Refrigerator Storage: பூண்டு முதல் குங்குமப்பூ வரை.. ஃபிரிட்ஜில் ஏன் வைக்க கூடாது தெரியுமா?
Foods to NEVER Refrigerate: பலரும் குளிர்சாதனப் பெட்டியில் பூண்டு, குங்குமப்பூ, மசாலாப் பொருட்கள் மற்றும் ட்ரை ப்ரூட்ஸ் போன்றவற்றை வைக்கிறார்கள். ஆனால், இவை குளிர்சாதனப் பெட்டியில் வைப்பதால் அவற்றின் சுவை, நறுமணம் மற்றும் ஊட்டச்சத்துக்கள் பாதிக்கப்படும். எனவே, இவற்றை வெளியில் சேமிப்பது நல்லது.

கிட்டத்தட்ட ஒவ்வொரு வீட்டிலும் ஃபிரிட்ஜ் (Refrigerate) பயன்படுத்தப்படுகிறது. மேலும், இது அவசியமானதும் கூட. ஃபிரிட்ஜ் என்று அழைக்கப்படும் குளிர்சாதனப்பெட்டி மட்டும் இல்லையென்றால், பலரது வீட்டில் சமைத்த மீதமுள்ள உணவுகளை வெளியேதான் போட வேண்டிய சூழ்நிலை உண்டாகும். மேலும், குளிர்ச்சிக்காக தண்ணீர் பாட்டில்களில் தொடங்கி, ஜூஸ், ஐஸ்க்ரீம் (Ice Cream) என பல வகையாக பொருட்களையும் வைப்போம். இப்படி பார்த்து பார்த்து பயன்படுத்தும் ஃபிரிட்ஜில், ஒரு சில அறியாத நாம் காணும் அனைத்தையும் உள்ளே வைக்கிறோம். இவற்றை வைப்பது பின்நாளில் பலனை தராது. அதன்படி, குளிர்சாதன பெட்டியில் வைக்கக்கூடாத சில அறிய பொருட்களை பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்.
பூண்டு:
பெரும்பாலான மக்கள் பூண்டை குளிர்சாதன பெட்டியில் வைக்கிறார்கள். இது முற்றிலும் தவறு. பூண்டை குளிர்சாதன பெட்டியில் வைப்பதற்கு பதிலாக திறந்தவெளியில் சேமிக்க பரிந்துரைக்கின்றனர். குளிர்சாதன பெட்டியில் பூண்டை வைப்பதால் அது முளைக்க தொடங்கும். மேலும், இது சமைக்க பயன்படாத முடியாத அளவிற்கு சுவையை மாற்றிவிடும். பூண்டை உரித்து குளிர்சாதன பெட்டியில் வைப்பதால் அதன் மருத்துவ குணங்கள் இழக்கப்படுகின்றன. அதேபோல், பூண்டை பிளாஸ்டிக் பைகளிலும் வைக்காதீர்கள். பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக காகிதம் அல்லது துணி பைகளில் வைக்கவும்.
ALSO READ: இந்த 5 பொருட்களை ஃபிரிட்ஜில் வைக்காதீங்க! காரணம் இதுதான்!




குங்குமப்பூ:
குளிர்சாதன பெட்டியில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும். இது குங்குமப்பூ இழைகளை மென்மையாகவும் ஒட்டும் தன்மையுடனும் ஆக்குகிறது. சில நேரங்களில் குங்குமப்பூவும் காய்ந்துவிடும். இந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும், குங்குமப்பூவின் இயற்கையான சுவை மற்றும் நறுமணத்தை குறைக்க செய்யும். இது மட்டுமல்லாமல், குளிர்சாதன பெட்டிக்குள் எரியும் லைட்டின் வெளிச்சமும் குங்குமப்பூவை மங்கச் செய்கிறது.
மசாலா பொருட்கள்:
மசாலாப் பொருட்களையும் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கக்கூடாது. குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருப்பது அவற்றின் சுவை, நறுமணம் மற்றும் பண்புகளைப் பாதிக்கிறது. முழு மசாலாப் பொருட்களும் குளிர்சாதனப் பெட்டியிலிருந்து ஈரப்பதத்தை உறிஞ்சிவிடும். இது அவற்றின் இயற்கையான சுவையைக் கெடுக்கும்.
ALSO READ: ஃபிரிட்ஜில் வைக்கக்கூடாத 5 பழங்கள்! அதுவும் கெட்டு நம் ஆரோக்கியத்தை கெடுக்கும்..!
ட்ரை ப்ரூட்ஸ்:
பல வீடுகளில் குளிர்சாதன பெட்டியில் முந்திரி, திராட்சை, பாதாம் மற்றும் வால்நட் ஆகியவற்றை பிளாஸ்டிக் அல்லது கண்ணாடி ஜார்களில் அடைத்து வைக்கிறார். இவ்வாறு செய்வது அவற்றின் இயற்கையான சர்க்கரை உள்ளடக்கத்தையும், சுவையை பாதிக்கும். மேலும், இது பூஞ்சை அபாயத்தையும் அதிகரிக்கும். இது மட்டுமின்றி, அவற்றின் இயற்கை எண்ணெய்களையும் குறைக்கும்.