப உப்பு, சிறிது மஞ்சள் சேர்த்து, கீரையின் பச்சை வாசனை போகும் வரை கலக்கவும்.
  5. பின்னர் அதில் 2 கிளாஸ் தண்ணீரை ஊற்றி கொதிக்க வைக்கவும். தண்ணீர் கொதித்த பிறகு, 1 கிளாஸ் ஊறவைத்த அரிசியைச் சேர்த்து, மூடி வைத்து இரண்டு விசில் வரும் வரை சமைக்கவும். பின்னர் மூடியை அகற்றினால், உங்கள் வாயில் நீர் ஊற வைக்கும் சென்னா நெய் சாதம் ரெடி.