Fruit Storage: ஃபிரிட்ஜில் வைக்கக்கூடாத 5 பழங்கள்! அதுவும் கெட்டு நம் ஆரோக்கியத்தை கெடுக்கும்..!
Fruit Preservation: பலரும் பழங்களை நீண்ட நாட்கள் வைக்க குளிர்சாதன பெட்டி பயன்படுத்துகிறார்கள். ஆனால், ஆப்பிள், வாழைப்பழம், அவகேடோ, மாம்பழம், லிச்சி போன்ற பழங்களை குளிர்சாதன பெட்டியில் வைப்பது அவற்றின் ஊட்டச்சத்து மதிப்பையும் சுவையையும் குறைக்கிறது. சில பழங்கள் குளிர்ச்சியில் விரைவாக கெட்டுப்போகும்.

உடலை ஆரோக்கியமாக வைக்க தினந்தோறும் பழங்களை (Fruits) சாப்பிடுவது நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. ஆனால் பழங்கள் தொடர்பாக நாம் சில தவறுகளைச் செய்கிறோம். அவை, நமது ஆரோக்கியத்திற்கு குறைவான நன்மை பயக்கும், அப்படி இல்லையென்றால் அதிக தீங்கு விளைவிக்கும். இந்த தவறுகளில் ஒன்று பழங்களை குளிர்சாதன பெட்டியில் வைத்திருப்பது. சில பழங்களை குளிர்சாதன பெட்டியில் (Refrigerate) வைத்து பின்னர் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். பழங்கள் சீக்கிரம் கெட்டுப்போகாமல் இருக்க நாம் அடிக்கடி குளிர்சாதன பெட்டியில் வைப்போம். ஆனால் இந்த விதி எல்லா பழங்களுக்கும் பொருந்தாது.
பெரும்பாலான மக்கள் பழங்களை குளிர்சாதன பெட்டியில் வைத்திருப்பது நீண்ட காலம் கெட்டுப்போகாமல் இருக்கும் என்று நினைக்கிறார்கள். குளிர்சாதன பெட்டியில் வைக்கும் சில பழங்களின் ஊட்டச்சத்து மதிப்பு குறைத்து, அவற்றின் சுவையும் மோசமாக்கும். இது மட்டுமல்லாமல், இந்த பழங்களை குளிர்சாதன பெட்டியில் பல முறை வைத்திருப்பது அவை விரைவாக கெட்டுப்போகச் செய்து, உங்கள் ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கும். அதன்படி, எந்த பழங்களை குளிர்சாதன பெட்டியில் வைக்கக்கூடாது என்பதைக் கண்டுபிடிப்போம்?
ALSO READ: இந்த 5 பொருட்களை ஃபிரிட்ஜில் வைக்காதீங்க! காரணம் இதுதான்!




ஆப்பிள்
ஆப்பிள்களை அதிக நாட்கள் குளிர்சாதன பெட்டியில் வைக்கக்கூடாது. குளிர்சாதன பெட்டியில் ஆப்பிள்களை வைத்திருப்பது தீங்கு விளைவிக்கும். ஆப்பிள்களில் உள்ள இயற்கை நொதிகள் அவற்றை பழுக்க செய்யும். குளிர்சாதன பெட்டியில் அதிக நேரம் வைத்திருப்பது அவை அதிகமாக பழுக்க செய்து, அவற்றின் சுவை மற்றும் அமைப்பைக் கெடுக்கும்.
வாழைப் பழம்
வாழைப்பழங்கள் குளிர்சாதன பெட்டியில் வைக்கக்கூடாத ஒரு பழ வகையாகும். குளிர்சாதன பெட்டியில் வாழைப்பழங்களை வைப்பதால், அவை வேகமாக கருப்பாக மாற தொடங்கும். இவற்றில் உள்ள எத்திலீன் வாயு அவற்றின் அருகில் வைக்கப்படும் மற்ற பழங்களையும் கெடுப்போக செய்யும். எனவே, வாழைப்பழங்களை சாதாரண அறை வெப்பநிலையில் வைத்திருப்பதே சரியான முறையாகும்.
அவகேடோ
அவகேடோ பழங்களை குளிர்சாதன பெட்டியில் வைப்பதை தவிருங்கள். ப்ரஸான அவகேடோ பழங்களை குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்தால், இசை சாதாரண நாட்களில் கெட்டுபோகும் நேரத்தை விட வேகமாக கெட்டுவிடும். குளிர்சாதன பெட்டியில் வைத்திருப்பது அவகேடோ பழுக்க வைப்பதைத் தடுக்கிறது. வெளியில் வைத்திருப்பது இயற்கையாகவே அவற்றை பழுக்க வைத்து உண்ணக்கூடியதாக மாற்றும். இது அவற்றின் ஊட்டச்சத்துக்களைப் பாதுகாக்கவும் உதவுகிறது.
மாம்பழம்
மாம்பழங்களை ஒருபோதும் குளிர்சாதன பெட்டியில் வைக்கக்கூடாது. குளிர்சாதன பெட்டியில் மாம்பழங்களை வைப்பது அவற்றின் ஆக்ஸிஜனேற்றிகளைக் குறைக்கிறது. இதன் விளைவாக, இவற்றின் ஊட்டச்சத்துக்கள் குறையத் தொடங்குகின்றன. மேலும் இவற்றின் சுவையும் கெடுகிறது.
ALSO READ: வெங்காயம் சீக்கிரம் கெட்டுவிடுகிறதா? இப்படி செய்வதால் அது ஃபிரெஷாக இருக்கும்!
லிச்சி
லிச்சி மிகவும் மென்மையான மற்றும் ஜூசியான பழமாகும். இதை குளிர்சாதன பெட்டியில் வைத்திருப்பது அதன் உட்புறத்தை கெடுத்து அதன் சுவையை கெடுக்கும். எனவே முலாம் பழம், லிச்சி உள்ளிட்ட மேலே குறிப்பிட்டுள்ள பழங்களை குளிர்சாதன பெட்டியில் வைப்பது சிறந்தது கிடையாது. இதுபோன்ற பழங்களை சாதாரண வெப்பநிலையில் வைப்பது, அவற்றின் ஊட்டச்சத்து மதிப்பைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும்.