Flour Storage: கோதுமை மாவு எவ்வளவு நாட்கள் ப்ரஷாக இருக்கும்? கெட்டுப்போன மாவை எப்படி அடையாளம் காண்பது?
Flour Preservation: பிசைந்த மாவு 5-6 மணி நேரமும், உலர்ந்த மாவு 1-2 வாரங்களும் பாதுகாப்பாக இருக்கும். ஈரப்பதம், வெப்பம், மற்றும் காற்று புகாத கொள்கலன் பயன்பாடு முக்கியம். கெட்டுப்போன மாவை உட்கொள்வதால் வயிற்று வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படும்.

ஒவ்வொரு வீட்டிலும் மாவு (Flour) பிசைந்து சப்பாத்தி அல்லது பூரி செய்வது வழக்கமான ஒரு விசயம். ஆனால் சில நேரங்களில் மீதமிருந்த மாவு அல்லது நேரமின்மை காரணமாக, சிலர் பிசைந்த மாவை பிரிட்ஜில் (Refrigerator) வைக்கிறார்கள். நினைத்த நேரமெல்லாம் அவற்றை எடுத்து சப்பாத்தி சுட்டு கொள்கிறார்கள். ஆனால் இந்த மாவு எவ்வளவு நாட்கள் ப்ரஷாக இருக்கும் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? பிசைந்த மாவாக இருந்தாலும் சரி அல்லது உலர்ந்ததாக இருந்தாலும் சரி, இவற்றை தவறாக ஸ்டோர் செய்து வைத்தால் விரைவாக கெட்டுவிடும். கோதுமை மாவின் புத்துணர்ச்சி கெடுவது உணவின் சுவையை மட்டுமல்ல, முழு குடும்பத்தின் ஆரோக்கியத்தையும் பாதிக்க செய்யும். எனவே மாவு எத்தனை மணி நேரத்தில் கெட்டுவிடும் என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.
மாவை எப்படி ஸ்டோர் செய்வது..?
முதலில் ஈரப்பதமும், வெப்பமும் எந்தவகையான மாவிற்கு முதல் எதிரி. நீங்கள் ஒரு சாதாரண டப்பாகளிலோ அல்லது பிளாஸ்டிக் பையிலோ அதிக நேரம் அடைத்து வைத்திருந்தால், அது பூஞ்சை மற்றும் பூஞ்சை காளான் வர உதவியை தரும். எனவே, எப்போதும் மாவை காற்று புகாத கொள்கலனில் மற்றும் குளிர்ந்த, உலர்ந்த இடத்தில் ஸ்டோர் செய்து வைப்பது முக்கியம்.
ALSO READ: வாழைப்பழம் விரைவாக கெட்டுப்போகிறதா? இந்த டிப்ஸை டிரை பண்ணுங்க




மாவு கெட்டுப் போக எவ்வளவு நேரம் ஆகும்?
அரைத்து வைக்கப்பட்டுள்ள கோதுமை மாவு மூடி வைக்காமல் வைத்திருந்தால் 1 முதல் 2 வாரங்களில் கெட்டுப்போகத் தொடங்கும்.
பிசைந்த மாவை குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்தால் 5 முதல் 6 மணி நேரத்திற்குள் பயன்படுத்த வேண்டும். இருப்பினும், பிசைந்த பிறகு, மாவை அறை வெப்பநிலையில் 2 முதல் 3 மணி நேரம் மட்டுமே பாதுகாப்பாக வைத்திருக்க முடியும்.
பாக்டீரியா வேகமாகப் பரவுகிறது:
கோடை மற்றும் மழைக்காலங்களில் ஈரப்பதம் மற்றும் பாக்டீரியா வேகமாகப் பரவுவதால், அதன் தன்மை கெட்டுப்போக தொடங்கும்.
கெட்டுப்போன மாவை எப்படி அடையாளம் காண்பது?
மாவின் நிறத்தைப் பார்த்து மட்டும் அது கெட்டதா என்று சொல்ல முடியாது. விசித்திரமான அல்லது புளிப்பு வாசனை வெளியேறுதல், சிறிய பூச்சிகள் அல்லது பூஞ்சை தோற்றம் உண்டாகுதல், சுவையில் மாற்றம், ஒட்டும் தன்மை அல்லது கெட்டியாக மாறினால் இவை அனைத்தும் கெட்டுப்போன மாவின் அடையாளங்கள் ஆகும். இந்த அறிகுறிகள் ஏதேனும் தோன்றினால், உடனடியாக மாவை தூக்கி எறியுங்கள்.
ALSO READ: முட்டை நல்லதா? கெட்டுப்போனதா? இந்த முறையில் ஈஸியா கண்டுபிடிக்கலாம்!
மாவை நீண்ட நேரம் புதியதாக வைத்திருப்பது எப்படி..?
- பழைய மாவு தீரும் வரை புதிய மாவு வாங்க வேண்டாம், இல்லையெனில் உலர்ந்த மாவு கூட கெட்டுவிடும்.
- ஈரமான கைகள் அல்லது பாத்திரங்களால் மாவை ஒருபோதும் தொடாதீர்கள்.
- கோடை காலத்தில் மாவை பிரிட்ஜில் அல்லது குளிர்ந்த இடத்திலோ வைக்கலாம்.
கெட்டுப்போன மாவில் இருந்து தயாரிக்கப்படும் சப்பாத்தி அல்லது பூரியை சாப்பிடுவதால் வயிற்று வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் ஃபுட் பாய்சன் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் இதனால் அதிகம் பாதிக்கப்படலாம். எனவே, கோதுமை மாவு பிரஷாக இருக்கிறதா என்பதை சோதித்து பயன்படுத்தவும்.